**
அவள்..அவர்.. அவர்கள்..
*****
அவள்..
**
”உனக்குத் தெரியுமா.. எனக்கு இதுவரை இரண்டு விவாகரத்து ஆகிவிட்டது. என் மூத்தபையனுக்கு எட்டு வயது இரண்டாவது பொண்ணுக்கு ஆறு வயது..இதோ இந்தச் சின்னது இருக்கே இதற்கு இரண்டு வயது.. தனியாக இருக்காளே மடங்குவாள் நிறையச் சொத்து என்றெல்லாம் நினைக்காதே ..எனது பேங்க் பேலன்ஸ் 74 டாலர் தான்..புரிஞ்சுதா”
நான் சீறித் தான் விழுந்தேன்..ஆனால் வந்திருந்த பக்கத்து வீட்டு மோட்டார் பைக்காரன் சிரித்தான்..
“எனக்குக் குழந்தைகள் பிடிக்கும்.. நான் அவர்களுடன் விளையாடுகிறேன்..அவ்வளவு தான்..”
“அவ்வளவு தானே.. சரி இப்போது விளையாட வரமாட்டார்கள்..அப்புறம் பார்க்கலாம்” முகத்தில் கஷ்டப் பட்டுசிரிப்பை வரவழைத்து க் கொண்டு கதவை அவன் முகத்தில் அறைந்து தாழிட்டேன்..
என் கஷ்டம் எனக்கு.. வேலைக்கு இண்டர்வியூ போனால் கிடைக்க மாட்டேன் என்கிறது.. கார் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது.. அதுவும் தோற்றுவிட்டது.. அந்த லாயர் அவரும் ஒரு காரணம்..என்ன நமட்டுச் சிரிப்பு..ச்சும்மா செவேல் என்றுதான் இருக்கிறார்.. தலைமுழுக்க நரைமுடி வயதானவர்.. யெஸ் போய்க் கேட்போம்
லாயர்..
**
“என்ன செய்யப் போகிறீர்கள் எனக்கு” என்று அந்தப் பெண் திடுதிப்பென ஆஃபீஸுள் நுழைந்து கேட்டால் எனக்குச் சிரிப்பு தான் வந்தது
நான் உனக்கு என்ன செய்யவேண்டும்..
இதோ பாருங்கள் லாயர்.. கார் ஆக்ஸிடெண்டில் என் வழக்கு வென்றிருக்கும்..வெல்லாததற்கு நீரும் ஒரு காரணம்..
நான் காரணமில்லை லேடி நீ..உன் உடை..உன் அலட்சியமான கெட்ட வார்த்தைகள்…
உன்னைக் கெடுப்பேன் லாயர்…
இதையே தான் சொன்னாய் ஆங்கிலத்தில் இங்கு சொன்னது போல்..
இந்த பாருங்கள்.. நான் கொஞ்சம் எமோஷனல்.. எனக்கு வேலை இல்லை எனக்குக் கிடைக்க இருந்த வேலையும் போய்விட்டது..ஒருவேலை வேண்டும்..
அவளைப்பார்த்தேன்.. நல்ல வெளிர் மரக்கலர் கூந்தல்.. உடையில் அலட்சியம் கண்களில் அலட்சியம் கூர்மையான மூக்கு.. இவளுக்கு என்ன வேலை தர முடியும்..
இங்கே ஃபைலிங் வேலை இருக்கிறது..ஆனால் நோ பெனிஃபிட்ஸ்..ஐ மீன் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எக்ஸடீரா..
ஓ.கே ஐவில் டேக் த ஜாப்..
அவள்..
**
லாயரிடம் சொல்லி விட்டேனே தவிர குழந்தைகளை என்ன செய்வேன்.. அட பக்கத்து டோர் நெய்பர் ஆபத்பாந்தவ தாடிவாலா..
ஹாய்
ஹாய் லேடி
முறைத்தேன்.. எனக்குக் கொஞ்சம் ஒரு சுமாரான வேலை கிடைத்திருக்கிறது.. நீயோ பைக் ரேஸர்..இப்போது சும்மா தான் இருப்பதாகச் சொல்லியிருந்தாய்..என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாயா
டன் லேடி
(மறுபடி லேடி என்கிறான்..பார்த்துக்கிறேன் என்கிறானே .. அதுவரை ஓ.கே..)
