சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் (16/05/2014) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆசை முகம் " திரையிடப்பட்டுள்ளது.
தினசரி 3 காட்சிகள். அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின்
பார்வைக்கு.
http://i59.tinypic.com/x1n5nd.jpg
Printable View
சென்னை மகாலட்சுமியில் இன்று முதல் (16/05/2014) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆசை முகம் " திரையிடப்பட்டுள்ளது.
தினசரி 3 காட்சிகள். அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின்
பார்வைக்கு.
http://i59.tinypic.com/x1n5nd.jpg
SUPER COSMIC POWER CELEBRATING AIADMK VICTORY
http://www.youtube.com/watch?v=_t5e7...ature=youtu.be
இருக்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் எழைகளுக்கு எவ்வளவு
நன்மைகள் செய்யமுடியுமோ அதை செய்வதுதான் என் வேலை
மக்கள் திலகம் படைத்த மகத்தான வெற்றி.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
சொன்னபடி வாழ்ந்தார் இன்னும் பலரும் சொல்லும் பட மக்கள் உள்ளங்களில் வாழ்கிறார். இத்தனை வெற்றிக்கும் காரணமானவர் மக்கள் திலகம் , மக்கள் திலகம், மக்கள் திலகம் தான்.
அள்ளி குவித்தது அதிமுக 37/40
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது ஆளும் கட்சியான அதிமுக.
மக்களவையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. 40 தொகுதிகளில் போட்டியிட்டு, 37 தொகுதிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால், அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 44.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
34 பேர் புதுமுக எம்.பி.க்கள்: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களில் 34 பேர் புதுமுகங்கள். திருவள்ளூர் பி.வேணுகோபால், கரூர் எம்.தம்பிதுரை, திருச்சி பி.குமார் ஆகிய மூன்று பேரும் மீண்டும் மக்களவைக்கு அதே தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதுமுக எம்.பி.க்களில் நான்கு பேர் பெண்களாவர்.
தொடர்ந்து முதலிடம்: மக்களவைத் தேர்தலில் முதல் சுற்று வாக்குகள் எண்ணத் தொடங்கியதில் இருந்தே அதிமுக முன்னிலை வகிக்கத் தொடங்கியது. மாலை 3 மணியில் இருந்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகத் தொடங்கின. முதலில், நீலகிரி தொகுதிக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இதைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக மற்ற தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகின. ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஏழு தொகுதிகளில் பாஜக அணி இரண்டாமிடம்: 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக மற்றும் 8 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. ஆகியவை தலா ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனும் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸýம் வெற்றிபெற்றுள்ளனர். எனினும் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, 7 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக ஆகியவை ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
தி.மு.க. ஒரு தொகுதியில்கூட...: மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக உள்பட அந்த அணியில் உள்ள எந்தக் கட்சியும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
புதுச்சேரி: புதுவையில் தொடர்ந்து கோலோச்சிவந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியைத் தழுவினார். பாஜக கூட்டணியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
5 லட்சம் "நோட்டா': யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே பதிவு செய்ய தனி பொத்தான் வசதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டா பொத்தானை தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, நீலகிரி தொகுதியில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நோட்டா வாய்ப்பை அதிகமான வாக்காளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
வீழ்ந்த நட்சத்திரங்கள்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, தேமுதிக இளைஞரணி மாநில செயலாளர் எல்.கே.சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஆலந்தூர் இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி
ஆலந்தூர் பேரவை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.என்.பி. வெங்கட்ராமன் வெற்றி பெற்றுள்ளார். அவர் திமுக வேட்பாளர் ஆர்.எஸ். பாரதியை விட 18,714 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார்.
வெங்கட்ராமன் 89,295 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஆர்.எஸ். பாரதிக்கு 70,581 வாக்குகள் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் தேமுதிகவிடம் இருந்து இந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் பேரவைத் தலைவரையும் சேர்த்து 152 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் தேமுதிகவின் பலம் 28 ஆக குறைந்துள்ளது.
ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல், 5-ஆவது இடைத் தேர்தல் ஆகும். இதற்கு முன் திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் காலமானதை அடுத்து அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
மதுரையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது அதிமுக
முதல்முறையாக அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் போட்டியிட்ட மதுரை மக்களவைத் தொகுதியில் முதல் வெற்றியை அதிமுக பதிவு செய்திருக்கிறது. கடந்த 2004 மக்களவைத் தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கே மதுரை தொகுதியை அதிமுக ஒதுக்கீடு செய்து வந்தது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. இதன்மூலம் இரண்டாவது முறையாக மதுரை மக்களவைத் தொகுதியில் களம் இறங்கியது.
