நம் அண்ணலை ஈன்றெடுத்த அன்னையை வணங்கிப் போற்றுவோம். நினைவுப் பதிவுகளை, வரலாற்று ஆவணங்களை வெளியிட்ட திரு.பம்மலார், கிரஹப்பிரவேசம் காட்சி இணைப்பை அளித்த திரு.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
Printable View
நம் அண்ணலை ஈன்றெடுத்த அன்னையை வணங்கிப் போற்றுவோம். நினைவுப் பதிவுகளை, வரலாற்று ஆவணங்களை வெளியிட்ட திரு.பம்மலார், கிரஹப்பிரவேசம் காட்சி இணைப்பை அளித்த திரு.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Dear pammalar Vasudevan, Raghavendra Sir
NANDRI
டியர் பம்மலார்,
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
அன்னை ராஜாமணி அம்மையாரின் நினைவுநாள் பதிவுகள் சோகத்தை ஏற்படுத்தின. நடிகர்திலகத்தின் மனத்திலிருந்து பீரிட்டெழும் அந்த தாய்ப்பாசம் கண்களில் கண்ணீர் சுரக்க வைத்தது. குறிப்பாக 'இந்த கண்கொள்ளாக் காட்சியை இனி காண்போமா?' என்ற வாசகத்துடன் கூடிய புகைப்படம் மனதை நெகிழ வைத்தது. நடிகர்திலகத்தின் கையில் இருக்கும் குழந்தை பேத்தி சத்யவதி என்று நினைக்கிறேன். (சத்யவதியை நினைக்கும்போதெல்லாம் 'கிளையை வளர்த்து.......' என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வரும்).
அந்நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் வகிக்கும் திரு சின்ன அண்ணாமலையின் மரணமும் அதிர்ச்சியான ஒன்று. மணிவிழாவின்போது 60 குடம் தண்ணீர் ஊற்றியதில் மயக்கமடைந்து உயிர் துறந்தார். மணிவிழாவின் துவக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகர் திலகத்துக்கு, அவர் வீடு வந்து சேருமுன்பே, சின்ன அண்ணாமலையின் மரணச்செய்தி காத்திருந்தது.
திரு. சின்ன அண்ணாமலையின் நினைவுநாளும் நினைவுகூறப்பட வேண்டிய ஒன்று.
டியர் வாசுதேவன்,
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
'கிரகப்பிரவேசம்' படத்தில் இடம்பெற்ற காட்சியை சரியான தருணத்தில், சரியான இடத்தில் இடம்பெறச்செய்துள்ளீர்கள். நடிகர்திலகம் தாய்ப்பாசத்தோடு பேசும் இடம் மனதை நெகிழ வைக்கிறது என்பதில் ஐயமில்லை. பதிவுக்கு மிக்க நன்றி.
திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களே,
மறைந்த நடிகர் திரு. சசிகுமார் பற்றிய நினைவுகளை மிகச் சரியாக அந்த நினைவு நாளில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள். கூடவே, திரு. வாசுதேவன் அவர்களும், பாரத விலாஸ் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பொருத்தமான காட்சியைப் பதிவிட்டு கண்களைக் குளமாக்கி விட்டார்.
சசிகுமாரும் அவரது துணைவியாரும் மறைந்த அந்த தினம் மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் சசிகுமார் புகழ் ஏணியில் விரைவாக ஏறிக் கொண்டிருந்த நேரம். நடிகர் திலகத்தோடு தன்னையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு, அவரது போர் வாட்களில் ஒருவராக மேடைகளில் முழங்கி கொண்டிருந்த நேரம் - எதிர்பாராத விதமாக அகால மரணம் அடைந்த போது - துணைவியாரோடு, அவர்களுடைய குழந்தைகளுக்கு பத்து வயது கூட நிரம்பியிருக்கவில்லை. பெரிய அளவில் வந்திருக்க வேண்டிய கலைஞர்.
இந்த மரணமும் 1975 அக்டோபர் முதல் தேதியிலிருந்து துவங்கி நடந்த நிகழ்வுகளும் (கர்மவீரரின் மறைவிலிருந்து துவங்கி...). விதி என்ற ஒன்றை நம்பாதவனும் நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது. திரு. முரளி அவர்கள் மிகச் சரியாக நினைவு கூர்ந்திருந்தார்.
