சி.க வாங்கோ வாங்கோ .....
Printable View
சி.க வாங்கோ வாங்கோ .....
கிருஷ்ணா ஜி
என்னைப்பார் என் அழகைப்பார் .. பாடல் இசையரசி, சசிரேகா மற்றும் சைலஜா பாடிய பாடல்..
இன்றைய ஸ்பெஷல் (62)
http://i1.ytimg.com/vi/vSEfPHftKa0/sddefault.jpg
'இன்றைய ஸ்பெஷல்' பாடலில் மனதை வருடும் அருமையான டூயட் ஒன்று. 'சித்ராங்கி' (1964) திரைப்படத்தில் பாடகர் திலகமும், இன்னிசைக்குயிலும் இணைந்து பாடும் அமைதியான ஒரு காதல் பாடல்.
நிஜ கணவன் மனைவி இணைந்து பாடி நடித்தது. இயற்கை எழில் கொண்ட மலைப்பகுதி, அருவி நீரோடைகளில் இப்பாடல் படமாக்கப் பட்டிருக்கும்.. ஏ வி.எம்.ராஜன் இப்பாடலில் ஸ்லிம்மாக சேவக உடை அணிந்து இருப்பார். புஷ்பலதாவும் வெரி சிம்பிள். வரிகள் மிக மிக எளிமை. பாடகர் திலகம் ராஜன் குரலுக்காக மெனக்கெட்டிருப்பார். சுசீலாம்மாவின் குரல் தெள்ளத் தெளிவு தேவாமிர்தம்.
எனக்கென்னவோ இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற ஓர் உணர்வுதான் ஏற்படும். கொஞ்சம் அபூர்வ பாடல் வகையைச் சேர்ந்ததுதான் இது.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படத்தில் மனோகர், ஷீலா தேவி, ராமதாஸ் போன்றோர் நடித்திருந்தனர். இசை அமைத்தவர் வேதா. இயக்கம் ஆர் .எஸ்.மணி.
http://www.thehindu.com/multimedia/d...pg_144911e.jpg
பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையான வைரமணிகள்.
'நெஞ்சினிலே நினைவு முகம்' நெஞ்சை விட்டு அகலாது என்றும்.
'வேலோடு விளையாடும் முருகையா' சுசீலாவின் பக்திப் பாடல்
'பொழுது புலர்ந்தது பூப்போலே... பூமி வெளுத்தது மா போலே' சுசீலா உற்சாகம்
'அன்ன நடை சின்ன இடை எப்படி' ஜமுனா ராணி மற்றும் கோரஸ் அமர்க்களம். கோபால் சாரின் பேவரிட்.
'இன்று வந்த சொந்தமா' என்றுமே மனதில் சொந்தம் கொண்டாடும்.
என்று பாடல்களுக்குப் பஞ்சமில்லை. இனிமைக்கும்தான்.
http://i.ytimg.com/vi/QBOhV_LXDNk/mqdefault.jpg
இனி பாடலின் வரிகள்
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற
கன்னிகை ராதையாக
தேடி வந்தாய்
குயில் இசையும்
குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாக இருந்து
மாறாத அன்பு கொண்டு
மாலையிட்டாய்.
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா
https://www.youtube.com/watch?v=QBOh...tailpage#t=182
வாவ் வாசு சார்.. எனக்க்கு ரொம்ப்ப்ப பிடிச்ச பாட்டு இன்று வந்த சொந்தமா... ம்ம் நம் சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்..:) நன்றி.. சித்ராங்கி பார்த்ததில்லை.. நல்லா இருக்குமா..
ஃபார் எ சேஞ்ச்..எனக்குத்தெரிஞ்ச பாட்டைப் போட்டதுக்காக வாசு சாருக்கு மறுபடி ஒரு தாங்க்ஸ்
நெஞ்சுக்கு நீதி 1979 கலைஞ்ர் படம்
ஜெய்சங்கர் சங்கீதா ஜோடி னு நினைவு
சங்கர் கணேஷ் இசை
எனக்கொரு கதை சொல்லு கண்ணே
எனை விட கதை எது கண்ணா
அருமையான ஹம்மிங்
இது பாலா சுசீலா தானே ?
http://www.inbaminge.com/t/n/Nenjukk...thi/folder.jpg
http://www.mediafire.com/?q91b4bayqapkyp1
http://www.mediafire.com/?216mi596d4d6ugu
பாரதியின் அழகும் இசையரசியின் பாடலும் அருமை வாசு ஜி.
இன்றைய ஸ்பெஷல் தூள். எனக்கு பிடித்த படப்பாடல்கள் ... நன்றி வாசு ஜி