1952 முதல் இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் மதுரை தொகுதி அதிக முறை தேசியக் கட்சிகளின் வசம்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. 1952 இல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த மதுரை மக்களவையில், காங்கிரஸின் எஸ்.பாலசுப்பிரமணியம், பி.எம். கக்கன் ஆகியோர் இத்தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினர்களாயினர்.
காங்கிரஸ் கட்சி 10 தேர்தல்களில் போட்டியிட்டு 8 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தமாகா ஆகிய கட்சிகள் தலா 2 தேர்தல்களில் போட்டியிட்டு தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1989, 1999, 2009 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட திமுக, 2009 தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதுரை தொகுதியில் அக் கட்சிக்கு முதல் வெற்றியும் இத் தேர்தல் தான். இத் தேர்தலில் 12 பேர் போட்டியிட்ட நிலையில், மதுரை தொகுதியைத் தொடர்ந்து இருமுறை தன்வசம் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.மோகனை விட, 1.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று திமுகவின் மு.க.அழகிரி வெற்றி பெற்றார்.
அதிமுகவைப் பொருத்தவரை மதுரை மக்களவைத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கி வந்தது. 2004 தேர்தலில் மட்டுமே நேரடியாகப் போட்டியிட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் (இப்போதைய மதுரை வடக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்) மார்க்சிஸ்ட் வேட்பாளர் ப.மோகனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த தேர்தலில் மதுரையில் கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டும் என்று அதிமுக தீவிரமாக இருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில்தான் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதிலும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வெற்றி பெற்ற தொகுதியை இம் முறை கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாகப் பணியாற்றியது. இதன்படி, மதுரை மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாகக் களம் இறங்கிய அதிமுக, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 424 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் மதுரை தொகுதியில் அதிமுக பெற்றுள்ள முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதுவரை நடந்த தேர்தல்களில் 2009-ல் திமுக வேட்பாளர் மு.க.அழகிரிதான், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் அதையும் முறியடித்திருக்கிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்த ஆர்.கோபாலகிருஷ்ணன் (அதிமுக), வ.வேலுச்சாமி (திமுக), து.சிவமுத்துக்குமார் (தேமுதிக) டி.என்.பாரத் நாச்சியப்பன் (காங்கிரஸ்), பா.விக்ரமன் (மார்க்சிஸ்ட்), எம்.கமாசீஸ் (ஆம் ஆத்மி), ஆ.தவமணி (பகுஜன் சமாஜ்), எம்.முகமது அலி (சமதா கட்சி), கே.ராஜா (தேசிய பார்வர்டு பிளாக்) ஆகியோரும் சுயேச்சைகள் 22 பேரும் போட்டியிட்டனர்.
மதுரை மக்களவைக்கு உட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், மதுரை மேற்கு ஆகிய பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 14,39,792 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9,76,338 வாக்குகள் பதிவாகின. மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. அதைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
ஆரம்பம் முதலே அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் இருந்தார்.
முதல் சுற்றில் திமுக வேட்பாளர் வேலுசாமியை காட்டிலும் 13,076 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் வாக்கு வித்தியாசம் 27 ஆயிரத்து 294 ஆக உயர்ந்தது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அவர் பெற்ற வாக்கு வித்தியாசம் முந்தைய சுற்றின் வாக்கு வித்தியாசத்தைக்காட்டிலும் 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாக இருந்தது. ஒன்பதாவது சுற்றில் 1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். மொத்தம் 21 சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4,53,785 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு அடுத்ததாக திமுக வேட்பாளர் வ.வேலுசாமி 2,54,361 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 1,99,424.
மதுரை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கோபாலகிருஷ்ணனுக்கு, வெற்றிச் சான்றிதழை தொகுதியின் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எல்.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், அதிமுக நிர்வாகி எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் திலகம் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கு சிரஞ்சீவியாக வாழ்கிறது என்பதை பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்
மூலம் அறிய முடிகிறது .இந்த தேர்தலில் முதல் முறையாக அதிமுக பல இடங்களை கைப்பற்றியுள்ளது .
http://i59.tinypic.com/35jcd4j.jpg
மதுரை - திருவண்ணாமலை - வட சென்னை - மத்திய சென்னை -கோவை -நீலகிரி -முக்கிய தொகுதிகளாகும் .
தமிழ் நாட்டில் முதல் முறையாக 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளை வென்று சரித்திர சாதனை பெற காரணாமான மக்கள் திலகத்தின் பெயர் - இரட்டை இலை சின்னம் -அவருடைய படங்கள் தேர்தல் நேரத்தில் உச்சரிக்கப்பட்டது முக்கிய காரணம் என்பது உண்மை .
மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - 2016 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .