http://www.mayyam.com/talk/showthrea...-Acting/page13
Printable View
NT is best in comedy oriented films such as sabaash meena, Galatta kalyanam, bale pandiya etc, where he foregoes his hero role and be like a full time comedienne .. ooty varai uravu is not one such film where he is a hero in a light hearted story....remembered reading somewhere that sivaji loves doing full fledged comedy role but did not get ample opportunities to do that..........
50 பைசா கொடுத்தால் 5000 ரூபாய்க்கு விளம்பர படுத்திய நடிகர்களின் மத்தியில் இந்த கட்டுரையை படித்து பாருங்கள்...உண்மை விளங்கும்..!.
தானமும் தர்மமும் நம் மனதை பொறுத்த விஷயமே தவிர விளம்பர படுத்தும் விஷயம் அல்ல என்பது விளங்கும் !
எந்த லாபமும் பார்க்காமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் நடிகர் திலகம் அவர்கள் திரு VK ராமசாமி அவர்களுக்கு செய்த உதவி..!
காலத்தால் செய்த உதவி...ஞாலத்தால் மிக பெரிது ! - Courtesy Senthil, facebook
Attachment 3118
கோவை ராயலில் இன்று முதல் நீதி திரையிடப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும் முதல் நாளான இன்றே நீதி மிக மிக சிறப்பான ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. அண்மைக் காலத்தில் எந்தப் படமும் பெறாத முதல் நாள் வசூலை பெற்றிருக்கிறது. சற்று முன் வந்த தகவல் - முதல் நாள் நிகர வசூல் Rs 13,126.50 p. Nett Collection என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு மொத்தம் விற்பனையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் பைசா 50 முதல் 1 ரூபாய் வரை Gross collection-லிருந்து [மொத்த வசூலிலிருந்து] குறைத்து வரும் தொகைதான் இந்த Nett Collection.
இரண்டு வார வசூலை ஒரே வாரத்தில் வந்ததாக அள்ளி விடப்படும் தகவல் போன்றவை அல்ல இது.அக்மார்க் உண்மை தகவல் இது. கோவையிலிருந்து பகிர்ந்துக் கொண்ட நண்பருக்கு நன்றி!
அன்புடன்
அள்ளிவிட்ட கதை லாஜிக் இதுதான்.
கடந்தவாரத்திற்கு முந்தைய வாரம் அவன் தான் மனிதன் திரைப்படம் ருபாய் 68,360.50 வசூல் செய்த செய்தி வந்ததல்லவா.
பார்த்தார்கள்...உடனே ஒரு யோசனை தோன்றியிருக்கும்....68,000 reverse செய்திருப்பார்கள் அதாவது ருபாய் 86,000 .
இதை அப்படியே போட்டால் சாமான்யனும் புரிந்துகொள்வான் உடனே ஒரு 1,000 ரூபாயை விழா கால சிறப்பு தள்ளுபடி செய்து ருபாய் 85,000 என்று வெளிவந்திருக்கும்.
இவ்வளவுதான் மேட்டர் !
இந்த reverse technology தான் காலம் காலமாய் நடக்கும் ஒன்றாயிற்றே !
நேற்று நடந்தது....
இன்று நடக்கிறது....
நாளையும் நடக்கும் .....
எனக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவல்படி சென்ற வாரம் திரையிடப்பட்ட திரைப்படம் Rs.71,360.50 ACTUAL வசூல்
அன்புள்ள ரவி கிரன் ,
தலைவர் ஸ்ரீதரிடம் " எனக்கு கூட அழுமுஞ்சி " என்ற பெயர் உள்ளது என்று சொன்னதை போல ஸ்ரீதர் பேட்டி கொடுத்துள்ளார் என்பது மிகுந்த நகைச்சுவை மட்டும் அல்ல , பொய் கலந்த கற்பனை - அப்படி அவர் கூற வாய்ப்பே இல்லை - நீங்கள் குறிப்பிட்டதை போல அவர் ஏற்கனவே பல படங்களில் " நகைச்சுவை" என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று நிரூப்பித்துள்ளார் - வெறும் பாடல்களில் மட்டும் சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லவில்லை - உண்மையிலேயே எடுத்துக்காட்டாக விளங்கினார் - " எங்கள் மாமா " என்ற ஒரு படம் போதும் - எப்படிப்பட்ட சோதனைகளையும் நகைச்சுவை உணர்வுடன் தீர்க்கமுடியும் என்று திட்டவட்டமாக சொல்வதற்க்கு - இந்த ஆவணம் சொல்லவதை கேளுங்கள் ஸ்ரீதர் குடுக்காத ஒரு பேட்டி எவள்ளவு பொய் கலந்த கற்பனை என்று
அன்புடன் ரவி
1974 PESUM PADAM
http://i57.tinypic.com/qwzqma.jpg
எங்கோ படித்த ஞாபகம் - (பழைய)சங்கர் mgr யாரை வைத்து ஒரு படம் எடுக்கும் வேளையில் சில மாறுதல்களை விரும்பினார் - அவரின் தயக்கத்தை புரிந்து கொண்ட mgr முதுகில் தட்டி கொடுத்து ," சங்கர் நீங்கள் எந்த முகாமிலிருந்து வருகிறீர்கள் என்று புரிகின்றது - இந்த ராமச்சந்தரனால் என்ன முடியுமோ, எதை பண்ண முடியுமோ அதை கேளுங்கள் - "
அவருடைய ரசிகர்களும் சாதாரணமான நடிப்பு . நெருக்கமான காதல் காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையில் தான் mgr நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
எது தன்னால் முடியாததோ அதை அவரும் , அவரின் ரசிகர்களும் ஒரு பிளஸ் பாயிண்ட் ஆகத்தான் கருதினார்கள் /கருதிகிறார்கள் - தனது திறமையால் அந்த இயலாமைகளை தன்னையே வீழ்த்த mgr அனுமதிக்கவில்லை - அவரது திரியிலும் அவரது இயலாமைகளை யாரும் விவாதிபதில்லை - அதனால் ஒரு ஒற்றுமை தானாகவே எல்லோருக்கும் இயல்பாக வந்து விடுகின்றது.
நாம் , எல்லா திறமைகள் நம் தலைவருக்கு இருந்தும் அவரின் சில தவறுகளை (அதுவும் அவரால் மட்டுமே உருவான தவறுகள் அல்ல அவை) அதிகமாக எடுத்து சொல்கின்றோம் , எழுதுகின்றோம் - இதனால் அவர் செய்த பல தியாகங்கள் சபைக்கு வாராமலே போய் விடுகின்றது ( ஒரு உதாரணம் - ரவிகிரனின் பதிவு - சிவாஜியின் உதவிகள்) - சில படங்கள் காலத்தின் கட்டாயத்தால் தோல்விகளை தழுவியிருக்கலாம் ஆனால் அவர் நடிப்பில் , ஏற்கும் எந்த பாத்திரங்களிலும் தோல்வியை சந்தித்ததே இல்லை என்பது என்னுடைய , ஏன் நம் எல்லோருடைய சத்திய வாக்கு .
------------தன் நிஜ வாழ்கையில் மற்றவர்களை போல நடிக்க தெரியவில்லை , அதிகமாக விளம்பரங்கள் தேடவில்லை , அரசியல் குள்ள நரியாக வில்லை - இந்த விஷயங்களில் அவர் ஒரு நடிக்க தெரியாத நடிகர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்
அன்புடன் ரவி