Originally Posted by
g94127302
அன்புள்ள ரவி கிரன் ,
தலைவர் ஸ்ரீதரிடம் " எனக்கு கூட அழுமுஞ்சி " என்ற பெயர் உள்ளது என்று சொன்னதை போல ஸ்ரீதர் பேட்டி கொடுத்துள்ளார் என்பது மிகுந்த நகைச்சுவை மட்டும் அல்ல , பொய் கலந்த கற்பனை - அப்படி அவர் கூற வாய்ப்பே இல்லை - நீங்கள் குறிப்பிட்டதை போல அவர் ஏற்கனவே பல படங்களில் " நகைச்சுவை" என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று நிரூப்பித்துள்ளார் - வெறும் பாடல்களில் மட்டும் சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லவில்லை - உண்மையிலேயே எடுத்துக்காட்டாக விளங்கினார் - " எங்கள் மாமா " என்ற ஒரு படம் போதும் - எப்படிப்பட்ட சோதனைகளையும் நகைச்சுவை உணர்வுடன் தீர்க்கமுடியும் என்று திட்டவட்டமாக சொல்வதற்க்கு - இந்த ஆவணம் சொல்லவதை கேளுங்கள் ஸ்ரீதர் குடுக்காத ஒரு பேட்டி எவள்ளவு பொய் கலந்த கற்பனை என்று
அன்புடன் ரவி