மிக மிக சரியான கருத்து. நான் ஆமோதிக்கிறேன், திரு ரவி.
Printable View
மிக மிக சரியான கருத்து. நான் ஆமோதிக்கிறேன், திரு ரவி.
அன்புள்ள tfml
அருமையான ஆவணங்கள் - நீங்கள் சேமித்து வைத்திருப்பதை பார்த்தால் nt யின் மீது எவ்வளவு மதிப்பையும் , மரியாதைக்கும் வைத்துருகிண்டீர்கள் என்று தெரிகின்றது - மலைப்பாகவும் , ஆச்சிரியமாகவும் இருக்கின்றது - தொடருங்கள் - நன்றி
அன்புடன்
ரவி
Thank you MURALI.GOD CREATED ME TO BECOME A NADIGAR THILAGAM FAN AND TO PROBAGATE HIS FAME(HE IS DESERVED).I HAVE THAT OPPORTUNITY.HENCE MY INITIAL AND MY BIRTH DATE IS FORTUNATE TO ME THOUGH THAT DAY IS SAD TO US.VERY PLEASURE TO KNOW THE COLLECTON OF OUR NEETHI.
எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -
இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நான்,பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை .
சில நாட்களுக்கு முன் சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது .
நான் அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -இந்த படம் மிகவும் மற்றவர்களால் அலசிய படம் தான் - இருந்தாலும் என் கண்ணோட்டத்தில் புதிய முறையில் எழுத முயற்சிக்கிறேன் - தவறுகள் இருப்பின் , திருத்திக்கொள்ளவும் தயாராக உள்ளேன்
என் நடையுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் - என்னால் என் மாதிரிதான் எழுத முடியும் . ------ கோபால் உடைய "கெளரவம்" இன்னும் முடியாத இந்த சமயத்தில் இந்த பதிவை ஒரு short gap ஆக எடுத்துகொள்ளவும் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி பதிவுகளை பார்ப்போம்
அன்புடன் ரவி
:):smokesmile:
இந்த படத்தை நான்கு பகுதிகளாக அலசலாம் என்று நினைக்கிறேன் -
முதல் பகுதி : இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்
இரண்டாவது பகுதி : சில ஆவணங்கள் / மனதிற்கு பிடித்த பாடல்கள்
முன்றாவது பகுதி : என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? -ஒரு சின்ன அலசல்
நான்காவது பகுதி : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம்
அன்புடன் ரவி
பகுதி 1 a
1954 - ஒரு மறக்கமுடியாத வருடம் - முதல் முறையாக nt யின் 10 படங்கள் வெளிவந்தன- 10த்தும் வெற்றி வாகை சூடின என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.
மனோகரா - 10வது படம் - வசூலிலும் , வசனத்திலும் திரை உலகையே புரட்டி போட்ட படம் - இப்பொழுது வாசுவின் கை வண்ணத்தில் மீண்டும் உற்சாகமாக பவனி வருகின்றது .
இல்லற ஜோதி - அருமையான படம் - சிவாஜியின் 11 வது படம் . இதுவும் ஒரு வெற்றி படம் - இதில் வரும் அனார்கலி ஓரங்க நாடகம் . இன்றும் மிகவும் புகழ்ந்து பேசப்படும் ஒன்று . பாடல்கள் யாவும் தேனில் ஊறிய பளா சுளைகள்
12வது படம் - பிரமிக்கவைத்த "அந்த நாள்" - இந்த படம் பற்றி சொல்ல , எழுதவே ஒரு மாதம் தேவைப்படும் - முதல் முறையாக பாடலே இல்லாமல் வந்த படம் - வில்லனாக வந்து தலைவர் விளையாடிருப்பார் - படம் மிகுந்த வெற்றியை அடைந்தது.
13ஆக வந்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - நகைச்சுவையில் இன்றும் பெரிதாக பேசப்படும் படம் - வெகு சுலபமாக 100 நாட்களை கடந்து ஓடியது .
14வதும் , 15வதும் மனோகராவின் தெலுங்கு , ஹிந்தி மொழியாக்கம் - வெற்றியை பற்றி குறிப்பிடவே வேண்டாம் - தலைவர் மட்டும் ஹிந்தி பட உலகத்திற்கோ அல்லது தெலுகு பட உலகத்திற்கோ சென்று இருந்தால் , அவருக்கு இன்றும் ராஜமரியாதை இருந்திருக்கும் - அங்கு மரியாதையை செய்யும் நல்ல உள்ளங்கள் பல உள்ளன .