மறு நாள் முதல் சேர்ந்து ஒருவாரம் ஓகேயாய்த் தான் எனக்குப் போனது..ஈஸி வேலை தான்..
ஏதோ ஒரு ஃபைலில் உள்ள பேப்பர்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது..இது என்ன ஒருகேஸ்.. ஒரு புறநகர்ப்பகுதியில் வாழும் குடும்பங்கள் ஒரு கம்பெனியிடம் வழக்கு தொடுத்து தள்ளுபடி ஆகியிருக்கிறது..பிஅண்ட் ஜி என்கிற அந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் அந்தபுறநகர்க் காலனியில் தண்ணீரில் கலந்து அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது என்பதை இல்லவே இல்லை என்றிருக்கிறார்கள்.. ஹை சுவாரஸ்யமாக இருக்கிறதே..இது உண்மையா..அதெப்படி 300க்கும் மேற்பட்ட நபர்கள் சொல்வது உண்மையில்லாமல் போய்விடும்..செக் பண்ணலாம்.. இந்த ஹென்க்லியில் இருக்கும் பி.ஜி கம்பெனிபற்றி ஆவணங்கள் காப்பகத்திற்குப் போகலாம்.. நாளைக்கே..
மறு நாள் எழுந்து கொஞ்சம் தாழ்வான கையில்லாத பனியனைப் போட்டுக் கொண்டேன்..காரணமாய்த்தான்.. என் ஓட்டைக் காரைலொக் லொக்கென்று இரும வைத்து அந்த இடம் சென்று கூட்டிவந்திருந்த சின்னக் குட்டியை இடுப்பில் வைத்து அங்கு சென்றால் அங்கிருந்த பியூன் என்னை, என் கையில்லாபனியனை.. அதன் கழுத்து விளிம்பைப் பார்த்து மனதில் கற்பனையின் விளிம்பை அடைந்திருந்தது அவனது பார்வையில் தெரிந்தது..
என்ன வேண்டும் மேடம்
ஒரு ஃபைல்பார்க்க வேண்டும் சில மணி நேரம் பரவாயில்லையா..
வழக்கமாக மற்றவரென்றால் மாட்டேன்..குழந்தையை என்னிடம் கொடுங்கள் டா வா டியா டாவா..வாடா செல்லம்..
குழந்தையை வாங்கும் சாக்கில் விரலுரசினான்.. பொறுக்கி..போகட்டும்..
உள்சென்று தூசு எல்லாம் இல்லாமல் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பல கம்பெனிகளின் ஃபைல்களில் அந்த பி அண்ட் ஜி தேடி கிடைத்துப் பார்த்தால்..
உண்மை தான்..அந்த த் தொழிற்சாலைக்கழிவுகளில் க்ரோமியம் குடி நீருடன் கலக்கத் தான் செய்கிறது..ஆனால் இல்லை என்று குடியிருப்பவர்களை ஏமாற்றிவிட்டார்கள் கம்பெனிக்காரர்கள் பாவிகள்..
இதை லாயரிடம் சொல்லலாமே.. சரி கொஞ்சம் போய் அந்த ஹென்க்லி குடியிருப்பை நாளை ரவுண்ட் விட்டு வரலாம்..
மறு நாள் போய் ரவுண்ட் விட்டு வந்தேன்.. பின் மறுபடியும் ஆவணக்காப்பகத்துக்குச் சென்று அந்த ஃபைலை கனகாரியமாக எடுத்து, ஜொள்ளனிடம் என் உடலழகைக் கொஞ்சம் காட்டி அந்த ஃபைலை போட்டோகாப்பி எடுத்து லாயரிடம் காண்பிக்க அலுவலகம் வந்து என் அறைக்கு வந்தால் அங்கு என் அறையான க்யூபே இல்லை..சேரில்லை.. டேபிள் இல்லை..
என்னாயிற்று..எங்கே அந்தக் கிழம்.. கிழ லாயர்..
லாயர்
**
“உனக்கு வேலையே இல்லை உன் அறை எப்படி இருக்கும்” சீறி என்னிடம் வந்த அவளிடம் சொன்னேன்.. “இது என்ன உன் வீடா ஆஃபீஸ்.. நீ ஒரு சாதாரண கிளார்க்..ஒருஃபோன் கிடையாது.. நாலு நாட்கள் வரவில்லை..எனில் காலி பண்ணிவிட்டேன்..”
“லாயர்..” கத்தினாள் அவள் “உங்களுக்காகத் தான் நான் வேலை பார்த்தேன்..இந்த பி அண்ட் ஜி கம்பெனி பற்றிப் படித்தேன்..இதில் டிஃபமேஷன் சூட் போட்டோமானால் நீங்கள் ஜெயிக்கலாம்..அதை விட கெமிக்கலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் நஷ்ட ஈடு வாங்கித் தரலாம்..”
“லுக் லேடி..கேஸ் கொடுப்பதற்கு எனக்கு உள்ள வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதற்கே நேரமில்லை.. நீ வேறு புதுகேஸ்..உனக்கு வேலை இல்லை எனில் இல்லை தான்” எனச் சொல்லி முடிக்க கொஞ்சம் முறைத்துப் பின் சென்று விட்டாள்..
பின் எதற்கோ நண்பன் ஒருவனிடம் தொடர்புகொண்டு பேசுகையில் அவன் ஹென்க்லி நகர், பி ஜி கம்பெனி ஏமாற்றல் என்பதைப் பற்றிச் சொல்ல எனக்கு ஃப்ளாஷ் அடித்தது..இதைத்தானே அவள் சொன்னாள்..
ஏதோ பேப்பர்கள் சேகரித்ததாக.. அவள் அட்ரஸ் ..இங்கு தானே எழுதிவைத்தேன்..ஓஹ்..இதோ இதில் இருக்கிறது..போய்ப்பார்க்கலாம்..கேட்கலாம்..
*
அவள்:
**
“எதற்காக வந்தீர்கள்” சாதாரணமாய்த்தான் கேட்க நினைத்தேன்.. ஆனால் என் சுபாவம் பேச்சு சீறலாய் வர லாயர் முகத்தில் புன்னகை..
சரியம்மா.. நான் தப்பு பண்ணிவிட்டேன். மறுபடி ஜாய்ன் செய்
காரணமில்லாமல் நீங்கள் வரமாட்டீர்களே..அதே சாலரிக்கெல்லாம் வரமாட்டேன்
சரி..இந்த சாலரி ஓக்கேயா
ஓக்கே மெடிக்கல் பெனிஃபிட்ஸ் வேண்டும்.
ஷ்யூர்..ஆனால் அதற்குமுன் அங்கே பாதிக்கப்பட்ட குடும்ப நபர்களைச் சந்திக்கவேண்டும் நீ.. செய்வாயா..
கேஸ் (பெட்ரோல்)
எடுத்துக்கொள்..
என் பயணம் ஆரம்பமானது
*
அவர்கள்:
முதலில் ஒரு பெண்மணியைப்பார்த்தேன்.. நீ லாயரா என்றாள் முகத்திலடித்தாற்போல் பேசமாட்டேன் போ என்றுவிட்டாள்
பின் ஒரு குடும்பம்.. போனால் அங்கு ஒரு இளவயதுப் பெண்ணுக்குப் பாதிப்பு சருமம் வரண்டிருந்தது..மற்றவர்களும் சோர்வாகத் தான் இருந்தார்கள்
இப்படியே சிலபல குடும்பங்கள் தனி நபர்கள் எனப்பார்க்கையில் ஒட்டுமொத்தமாக அந்தத் தண்ணீரில் கலக்கப்பட்ட விஷத்தின் பாதிப்பு அவர்களிடம் இருந்தது கண்கூடு.. எனக்கோ கண்கள் கலங்கித்தான் போயிற்று
கடவுளே.. நிம்மதியாய் இருக்க கடன் உடன் வாங்கி வீடுகட்டிக்கொண்டு ஒதுக்குப்புறமாய் இருக்க இவர்கள் வந்தால் இவர்களின் வாழ்வில் ஒரு புயலா
எல்லோரும் ஒன்றே ஒன்று சொன்னார்கள்..அது பெரிய கம்பெனி நாங்கள் சாமான்யமானவர்கள் பெட்ரோல் பங்க், பார், ஏதோ ஆஃபீஸ் என வேலை செய்பவர்கள்..எங்களால் தனியாக எப்படி எதிர்க்க முடியும்..
தனியாக முடியாது.. க்ரூப்பாக எதிர்க்கலாம்.. நான் பெட்டிஷன் போடுகிறேன் என்று லாயரிடம் சொல்லி பெட்டிஷன்போட மறு நாள் தேடிவந்தான் ஒருவன்.. பி.ஜி கம்பெனி லாயர்
ஸ்மார்ட்டா தான் இருந்தான்.. லாயருடன் நானும் சென்றேன்..ஸ்ட்ரெய்டாக விஷயத்திற்கு வந்தான்..100000 டாலர்கள் நஷ்ட ஈடு வேண்டுமால் தருகிறோம்..
எனக்கு ஓகே தான் 300குடும்பம் ஒரு லட்ச டாலர்.. லாயர் ம்ஹூம்.. முடியாதென்று விட்டார்..எத்தனை உயிர்கள் அதற்கு ஒருலட்சமா.. போய்யா போ
உங்களுக்கு வேண்டுமானல் தனியாக…
லாயரின் முகம் அவ்வளவு சிவக்கும் என எனக்குத் தெரியாது.. வெளி வழியைக் காட்டினார் அவனுக்கு..
மறுபடியும் நாங்கள் கலந்தாலோசித்து 100 மில்லியன் டாலர்கள் கேட்கலாம் என ஃபைல் பண்ண, மறுபடியும் பி.ஜி கம்பெனி இந்ததடவை ஒரு பெண்.. தடாலடியாக நீட்டாக டிரஸ்பண்ணி வந்தவள் என்னை, லாயரை, மற்றும் எங்களுடன் அமர்ந்திருந்த கலீக்ஸை அல்பமாய்ப் பார்த்து இவ்வளவு பைசாவை க் கொடுக்க நாங்கள் என்ன சாரிட்டியா.. எனக்கேட்க எனக்கு வந்ததே கோபம்
“ஆமாண்டி.. அந்த க் குடும்பங்கள் எல்லாம் உங்களை மாதிரி பைசாக்காக கிராதகக் கம்பெனிக்குல்லாம் வககால்த்து வாங்கறாங்க .. நீங்க கொடுக்கற பைசாவுல ஸ்விம்மிங்க் பூல் கட்டிக்குளிப்பாங்கன்னு தானே நினைக்கற நீ” என நான் கத்திய கத்தில் அவளுக்கு மூச்சுவாங்கியது..அங்கிருந்த தண்ணீரைக் குடிக்கப் போனாள்..
நான் அமைதியாகச் சொன்னேன்..” உங்களுக்காகத் தான் அந்த க் குடியிருப்பிலிருந்து தண்ணீர் ஸ்பெஷலாக வரவழைத்திருக்கிறேன்..குடிங்க..குடிடி” என்றதும் குடிக்காமல் வைத்துவிட்டாள்..
எனது வேலைகள் தொடர்ந்தன.. முதலில் பார்த்த பெண்மணி உறுத்திக் கொண்டே இருந்தாள் மனதில்..பின் அவளையும் சந்தித்தால்தமிழில் பேதடிக் எனச் சொல்வோமே அந்த நிலைமையில் இருந்தார் அவர்.. கான்ஸர் முற்றிய நிலை..காரணம் தண்ணீர்.. செலவுகள் பேபண்ணமுடியாத நிலைமை..மருத்துவச் செலவுக்குப் பணமில்லை..கேட்க மறுபடியும் என் நெஞ்சில் ரத்தம்..
அவர்களைக் கூட்டமாக சந்திக்க வைத்துப் பேசினோம்.. அதற்குள் எதிர்த்தரப்பு பி.ஜி கம்பெனி லாயர் பேசியதால் கோர்ட் குறைந்த பட்சம் 300 பேர்களிடமாவது கையெழுத்து வாங்கி வரவேண்டும்..அப்பொழுது தான் நஷ்ட ஈடு பற்றிப் பேசலாம் எனச் சொல்ல..
