இன்று மாலை தீபம் திரைப்படம் முரசு தொலைக்காட்சியில். முதலிருந்து பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் இருந்த போதும் ஒரு சில வெளி வேலைகள் இருந்த காரணத்தினால் கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. ஏமாற்றம்தான். ஆனாலும் என்ன? அந்த 30 நிமிடம் போதுமே. நடிகர் திலகம் தன 50-கள் மற்றும் 60-களின் பாணியில் அடக்கி வசித்து அசத்திய படம் அல்லவா!
படம் பார்த்த வரை மறக்க முடியாத இரண்டு காட்சிகள். ஒன்று நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் மீது தீரா கோபமும் வெறுப்பும் கொண்டிருக்கும் சுஜாதா தன கணவன் வழி தவறி போவதற்கு நடிகர் திலகம்தான் என்று குற்றம் சாட்டி தன்னை அடைவதற்கு இப்படி எத்தனை முயற்சி எடுத்தாலும் நடக்காது என்று சொல்ல கோபப்படாமல் தன்னிலையை விளக்கி விட்டு இறுதியாக "ராதா உனக்கு ஞாபகம் இருக்கா? உனக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் நடந்தப்போ அவனுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வச்சேனே! அவனுக்கு அப்பா-னா உனக்கு?" என்று கேட்டு விட்டு போகும் சீன் [இதன் தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் சங்கீதா சுஜாதாவை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் காட்சி போனஸ்]
இரண்டாவது காட்சி விஜயகுமார் வீட்டுக்கே வரவில்லை என்பதால் மனம் ஒடிந்து சுஜாதா உடல் நலமில்லாமல் இருக்கும் செய்தி கேள்விப்பட்டு வந்து நடிகர் திலகம் பேசிக் கொண்டிருக்க அப்போது வரும் விஜயகுமார் நடிகர் திலகத்தை நேரிடையாக் குற்றம் சாற்றி தரக்குறைவாக் பேசி விட்டு எனக்கு காரணம் தெரியணும் என்று சொல்ல எதுக்கப்பா உனக்கு காரணம் தெரியணும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு நிகழ்வையும் சொல்வாரே, அதற்கு ஒவ்வொன்றுக்கும் கணக்கு பண்ணி தானே பண்ணினீங்க என்று விஜயகுமார்'சொல்ல எதுப்பா கணக்கு என்று ஆரம்பித்து கடைசியில் வெறுப்புற்று போய் ச்சீ என்று முடிப்பாரே, அந்த சீன்.
கிளைமாக்ஸ்-க்கு முந்தின காட்சியில் [விளக்கை அணைத்து விட்டு போ-விற்கு முன்னால்] உங்க பெரிய மனசை யாரும் புரிஞ்சிக்கலையே என புலம்பும் நாகேஷிடம் காலம் வரும்போது எல்லாரும் புரிஞ்சிக்குவாங்க என்று சொல்லி விட்டு போவார். எத்துனை உண்மையான வார்த்தை!
அன்புடன்