16வது படமாக துளி விஷம் - இந்த படத்தை பற்றி வாசு மிகவும் அழகாக எழுதிஉள்ளார் - வில்லன் வேடம் - மாறி மாறி வில்லானாக , ஹீரோ வாக , வெற்றிகளை தந்தவண்ணம் , தரமான படங்களின் எண்ணிக்கையும் குறைக்காமல் , சிவாஜி ஒருவரால்தான் கோலோச்சமுடிந்தது .
17வது படம் -கூண்டுக்கிளி - இரண்டு திலகங்களும் இணைந்த ஒரே படம் என்ற பெருமையை கொண்டது . இந்த படத்திலும் , நடிப்பு தான் முக்கியம் என்று , தன் இமேஜ் யை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் வில்லனாக நடித்த படம்.
18வதாக வருவது - தூக்கு தூக்கி - திருவாங்கூர் சகோதரிகளோடு விழுப்புர வேந்தன் வெற்றி வாகை சூடிய படம் - முதல் முதலாக , tms தான் சிவாஜி , சிவாஜி தான் tms என்று உலகத்திற்கு நிரூபித்த படம்.
19வதாக வருவதுதான் நான் இன்று எடுத்துக்கொண்ட "எதிர்பாராதது" - புதுமையான கருத்துக்கள் , பெண் குலத்தை பெருமை படுத்தின படம் - கணவனே எல்லாம் என்று சத்தம் போட்டு கூறிய படம் ; ஒரு பெண்ணினால் காதலிக்கவும் தெரியும் , அதே சமயத்தில் அதை தூசியாக கருதவும் தெரியும் என்று நிரூபித்த படம் - kbக்கு மூன்று முடிச்சை வித்திட்ட படம் ; காதலித்தவன் உயிருடன் திரும்பி வந்து தன் காதலை மீண்டும் கேட்க்கும் பொழுது , மனதை கல்லாகி கொண்டு , உணர்சிகளுக்கு விடை கொடுக்கும் ஒரு பரிதாபமான பெண்ணின் உயிரோட்டமான கதை - எதிர்பாராத முடிவு ஆனால் எதிர்பார்ப்புக்கும் மேலான வெற்றி !!
தொடரும்
அன்புடன் ரவி
:):smokesmile:
பகுதி - 1B - இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்
1. Certificate of Merits - In 2nd National Film Awards in 1954
2. நல்ல கதை அண்ட் வசனம் என்பதற்காக ஸ்ரீதருக்கு பாராட்டுகளும் , பரிசுகளும் குவிந்தன
3. Randor Guy முதல் முறையாக , உண்மையை உண்மையாக எடுத்துசொல்லி புகழ்ந்த படம் .
4. A. M. Rajah & Jikki - நல்ல பாடகர்கள் என்ற பெயரை மீண்டும் நிருபித்த படம்
5. படம் கண்ட இமாலய வெற்றியின் மூலம் , ஸ்ரீதர் , சிவாஜியின் உற்ற நண்பராக மாறினார்
6. வசூலில் முதல் 25 நாட்களுக்குள் மொத்த முதலீட்டையும் தயாளிப்பாருக்கு பெற்று கொடுத்தது
7. பெண்களின் தியாகத்தையும் , பெருமையும் இந்த படம் சொன்னது போல வேறு எதுவுமே அமையவில்லை
8.சிவாஜி - பத்மினி ஜோடிக்காகவே இந்த படம் மறு பதிவீடுகலிலும் வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது
9. இந்த படம் பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது : மலையாளத்திலும் நித்திய கன்னிகா(director K.S. ேதுமாதவன்) , தெலுங்கில் -Ilavelpu, director D. Yoganand) , ஹிந்தியில் sharada (director L.V. Prasad) - எல்லா மொழியிலும் படம் நல்ல வெற்றியை கண்டது .
10. நடிப்பில் தன்னை மறந்து , பத்மினி , ஒரு கட்டத்தில் சிவாஜியை உண்மையாகவே அறைந்து விடுகிறார் - அதன் பலன் சிவாஜிக்கு , மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் , பத்மினிக்கு கொடுக்க வேண்டியதாக போய்விட்டது - இப்படி பட்ட உண்மையாக உழைத்தவர்கள் இருந்ததால் தான் இன்று இந்த தமிழகம் 100 வது திரையுலக ஆண்டை வெற்றி கரமாக கொண்டாட முடிகின்றது .
தொடுரும்
அன்புடன் ரவி
:):smokesmile:
பகுதி 2 a - சில ஆவணங்கள்
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
அன்புடன் ரவி
:):smokesmile:
பகுதி 2 b - சில ஆவணங்கள்
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
அன்புடன் ரவி
:):smokesmile:
அன்புடன் ரவி
:):smokesmile: