http://i49.tinypic.com/16jeg08.jpg
Printable View
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
கோவை நகரில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் தாழம்பூ திரைபடத்தின் போஸ்டர்கள் பதிவுகள் அருமை .
1965- வெளியான இந்த படம் சுமாரான வெற்றி பெற்றது .பின்னர் தொடர்ந்து மறு வெளியீடுகளில் 48 ஆண்டுகளாக தொடர்ந்து நகரம் -கிராமம் போன்றஇடங்களில் அவ்வப்போது ஓடி வருவது சாதனைதான் .
மக்கள் திலகத்தின் சுமாரான வெற்றி படங்கள் .1967-1972
அன்னமிட்ட கை
ஒருதாய் மக்கள்
தலைவன்
காதல் வாகனம்
தேர் திருவிழா
புதிய பூமி
கணவன்
அரசகட்டளை
தாய்க்கு தலைமகன்
தொடர்ந்து தமிழ் நாட்டில் பல ஆண்டுகள் எல்லா இடங்களிலும் வெளியாகி படங்கள் ஓடாத இடமே இல்லை என்ற பெயர் பெற்ற படங்கள் இவை .
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்ஜியத்தின் பெருமைகளை தொகுத்து கவிதையாக தொகுத்துள்ள திரு பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி .
அவரது கவிதை - இனைய தளத்திலிருந்து
மெல்லிசை மன்னரே!
நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் இல்லை
வாலிபன் சுற்றும் உலகம்!
என் போன்றவர்கள்
வாலிப வயதில் சுற்றி வந்தது
உங்கள் இசையைத்தானே?
குமரிப்பெண்ணுக்காகக்
காத்திருந்த கண்கள் அல்ல
எங்களுடையவை.
குமரிக் கோட்டத்தைப்
பார்த்தால் பசி தீரும்
என்றிருந்த இளைஞர்களிடையே,
உங்கள் இசையைக்
கேட்டால்தான் பசி தீரும் என்று
தவம் இருந்தவர்கள் நாங்கள்.
உங்கள் இசையிலேயே நாங்கள்
சொர்க்கம் கண்டதால்,
எங்களுக்குக்
காதலிக்க நேரமில்லை.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்று இருந்து விட்டோம்.
அன்னையும் பிதாவும்
காட்டிய வழியிலேயே சென்றது
எங்கள் வாழ்க்கைப்படகு.
நம் நாட்டின் தவப்புதல்வரே!
நீங்கள் பிறந்த இடம் கேரளமாக இருந்தாலும்
நீங்கள்
எங்க ஊர் ராஜா
எங்க வீட்டுப் பிள்ளை.
மெல்லிசை
மன்னவன் வந்தானடி
என்று நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம்.
பாலும் பழமும் கொடுத்துப்
பிள்ளையை வளர்ப்பார் சிலர்.
ஆனால் உங்கள் தெய்வத்தாய்
உங்களைப்
பிள்ளையோ பிள்ளை
என்று கருதித்
தேனும் பாலும் கொடுத்து
வளர்த்திருப்பார்கள் போலும்!
அதனால்தான்,
நினைத்தாலே இனிக்கும்
சுகமான ராகங்களைக்
கர்ணன் போல்
வாரி வழங்கி வருகிறீர்கள் நீங்கள்!
கேட்டதையெல்லாம் கொடுக்கும்
மரம் ஒன்று உண்டு
விண்ணுலகில்.
அதன் பெயர் கற்பகம்.
ஆனால் நீங்களோ
நாங்கள் கேளாமலே
அள்ளித்தருகிறீர்கள்
உங்கள் இசை அன்பளிப்பை
நல்லிசையை
மெல்லிசையாய் வடித்து
நீங்கள் தரும் பாடல்களைச்
சிலர் வசந்த ராகம் என்பார்கள்.
வேறு சிலர்
அபூர்வ ராகங்கள்
என்பார்கள்.
எங்களுக்கோ,
உங்கள் இசை
எங்கள் நாடி நரம்புகளில்
ஓடும் நதி.
என்றும் வற்றாத
ஜீவ நதி.
எங்கள் இதயங்களில்
ஒளிவிளக்காய்ச்
சுடர் விடும்
ஆனந்த ஜோதி
அணையா விளக்கு.
நீங்கள் ஒரு
கலைக்கோயில்.
ஏனெனில் உங்கள் நெஞ்சம்
இசை குடியிருத்த கோயில்.
(என்றும் குடியிருக்கும் கோயில்)
ஆயிற்றே?
உங்கள் படைப்புகள் எல்லாம்
அந்த இசைக்கோயில்
பூஜைக்கு வந்த மலர்.
இசை மீது
நீங்கள் வைத்திருக்கும்
பாசம்தான்
அதன் ஆலய தீபம்.
அவன்தான் மனிதன்
அவன் ஒரு சரித்திரம்
ஆயிரத்தில் ஒருவன்
உயர்ந்த மனிதன்
இவையெல்லாம்
நீங்கள் இசை அமைத்த படங்கள்.
இவற்றுக்குப் பெயர் வைத்தவர்கள்
உங்களை மனதில் கொண்டுதான்
வைத்திருப்பார்களோ?
நீயும் நானும்
என்று இணைந்திருக்கும்
நண்பர்கள் பலர் உண்டு
இவ்வுலகில்.
ஆனால்,
உனக்காக நான், எனக்காக நீ
என்று வாழ்ந்தவர்கள்
நீங்களும் கவியரசரும்.
மெல்லிசை மன்னர்கள் இருவரும்
கவியரசரும் இணைந்தால்
அது ஒரு
திரிசூலம்.
எங்களுக்கோ,
நீங்கள்
மூன்று தெய்வங்கள்.
லக்ஷ்மி கல்யாணம்
உங்கள் சீர்வரிசையில்தானே நடந்தது?
அனுபவி ராஜா அனுபவி என்று
கலாட்டா கல்யாணத்தக்கு
பச்சை விளக்கு காட்டியவரும்
நீங்கள்தான்!
இசைக்கடலில் பயணம் செய்யும்
பலருக்கு
நீங்கள் ஒரு
கலங்கரை விளக்கம்.
நல்லிசையை நாடித் திரியும்
இசை ரசிகர்களாம்
சாதகப் பறவைகளுக்கோ
நீங்கள் ஒரு
சரணாலயம்.
இது பாராட்டுரை அல்ல.
உங்கள் சாதனைகளுக்குத் தலை வணங்கி
நாங்கள் சமர்ப்பிக்கும்
பாத காணிக்கை.
இடுகையிட்டது Parthasarathy Rengaswami
Manoj- from net
1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது
About mgr fan - madhampatti sivakumar - net
மிக அற்புதமான கலாரசிகர். அதைவிட அதிகமாய் எம் ஜி ஆரின் பரம தீவிர ரசிகர். எதுவா யிருந்தாலும் எம்ஜிஆருக்குப் பின்தான் எல்லாம் என்ற அளவுக்கு எம்ஜிஆர் மீது தீவிரமான ஈடுபாடு. …….எம்ஜிஆர் ஒருமுறை கோவை வந்து கிளம்பியபோது கோவை எல்லைவரை அவரது காரை விரட்டிப் பின்தொடர்ந்து சென்று எப்படியாவது அவரது கவனத்தைக் கவர்ந்து அவரிடம் பேசிவிடுவது என்று முடிவெடுத்து எம்ஜிஆரின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். தம்மை ஒரு கார் விரட்டி வருகிறது என்றதும் அதிவேகமெடுக்கிறது எம்ஜிஆரின் கார். இவர் விடவில்லை. இவரும் வேகம் கூட்டுகிறார். எம்ஜிஆரின் கார் இன்னமும் வேகமாகப்போக , இவரும் வேகமெடுத்துப் பின்செல்ல..ஒரு கட்டத்தில் தமது காரை நிறுத்தி இவரை அழைக்கிறார் எம்ஜிஆர்.“ எதுக்காக இவ்வளவு வேகமாய் வண்டி ஓட்டறே?”’ நான் உங்க தீவிர ரசிகன். உங்கை எப்படியாவது பார்க்கணும், பேசணும்ன்ற ஆர்வம்தான்” என்கிறார்.
“சரி அதுக்காக இவ்வளவு வேகமாகவா கார் ஓட்டறது? ஏதாச்சும் எக்குத்தப்பா ஆச்சுன்னா என்ன செய்யறது? இனிமே இத்தனை வேகமாகவெல்லாம் டிரைவிங் பண்ணக்கூடாது தெரியுமா ” என்று கனிவுடனும் கண்டிப்புடனும் சொல்லிச் சிரிக்கிறார் எம்ஜிஆர்.இசையின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எம்என்எஸ். இசைத்தட்டு காலத்துப் பாடல்களிலிருந்து இன்றைய சிடிக்கள்வரை எந்த இனிமையான பாடலையும் இவர் தவற விட்டதே இல்லை. அற்புதமான இசைக்கலெக் ஷன் இன்றளவும் இவரிடம் உண்டு.