-
லூஸ் ஆறுமுகம் அவர்கள் நடிகராக மட்டுமின்றி நல்ல எழுத்தாளரும் கூட. பேசும் படம் பத்திரிகையில் தொடர்ந்து அவர் பெயரில் கட்டுரை இடம் பெறும். எழுத்தாளர் என்றாலும் அவர் சொல்ல சொல்ல கட்டுரையை ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் எழுதி வந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
-
மாற்றுக் கொள்கையுடையோர், அரசியல் சார்புடையோர், என வித்தியாசம் பாராமல், அனைவருடனும் பெருந்தன்மையுடன் நடிகர் திலகம் நடந்து கொண்டுள்ளார் என்பதற்கு மற்றோர் சான்று. ஸ்ரீ வித்யா நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன் வழங்கி மோகன் காந்திராமன் அவர்கள் தயாரித்து இயக்கிய ஆனந்த பைரவி படத்தினை க்ளாப் அடித்து துவக்கி வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நன்றி என அப்படத்தின் டைட்டில் கார்டில் வரும். அதன் நிழற்படம் இங்கே நம் பார்வைக்கு. அது மட்டுமின்றி இப்படத்தில் ரவிச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள அடைமொழியினைப் பாருங்கள்.
http://i1146.photobucket.com/albums/...ee/ABAIR02.jpg
http://i1146.photobucket.com/albums/...ee/ABAIR01.jpg
-
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தாங்கள் அளித்துள்ள டைட்டில் கார்டு பார்க்கும்போது, திரு. விஜயகாந்த் மூன்றாவது புரட்சிக்கலைஞர் போலிருக்கிறது. ஏனென்றால், நடிகர்திலகம் நடித்த கவரிமான் படத்தின் டைட்டிலில் நடிகர் விஜயகுமாருக்கும் 'புரட்சிக்கலைஞர்' என்று டைட்டில் போட்டிருப்பார்கள்.
'புரட்சிக்கலைஞர்' ரவிச்சந்திரன்
'புரட்சிக்கலைஞர்' விஜயகுமார்
'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த்
இந்த வரிசையில் நிற்கும் அடுத்தவர் யாரோ..?
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் மறைவுக்கு நீங்கள் அளித்துள்ள அஞ்சலிப் பதிவு மனதைத் தொடுவதாக அமைந்துள்ளது. சென்னைத்தமிழில் பேசி தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டவர் லூஸ் மோகன். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளுக்கு நல்ல தீனி போட்டவர்.
-
டியர் கார்த்திக் சார்,
நன்றி! ஒரு சிறு திருத்தம். 'புரட்சிக்கலைஞர்' விஜயகுமார் என்று டைட்டிலில் போட்டது 'கவரிமான்' காவியத்தில் அல்ல... 'பைலட் பிரேம்நாத்' காவியத்தில் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டைட்டிலின் நிழற்படம் இதோ.
http://i1087.photobucket.com/albums/...00212720-2.jpg
-
"திருவிளையாடல்" திரைக்காவிய திடீர் மறுவெளியீட்டைப் பற்றி என்னத்த சொல்ல..,என்னத்த செய்ய....
'ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது'
நமது தலைவரின் "பராசக்தி" பாடல் இந்தத் தருணங்களில் நெஞ்சில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது..!
'நெஞ்சு பொறுக்குதில்லையே....நெஞ்சு பொறுக்குதில்லையே'
http://www.youtube.com/watch?v=JgUOy...feature=relmfu
15.9.2012 தேதியிட்ட 'மாலை முரசு' நாளிதழில் வெளியான விளம்பரம்:
http://i1110.photobucket.com/albums/...GEDC6637-1.jpg
இனி விவாதிக்க வேண்டாம் என்றாலும் மனசு கேட்கவில்லை..அதனால் தான் பதித்தேன்..!
இந்த நிலையிலும், "திருவிளையாடல்" டிஜிட்டல் வடிவம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல் ஒரு தேனான செய்தி..!
சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த சிரத்தையோடு - இதுபோன்ற அபத்தங்களை தவிர்த்து - நிதானமாக எந்தவொரு சிக்கலுமில்லாமல் சிறந்த முறையில் உலகமெங்கும் வெளியிட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே நமது பிரார்த்தனை. முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாக் கொண்டாடிய இக்காவியம் வருகின்ற டிஜிட்டல் மறுவெளியீட்டிலும் நிச்சயம் வெள்ளிவிழாக் கொண்டாடும்.
-
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக வழக்கம் போல் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டியிருக்கும் சுப்புவிற்கும் நான் சொல்வது என்னவென்றால் திருவிளையாடல் படத்தைப் பொறுத்தவரை அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என நம்பிக்கை கொள்வோம். கடந்த எட்டு வருடங்களாக நமது மய்யத்தில் இயங்கி வரும் நடிகர் திலகத்தின் திரியில் அமங்கலமான சொற்களை நாம் உபயோகிப்பதே இல்லை. எப்போதும் நமது வார்த்தைகளில் கனிவு பணிவு மற்றும் நாகரீகம் நிறைந்திருக்கும். அந்த மாற்றை குறைப்பது போல் உள்ள வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாமே.
நாம் யார் பக்கமும் சேர வேண்டாம். நமக்கு நமது படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனபதே எண்ணம். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். படத்தை மெருக்கேற்றுவதற்காக மிகுந்த பொருட்செலவை முதலீடு செய்திருக்கும் பரமசிவன் அவர்களுக்கு இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று சொல்வதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா என்று யோசித்தால் உண்மை புரியும்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஒருவரின் மனநிலையை நாம் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதற்கு we have to put ourselves in their shoes என்பார்கள். இது அனைவருக்கும் பொருந்தும். ஆக நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும்.
யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
அன்புடன்
-
பகுத்தறிவுப் பகலவனுடன் கலையுலகக் கதிரவன்
http://i1110.photobucket.com/albums/...Periyar1-1.jpg
17.9.2012 : தந்தை பெரியார் அவர்களின் 134வது பிறந்ததினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
டியர் mr_karthik,
தங்களுடைய அன்பான பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!
தாங்கள் பதித்துள்ள சென்னை 'சாந்தி' திரையரங்கம் குறித்த தங்களின் மலரும் நினைவுகள் பதிவு அருமையோ அருமை..!
நமது தலைவரைப் பொறுத்தமட்டில், அரசியலில் அவர் இருந்தவரை, கொள்கைச்சிங்கமாகவே வாழ்ந்தார். நேர்மை, தூய்மை, நாணயம், கொண்ட கொள்கையில் உடும்புப்பிடி, கொடுத்த வாக்கை எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் காப்பாற்றுதல், இன்னும் இதுபோன்ற அவரது எத்தனையோ சிறப்பியல்புகளினால் பெருந்தலைவருக்குப் பிறகு அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று புகழப்பட்டார். இன்றும் புகழப்படுகிறார். என்றென்றும் இதே உச்சநிலையில் வைக்கப்பட்டு மக்களால் போற்றப்படுவார். அது ஒன்றுபோதும் நமக்கு..!
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார் , கார்த்திக் சார், ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார், முரளி சார் மற்றும் திருவிளையாடல் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்ட மற்றும் என்னைபோன்ற அனைத்து ரசிகர்களின் உணர்வும் ஒன்றுதான்.
ஆனால் ஒன்று, நடிகர்திலகம் அவர்களைப் பொறுத்தவரை, அவர் பராசக்தியில் அறிமுகமானதிலிருந்தே அவருடைய திரையுலக வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைக் கடந்திருக்கிறார். ஆனால் இறுதி வெற்றி நடிகர்த்திலகத்திற்கே கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
திருவிளையாடல் திரைப்பட மறு வெளியீட்டைப் பொருத்தவரையிலும் அதே நிலைதான் வரும். வெற்றி பெறும், வெற்றி பெறுவோம் .