நான் ஓடினேன் ஓடினேன்..ஒவ்வொரு இடத்திற்காய் ஓடினேன்.பார், பெட்ரோல் பங்க், கறிகாய்க்கடை க்ரோஸரி ஸ்டோர் ஒருஇடம் பாக்கியில்லாமல் அங்கிருந்த பாதிக்கப் பட்டவர்களிடம் இரண்டே நாட்களில் (கோர்ட் கொடுத்த டைம் 3 நாள்) கையெழுத்து வாங்கி ஆப்பொனண்ட் லாயரிடம் காண்பிக்க…
அவர் அதிர்ந்தார்..
இது எப்படி நிகழ்ந்தது.. என என் அலுவலக நண்பர்கள், லாயர் இருக்கையில் என்னிடம் கேட்டார்..
“ராப்பகலாக தேடி த் தேடி 634 நபர்களுடன் தாச்சித் தூங்கி இந்தக் கையெழுத்து வாங்கி வந்திருக்கிறேன்” என்றேன் சிரிக்காமல்..மற்றவர்கள் சிரிக்க எதிர்க்கட்சி லாயர் முகத்தில் ஈயாடவில்லை..
பின் கோர்ட் கேஸ் நடந்துமுடிய ஜெயம் எங்களுக்கு..இல்லை இல்லை சோகத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு.. கிட்டத்தட்ட 100 மில்லியன்.. லாயர் ஃபீஸ் போக மிச்சம் 80வது கிடைக்கும்..
ஒரேசந்தோஷமாய் விஷயத்தை ஷேர் பண்ண லாயர் ஆஃபீஸ் போனால் சிவந்த நரைத்தலைக் கிழத்தின் முகமே மாறியிருந்தது
லாயர்:
சந்தோசமாக இருந்த அவளின் முகத்தை சலனமில்லாமல் ஏறிட்டேன்..
ஸீ.. நான் பார்ட்னர்களுடன் கலந்தாலோசித்தேன்..இந்த வெற்றிக்கு மூல காரணம் நீ என்றார்கள்..
நிறுத்தினேன்..அவளது இதயத் துடிப்பு எகிறுவதை என்னால் உணர முடிந்தது
“அவர்கள் உனக்கு 50000 டாலர் கொடுக்கலாம் உன் பங்கிற்கு என்றார்கள்..ஆனால்”
அவள்முகம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிவப்பாக ஆரம்பித்தது
“ஆனால்.. என்ன ஆனால்.. உங்கள் புத்தி எனக்குத் தெரியுமே.. நான் இதற்காக எத்தனை பாடுபட்டேன் தெரியுமா மோட்டார் பைக்காரன் பார்த்துக்கொண்டாலும் என் குழந்தைகளைப் பிரிந்து ராப்பகலாக ஒவ்வொரு வீடாக ப் போய் ஓவ்வொருவரையும் பார்த்து கன்வின்ஸ் பண்ணி அவர்களுக்கும் பைசா கிடைக்கும் நம் லாயர் ஃபீஸ் கம்மிதான் என்றெல்லாம் சொல்லி கையெழுத்து வாங்கி..”
அவளுக்கு மூச்சிரைத்தது..”இந்த வெற்றியில் எனக்குஒவ்வொரு அணுவிலும் பங்கிருக்கிறது.ஆனால் நீங்கள் என்னசொல்லியிருப்பீர்கள் என்று தெரியும்.. நான் ஒன்றும் உதவாதவள்.. ஜூனியர் ஸ்டாஃப் என்றெல்லாம் சொல்லித் தட்டிக் கழித்திருப்பீர்கள் தானே .. உன்னைக் கெடுப்பேன் .. நான் போகிறேன்”
“எரின்” என அவளை அழைத்தேன்..இந்தா இந்த செக் வாங்கிக் கொண்டு போ…
அவள் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டாள் வெறும் 5000 டாலர் இருக்கும் என நினைத்திருப்பாள் போலும்..
பார்க்கப் பார்க்க அவள் கண்கள் விரிந்தன..அவளால் நம்பவும் முடியவில்லை..
டூ மில்லியன் டாலர்ஸ்.. என்று சொல்லிச் சொல்லிப் பார்த்தாள்
என் முகத்தில் எப்போது புன்முறுவல் மலர்ந்தது என்று எனக்கே தெரியவில்லை
அது சிரிப்பாகவும் மாறிச் சிரிக்க ஆரம்பித்தேன்..சிரித்தபடி பேசவும் செய்தேன்..
