He had already acted in a movie named singakutty, He is son of Ram kumar's illegal wife.
Printable View
ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2
அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர் ஷங்கர். ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.
இம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது உபரி தகவல்.
அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள் இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும் துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார். அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.
இந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.
http://tamil.webdunia.com/entertainm...20419011_1.htm
டிமாண்டில் ஓகே ஓகே
http://tamil.webdunia.com/articles/1...423046_1_1.jpg
ஒரே படத்தில் உலக ஸ்டார் ஆகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவ*ரின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் *ரீமேக் உ*ரிமைக்கு பாலிவுட்டில் டிமாண்ட் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு இடத்தைப் பார்த்து அதில் வீடு கட்டி குடி போவதைவிட கட்டிய வீட்டில் கப்பென்று படுத்துக் கொள்ளும் சத்யரா*ஜின் பாலிசிக்கு திரும்பியிருக்கிறது பாலிவுட். ஏதாவது படம் நன்றாக இருக்கிறது என்றால் சட்டென்று *ரீமேக் ரைட்ஸ் வாங்கி படமெடுத்துவிடுகிறார்கள். திருட்டுத்தனமாக காப்பியடிப்பதற்கு இது எவ்வளவோ மேல்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் *ரிசல்டைப் பார்த்து ஆச்ச*ரியப்பட்ட மும்பை பார்ட்டிகள் படத்தின் *ரீமேக் ரைட்ஸ் கேட்டு முற்றுகையிட்டிருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் என்பது இப்போதைக்கு உதயநிதி கையில்தான் இருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainm...20423046_1.htm
Enna koduma sir ithu...? :banghead:
ஷங்கர் - விக்ரம் : முடிவானது கூட்டணி!
http://cinema.vikatan.com/images/Art...nkarvikram.jpgஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடி முடித்து விட்டார்கள். ஷங்கரின் அடுத்த நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) ஷங்கரின் படத்தில் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
இவ்வாறு படத்தின் பணிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஷங்கர் படத்தின் நாயகன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்தனர்.
சூர்யா மற்றும் விக்ரம் இருவரிடம் ஷங்கர் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. சூர்யா மற்றும் விக்ரம் இருவரின் தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு சூர்யா தான் நாயகன் என முடிவு செய்து விட்டதாக செய்திகள் வலம் வந்தன.
ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிவுற்ற உடன் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
கபிலன் இப்படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதி முடித்து கொடுத்து விட்டார் என்பது கொசுறு (கபாலி) தகவல்!
http://cinema.vikatan.com/index.php?...d=9&Itemid=103
மாற்றாளுடன் பிரகாசமான நடிகர்: கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி!
சில பல மாதங்கள் முன்னாடி தமிழில் முன்னனியில் இருக்கும் நடிகரின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது. ஆனால் இப்பொழுதுதான் அந்த செய்தி வெளியில் கசிய ஆரம்பித்துள்ளது. படப்பிடிப்பில் ஒருநாள் மாவீர நடிகையின் காட்சியை படமாக்க அயன் இயக்குனர் விரும்பினாராம். அதனால் தனது உதவியாளரிடம் நடிகையை அழைத்து வர சொன்னாராம். பல முறை கதவை தட்டியும் நடிகை ஹோட்டல் அறை கதவை திறக்கவில்லையாம். இதனால் பயந்து போன உதவியாளர் போன் செய்தாராம். அப்போது நடிகை இயக்குனரிடம் தான் வருவதாக கூறி சொல்ல சொல்லி போனை அணைத்து விட்டாராம்.
சென்ற உதவியாளர் இயக்குனரிடம் திட்டு வாங்கிய பின் மறுபடியும் நடிகையை அழைக்க அவருடைய ரூமுக்கு வந்துள்ளார். அப்போதுதான் அந்த நடிகை பிரகாச* நடிகரின் அறையில் இருந்து அரை குறை ஆடையுடன் தனது அறைக்கு வந்துகொண்டிருந்திருக்கிறார்.
இதை பார்த்த உதவியாளர் நமக்கேன் பெரிய இடத்து விவகாரம் என்று விட்டு விட்டாராம். ஆனால் ஒரு உண்மையை எவ்வ*ளவு நாள் தான் பொத்தி வைக்க முடியும். தண்ணீரில் போட்ட பந்து போல மேலே வந்து தானே ஆக வேண்டும்!
http://www.tamilcnn.com/archives/8427.html
தமிழ் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக: பின்வாங்கிய முன்னனி நடிகர்கள்!