நடிகர் திலகத்தின் அன்னையாரின் நினைவு தினத்தை ஒட்டி தாங்கள் பதிவிட்ட அத்தனை படங்களும், கண்களை மறுபடியும் குளமாக்குகின்றன. தினத் தந்தியில், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தொடராக வந்த வரலாற்றுச் சுவடுகளில் இந்த வருடத்தைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. 1972-ஆம் வருடம் நடிகர் திலகத்தின் நடிப்புலக வாழ்க்கையில் சிகரத்தில் இருந்த நேரம். அந்த நேரம் பார்த்து, அவர் உயிரையே வைத்திருந்த அவரது அன்னையார் காலமானார். மிகச் சரியாக, கிரஹப்ரவேசம் திரைக்காவியத்தில் வரும் காட்சியைப் பதிவிட்டமைக்கு திரு. வாசுதேவன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சாரதா மேடம் அவர்களே,
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்த உங்களிடம் மீண்டும் நிறைய கருத்துகளையும், ஆய்வுகளையும், உங்களுக்கேயுரிய நடையில் - எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
திரு. சசிகுமார் மற்றும் சின்ன அண்ணாமலை குறித்த பதிவுகள் அருமை.
குறிப்பாக சின்ன அண்ணாமலை அவர்களை ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தமிழ் அறிஞர். 80 களின் இறுதியில் குமுதம் இதழின் இலவச இணைப்பாக “ சொன்னால் நம்ப மாட்டீர்கள் “ என்ற அவரது புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டார்கள் . உண்மையான ஆனால் எளிதில் நம்ப முடியாத பல தகவல்களை சுவைபட எழுதியிருப்பார்.
அந்த நேரத்தில்தான் வயதில் மூத்த சில நண்பர்கள் மூலம் அவர் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவராக இருந்தவர் என்ற தகவலையும், தர்மராஜா படத் தயாரிப்பாளர், காமராஜரின் தொண்டர், தன்னுடைய பிறந்த நாள் அன்றே ( மணிவிழா அன்று) மறைந்து விட்டார் என்ற தகவல்களையும் அறிந்தேன்.
அது மட்டுமல்ல 1971ம் ஆண்டு திராவிடர் கழகத்தவர் ஈ.வே.ரா அவர்கள் தலைமையில் சேலத்தில் இந்து கடவுளர்களின் உருவப்படங்களை அவமரியாதை செய்த செயலை சின்ன அண்ணாமலை வன்மையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார் . அன்றைய அரசு இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒரு கண்டனச் சுவரொட்டி அச்சிட்டு வந்ததை அறிந்த அன்றைய அரசு, தேர்தல் நேரத்தில் இந்த சுவரொட்டி வருவதை விரும்பாமல் “மத விரோதத்தை தூண்டுகிறது” என்ற காரணம் காட்டி சுவரொட்டியை அச்சகத்தில் இருந்து பறிமுதல் செய்தபோது நீதி மன்றம் வரை சென்று ஆணித்தரமான வாதங்களுடன் போராடி சுவரொட்டிகளை திரும்பப் பெற்றார் என்பதையும் அறிந்தேன் .
சின்ன அண்ணாமலை, குமரி அனந்தன் போன்ற தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிவாஜி மன்றத் தலைவர்களாக இருந்தார்கள் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு
அவரையும், நடிகர் திலகத்தின் தீவிரத் தொண்டராக இருந்து மறைந்த சசிகுமார் அவர்களையும் நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் இடுகை செய்த "கிரஹப்பிரவேசம்" வீடியோ காட்சி, தெய்வமகனை ஈன்றெடுத்த தெய்வத்திற்கு செலுத்தப்பட்ட சிறந்த அஞ்சலி.
டியர் சந்திரசேகரன் சார், கனிவான நன்றி !
டியர் குமரேசன்பிரபு சார், மிக்க நன்றி !
சகோதரி சாரதா,
மனமார்ந்த நன்றி ! ஜூன் மாதத்தில் வரும் தியாகி சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த-நினைவு தினங்கள் [இரண்டும் அவருக்கு ஒன்றே] அவசியம் போற்றப்படும்.
டியர் பார்த்தசாரதி சார். நெஞ்சார்ந்த நன்றி !
டியர் மகேஷ் சார், நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
welcome sarada madam hub throwing great guns day by day. homage to our NT's mother smt rajamani ammal by vasudevan is a touching ones. great lady who has given NADIGAR THILAGAM to the world well remembered.
அன்னை ராஜாமணி அம்மையாருக்கு
நமது ஆத்மார்த்தமான அஞ்சலி
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4408.jpg
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
[இக்கட்டுரையை வடித்த 'அப்பச்சி' என்பவர் திரு.சின்ன அண்ணாமலை அவர்களேதான்]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4406.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4407.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4409.jpg
24.8.2011, கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.