-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
நம் புரட்சித்தலைவர் தோற்றுவித்த அ.இ.அ .தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் சார்பாக செல்வி ஜெயலலிதா முதல்வராக ஆட்சி செய்திருந்தாலும், தற்போது திரு. பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பிலிருந்தாலும், மேலும் சிலர் இனி எதிர்காலத்தில் அ.இ.அ .தி.மு.க சார்பில் முதல்வராக பொறுப்பேற்கவிருந்தாலும், நம் இதயதெய்வம் டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் படைத்த, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாதனைகளையும், அவர் பெற்றிருக்கும் பெருமைகளையும் இனி எவரும் அடைய முடியாது.
1. அசைக்க முடியாத " அ.இ.அ .தி.மு.க. " என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த இயக்கத்தை தோற்றுவித்தவர்தான் நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள்.
2. தமிழகத்தின் முதல் அ.இ.அ .தி.மு.க.முதல்வராக திகழ்ந்தவரும், நம் ஒப்பற்ற இதய தெய்வம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்தான் !
3. அ.இ.அ .தி.மு.க சார்பில் தமிழகத்தை தொடர்ந்து 3 முறை ஆண்டவரும், சத்துணவு தந்த நம் சரித்திர நாயகனே !
4. அ.இ.அ .தி.மு.க சார்பில் முதன் முதலில் புதுவையில் ஆட்சியை அமைக்க காரணமாயிருந்தவரும் நம் புரட்சித்தலைவர் அவர்களே !
5. வாழ்நாளின் இறுதி வரை முதல்வர் பதவியை வகித்தவரும் நம் பாரத ரத்னா அவர்களே !
6. தனது தலைமையிலான அ.இ.அ .தி.மு.க.வை சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறச் செய்தவரும் வரலாறு படைத்த வள்ளல் நம் எம். ஜி. ஆர். அவர்களே !
7. பிரச்சரத்துக்கு செல்லாமலேயே, (1967 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தல்களில்) படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமையும், உலகத் தமிழர்களின் உண்மைத்தலைவராகிய நம் மன்னவனுக்கு மட்டுமே உண்டு.
இந்த புகழை, இனி அ.இ.அ .தி.மு.க. சார்பில் எந்த தலைமையும் பெற முடியாது என்பது திண்ணம்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட முடியுமா என்ன ?
அது போல்தான் நம் புரட்சித்தலைவரின் புகழை எவராலும் அழிக்க முடியாது, மறைக்கவும் முடியாது. அவரது புகழை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அரசியலில், மக்களால் அப்புறப்படுத்தப்பட்டதை இந்த நாடே அறியும்.
தி. மு. க. ஆதரவு நாளேட்டிற்கு தீனியை கொடுத்த திரு. ராஜேந்திர பாலாஜியின் செயல் வருந்த தக்கது.
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நூல் வெளியீட்டு விழா
-------------------------------------------------------------
திரு.மணிகண்டன் : இந்த அரங்கத்தில் உள்ள நாமெல்லாம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
ஆனால் கவிஞர் திரு. முத்துலிங்கம் அவர்கள் எம்.ஜி.ஆர். பித்தர் . ஏனெனில்,
திரு. முத்துலிங்கம் அவர்களிடம் ரூ.10000/- கொடுத்து உதவிக்கு வைத்து கொள்ளுங்கள் என்று கூறினால், மறு வினாடியே , அந்த பணத்தை ஒரு ஓரமாக
வைத்துவிட்டு , நன்றி, வணக்கம் என்று கூறி விடைபெற்று விடுவார்.. அதாவது
உழைக்காமல் எந்த ரீதியிலும் பணம் வாங்கக் கூடாது என்பது அவருடைய கொள்கை. இது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் கற்ற பாடம்.
நாங்களெல்லாம் மின் விளக்குகள். ஆனால் திரு. முத்துலிங்கம் அவர்கள் அகல் விளக்கு. எப்போதுமே அகல் விளக்குகளுக்கு தனி மரியாதை உண்டு. அவரிடம்
1000 அகல் விளக்குகள் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. காரணம், புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் வைத்திருந்த தொடர்பு. புரட்சி தலைவரும் கவிஞர்
முத்துலிங்கம் பால் அன்பு கொண்டவர்.
பூமியில் மண்ணைத் தோண்டித்தான் தங்கத்தை எடுப்பார்கள் என்பது வரலாறு.
ஆனால் வங்கக் கடலோரம், மண்ணைத் தோண்டி, தங்கத்தைப் புதைத்தார்கள்
என்பது சரித்திரம்.
இலங்கை தமிழர்கள் அரசியலை, இன்றுவரை அரசியல்வாதிகள் அரசியலாகத் தான்
பார்த்தார்கள் . ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ வேண்டும் என்று நினைத்த ஒரே தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான் என்று இந்த நூலில் பதிவாகியுள்ளது.
கேட்டதும் கொடுப்பவர் கலியுலக கர்ணன். கேட்காமலேயே, ஒருவர் நிலையறிந்து
கொடுக்கும் ஒரே கலையுலக கர்ணன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மேல் உண்மையான பற்றுள்ள பக்தர்களைத்தான்
இந்த அரங்கில் நான் காண்கிறேன். திரையுலகிலும், அரசியல் உலகிலும் பல மாற்றங்களை நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
இலங்கை தமிழர்க்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உதவியது பற்றி பலர் செவி வாயிலாக சொன்னார்கள். ஆனால், ஆசிரியர் இந்த நூலில் ஆதாரபூர்வமாக
பதிவு செய்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கலைஞர் கருணாநிதி கூட்டு சேர்ந்து
வெற்றிபெற்று, புரட்சி தலைவரின் ஆட்சியை கலைக்க தூண்டுகோளாக
இருந்தார். ஆனால் அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அசுர பலத்துடன் வெற்றி பெற்று , மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
உலகிலேயே, பெற்ற தாயை வணங்கி வழிபடவேண்டும் என தான் ஏற்ற பாத்திரங்களில் நடித்து, மக்களுக்கு பாடமாக உணர்த்தியவர் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். ஒருவரே.
பேரறிஞர் அண்ணாவை நேசித்தார். தி.மு.க.வில் இருந்தபோது, கட்சி, சின்னம் ,
கொள்கை, வண்ணங்கள் ஆகியவற்றை துணிச்சலாகவும், தைரியமாகவும்,
ஆக்கபூர்வமாகவும் திரைப்படங்களில் புகுத்தினார்.
புரட்சி தலைவரைப் பற்றிய பல அரிய தகவல்கள், வெளிவராத செய்திகள் நிறைந்த புத்தகம் இது. எழுத்துப் பிழை இல்லாத புத்தகம் இது.
தொடரும்.......!!!
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
புரட்சித்தலைவர் அவர்கள் உரையாற்ற, அதை அன்னை ஜானகி அவர்கள் உன்னிப்பாய் கவனிக்கும் அசத்தலான புகைப்படத்தை பதிவிட்ட சகோதரர் திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி !
-
-
-
-
-
-
-