இதுவரை காலமும் அதாவது எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கோடை காலத்தில் முன்னனி நட்சத்திரங்களின் படங்களை ரிலீஸ் செய்து வந்தனர்.கோடையில்தான் மற்ற நாட்களைவிட அதிகமாக கும்பலும் இருக்கும் வசூலும் குவியும். கோடையில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய முன்னனி கதானாயகர்களின் படங்களைப்பார்த்தாலெ புரியும். ரஜினியின் படையப்பா 1999 ஏப்ரல் 10-ந்தேதியும், கமலின் இந்தியன் 1996 மே 9-ந்தேதியும் ரிலீசானது. இதுபோல் விஜயின் கில்லி, அஜீத்தின் சிட்டிசன், சூர்யாவின் அயன், விக்ரமின் சாமி போன்ற மெகாஹிட் படங்கள் கோடை காலங்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டன. கார்த்தியின் பையா படமும் 2010 கோடையில் வந்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கோடை காலத்தில் பெருமளவு படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த கோடையில் ஏப்ரல், மே மாதங்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வருகின்றன.
கமலஹாசனின் விசுவரூபம், அஜீத்தின் பில்லா-2, சூர்யாவின் மாற்றான், கார்த்தியின் சகுனி போன்ற படங்களை கோடையில் ரிலீஸ் செய்யப் போவதாகத்தான் படப்பிடிப்பு துவங்கும்போது அறிவித்தனர். ஆனால் அப்படங்கள் வரவில்லை.
பெப்சி தொழிலாளர் போராட்டம் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. எனவே திட்டமிட்டபடி கோடையில் அப்படங்களை வெளியிட முடியவில்லை. ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பயந்தும் சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எல்., கிரிக்கெட் சினிமாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் ரிலீசான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிகரமாக ஓடுகிறது.
http://www.tamilcnn.com/archives/8162.html
வேந்தர் பிலிம்ஸில் சகுனி
பா*ரிவேந்தர் குடும்பத்தின் வேந்தர் பிலிம்ஸ் தமிழின் சமீபத்திய வரவு. கோடிகள் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் பிரமாண்டப் படங்களை அதைவிட பிரமாண்டப் பணத்திற்கு வாங்கி வெளியிடுகிறார்கள்.
கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சகுனி படத்தை வேந்தர் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தில் சலீம் கௌஸ் வில்லனாக நடித்திருந்தார். அவரது வில்லத்தனம் சிவகுமார் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதனால் சலீம் கௌஸை மாற்றி பிரகாஷ்ரா**ஜ் வைத்து படத்தை முடித்துள்ளனர். இந்தப் படத்தைதான் வேந்தர் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
சகுனிக்கு வெறந்தர் பிலிம்ஸ் மொத்தமாக 23 கோடிகள் தந்திருப்பதாக கூறுகிறார்கள்.
http://tamil.webdunia.com/entertainm...20425034_1.htm
Thenrale ennai thodu - jaishree
https://fbcdn-sphotos-a.akamaihd.net..._4926362_n.jpg
தொழிளாலர் தினத்தில் விஸ்வரூபம் எடுக்கும் உலக நாயகன்!
http://www.tamilfun.com/wp-content/u...50tamilfun.gif
தமிழ் சினிமாவின் சாதனை நாயகன் நம் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் இப்போது பெரும் பொருட் செலவில் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம். இத்திரைப்படத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவராத அளவுக்கு ரகசியமாக காத்து வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு விடயமும் வெளியில் போகக்கூடாது என்று படத்தில் பணிபுரியும் தொளிளாலர்களுக்கு கமலே கண்டிப்போடு கூறியுள்ளாராம். படத்தின் பீ ஆர் ஓவுக்கே இந்த கெதிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்தது. இப்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. கமல் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
அன்று உழைப்பாளர் தினம் என்பதால், அன்றே தனது படத்தின் டிரைலரை கமல் வெளியிடப் போகிறாராம்.
முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.
30 நொடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
http://www.tamilcnn.com/archives/9357.html
ஜெயா தொலைக்காட்சியில் விஸ்வரூபம்?
திமுக ஆட்சியில் இருக்கையில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயா தொலைக்காட்சியும் முக்கியமான படங்களின் உ*ரிமையை கைப்பற்றும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வேலாயுதம் படத்தின் தொலைக்காட்சி உ*ரிமையை வாங்கியது. மேலும் அப்படத்தின் சைலண்ட் பார்ட்னர்களில் ஜெயா தொலைக்காட்சியும் ஒன்று என கிசுகிசுக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸை போல ஜெயா தொலைக்காட்சி சார்பில் ஜெயா பிக்சர்ஸ் என்ற பெய*ரில் தயா*ரிப்பு நிறுவனம் தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முதல் விநியோகம் கமலின் விஸ்வரூபம் எனவும் கதைகள் உலவுகின்றன.
கமலின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபம் படத்தின் புரமோ மே ஒன்று வெளியிடப்படுகிறது. திரையரங்குகளில் இதனை ரசிகர்கள் மே ஒன்று முதல் கண்டு களிக்கலாம்.
http://tamil.webdunia.com/entertainm...20428038_1.htm