“எரின்.. ஆனால் 50000 டாலர் என்பது அவள் உழைப்புக்குக் கம்மி எனப் பேசி இதை வாங்கித் தந்தேன்.. எங்கே மறுபடி சொல்லு அந்தக் கெ.வார்த்தை..”
எரின் கண்களில் அழுகை முகத்தில் சந்தோஷம் உடலில் நடுக்கம் பதற்றம் எல்லாம் கலந்து கட்டி மெல்ல எழுந்து வந்து என்னை அணைத்து “ தாங்க்ஸ் லாயர்..” என்றாள்
**
இது ஜூலியா ராபர்ட்ஸ்,ஆல்பர்ட் ஃபின்னி மற்றும் பலர் நடித்த எரின் ப்ரோக்கோவிச் படத்தின் கதைச்சுருக்கம்
அமெரிக்காவில் சிலவருடம் இருந்த போது – அப்போதைய சி.க கொஞ்சம் நடுத்தரவயது.. நண்பன் வா டாலர் தியேட்டரில் இந்தப்படம் ஓடுது ( புதிய படங்கள் ஓடி முடித்து வேறு தியேட்டரில் போடும்..அதற்குக் கட்டணம் ஒரேஒரு டாலர்..அப்படிப்பட்ட தியேட்டர்களை டாலர் தியேட்டர் என அழைப்பார்கள்) போலாம் எனக் கூட்டிச் சென்ற போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது..ஜூலியா ராபர்ட்ஸ் ப்ரட்டி உமன் பார்த்திருக்கிறேன்..அழகை விட நடிப்பு பிடித்திருந்தது.. மற்றபடி கதையெல்லாம் தெரியாமல் பார்த்த படம்.
பின் தான் இது உண்மைக் கதை என்றும் தெரிந்தது..ரியல் எரின் ப்ராக்கோவிச்சும் படத்தில் ஒருபார் கேர்ளாக வருவார்கள்.. இணையத்தில் நிறைய செய்திகள் இருக்கின்ற்ன
பலவிதமான அவார்ட் வாங்கிய படம்..லாயராக நடித்திருந்த ஆல்ஃப்ரட் ஃபென்னி கலக்கியிருப்பார்..ஜூலியாவும் அந்த வேஷத்திற்குத் தகுந்தபடபடப்பு எனப் பலவிதபரிமாணங்கள் காட்டுவார்..
(அப்புறம் பார்த்த ஜூலியா ராபர்ட்ஸின் படங்கள் நாட்டிங் ஹில் ( நம்ம ஊர் சுமதி என் சுந்தரியின் ஆங்கில ரீமேக்!) ரனவே ப்ரைட் இன்னும் நிறைய..)
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..என்னைக் கவர்ந்த படம்..
ஏதோ ஜாம்பவான்கள்லாம் பெரிய பெரிய கற்களுடன்பாலம் கட்டும்போது இந்த சித்தெறும்பால சின்னத் தம்மாத்தூண்டுக் கல்.. ஓகேயா
(ஃப்ளைட்டுக்குக் கிளம்பாம டைப்படிக்கற ஒரே மனுஷன் நானாத்தான் இருக்கணும்..சிலமணி நேரம் தான்..அப்புறம் ஸ்ஸ்ஸ்ஸொய்ங்க்க்..ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம்)
வாசு பக்கெட்ல நல்ல படமா (ஜூ.ரா) போடுங்க..:) கோபால் மேல்தகவல்கள் சொல்லுங்கள்..அல்லது படம் பிடிக்காது என்னா டேஸ்டுய்யா உனக்கு என்று சொன்னாலும் சரி..
அப்ப நான் வரட்டா..டாட்டா ( கொஞ்ச நேரத்த்ல மறுபடி எட்டிப் பார்த்தாலும் பார்ப்பேன்..)
*
(ரொம்ப நாள் முன்னால் பார்த்ததினால் (பட ரிலீசின் போது மட்டும்) சில புள்ளி விவரங்கள் மாறு பட்டிருக்கலாம் மன்னிக்க :)