கோவை ராயல்
திரை அரங்கில்
நாளை முதல் (31.01.2016)
மக்கள் திலகத்தின்
நடிப்பில்
சத்தியா மூவிஸ் தயாரிப்பில்
உருவான
காவல்காரன்
Printable View
கோவை ராயல்
திரை அரங்கில்
நாளை முதல் (31.01.2016)
மக்கள் திலகத்தின்
நடிப்பில்
சத்தியா மூவிஸ் தயாரிப்பில்
உருவான
காவல்காரன்
இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் திரு சைலேஷ் பாசு அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
13000 பதிவுகளை பதிந்து நமது திரியின் முதன்மை பதிவாளராக திகழும் அன்பு நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்
A beautiful and joyous occasion when #MGR is seen chating with P.R. Bantulu (producer- directer, working with MGR in five films from Ayirathil oruvan) during a domestic function. The act of casually spreading the sandal (Santhanam) paste in his hands, even while talking to Bandulu is very natural. Photo: Kumar Rajendran.
Facebook : Ithayakkani S Vijayan
http://i64.tinypic.com/24mdxer.jpg
wish u happy birthday sailesh sir
புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழா தேசிய விழாவாக கொண்டாட வேண்டும்!
================================================
உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் அரசியல், கலை, வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, வரலாற்று நாயகனாக 99வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடி இன்றும் என்றும் இதயங்களின் மனங்களில் வாழ்ந்து வருபவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன். அடுத்த ஆண்டு எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா.
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!
காலங்கள் மாறினாலும் அழியாத புகழை என்றென்றும் பெற்றிருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இன்றும் மக்கள் மனதில் இறவா புகழுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இருபத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் இன்றும் உலகத்தமிழர் நெஞ்சங்களில் கோயில் கொண்டு நினைவிலும் நின்றிருக்கும் அவர் நினைவை மக்கள் போற்றுகிறார்கள் என்றால் அவர் தான் உண்மையான ஒரே மக்கள் தலைவர்.
பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக் கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.
குறிப்பாக எம்ஜிஆர், அசைக்க முடியாத முதல்வராக, யாராலும் தேர்தலில் தோல்வியடைய வைக்க முடியாத அரசியல் தலைவராக கோலோச்சிய தமிழகத்தில் இன்று அவரது 99வதுபிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் -இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் -அவரது பாடலைப் போலவே மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று மக்கள் திலகமாக மக்கள் தலைவராக இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.
ஆயிரம் பேர் தோன்றலாம் மறையலாம் மக்கள் மனதில் மறையாமல் நின்ற மாபெரும் தலைவன் மக்கள் தலைவன் மட்டுமே என்பதை எவராலும் எக்காலத்திலும் மாற்ற முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். எனவே தான் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால் தான் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.
உலகமெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் அவரது 99வது பிறந்த நாள் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது,
தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற வெந்நிற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் தலைவர் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை.
உலகில் எத்தனையோ தலைவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், மறைகிறார்கள். அவர்கள் வாழும்போது, அவர்களை சமுதாயம் புகழ்வது, இயற்கையான ஒன்றாகும். ஆனால், அவர்கள் மறைந்தபிறகும், அவர்களை மறக்காமல், போற்றி புகழ்ந்து, நினைவில் வைத்து வணங்கும்போதுதான், அவர்களின் உண்மையான புகழ் நிலைத்து நிற்கும்.
அடுத்து வரும் ஆண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவதரித்த திருநாள் நூற்றாண்டு விழாவாக அமையப்போகிறது. அவரது அவதரித்த திருநாளை நூற்றாண்டு விழாவாக தேசியத்திருவிழாவாகவும், உலக விழாவாகவும் கொண்டாக வேண்டுமென்பது இந்த உண்மையான பக்தனின் உற்சாகம் நிறைந்த சந்தோஷ ஆவல்!
பூமிநாதன் ஆண்டவர் (மும்பை
இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதுதான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் பரந்த அறிவு கிடைக்கும் என்ற காரணம் காட்டி மாநிலக் கல்லூரியில் சேர்த்துவிட்டார் என் சகோதரி (தூயநெஞ்சக் கல்லூரியிலேயே இருந்திருக்கலாம். ஏதோ தெரிந்ததை வைத்து நிம்மதியாக வாழ்க்கையைக் கழித்திருக்கலாம்..).
வேண்டா வெறுப்போடு சென்னை வந்தாலும், மிகுந்த விருப்போடு நான் முதலில் பார்த்த இடங்கள் ராமாவரம் தோட்டம்… அடுத்து புரட்சித் தலைவரின் ஆற்காடு இல்லம். அப்போது அவர் முதல்வர். அவரைப் பார்க்க எங்கள் ஊர் எம்எல்ஏ அன்பழகனுடன் ராமாவரம் தோட்டத்துக்குப் போயிருந்தோம். சூரிய தரிசனம் என்பதற்கு நிகரான தரிசனம் அது!
அவரை ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வது மன்னிக்க முடியாதது. அரசியல் தலைவருக்கான வரையறைகள் அனைத்தையும் தாண்டிய அவதார புருஷன்தான். என் வாழ்நாளில் நான் பார்த்த ஒப்பில்லாத மனிதர். அந்த சந்திப்பு, ராமாவரம் தோட்டம், பின்னொரு நாளில் அவரை கோட்டையில் சந்தித்தது பற்றி பின்னொரு நாளில் எழுதுகிறேன்.
எம்ஜிஆர் மறைந்த சில மாதங்கள் கழித்து, நினைவில்லமாக மாறிவிட்ட ஆற்காடு இல்லத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணீருடன் சுற்றிப் பார்த்த ஒரு மழை நாள் இன்னும் மனதில் இருக்கிறது. இல்லத்தின் காவலர் முத்து அடிக்கடி சொல்வது, ‘கடவுள் இருந்தார், எம்ஜிஆர் உருவில்’!
அரசியல், சினிமா, சமூக மதிப்பீடுகள் என அனைத்திலும் என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய இடம் எம்ஜிஆருக்கு உண்டு. வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு, நூறு சதவீதம் உயிர் கொடுத்த பெருந்தகை இந்த புரட்சித் தலைவர்!
தனிப்பட்ட மாச்சரியங்கள், அரசியல் மாறுபாடுகளால் அவர் பற்றி பதிவு செய்யப்பட்ட விமர்சனங்களை நான் இப்போதும் பொருட்படுத்துவதில்லை.
பத்திரிகையாளனான பிறகு, கிட்டத்தட்ட இருபது முறை நான் பார்த்தது அமரர் எம்ஜிஆர் இல்லத்தைத்தான். அவரது ஒவ்வொரு நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் என்னையும் அறியாமல் என் கால்கள் தேடிச் செல்வது அவர் சமாதியை அல்ல… இந்த ஆற்காடு இல்லத்தைத்தான்.. அந்த வீட்டை முழுசாய் பார்த்து முடித்து வெளியில் வரும்போதும், அத்தனை தன்னம்பிக்கை!
சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்கள். தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் இடது பக்கமாக ஆற்காடு சாலையில் தலைவரின் இல்லம்.
தமிழ் சினிமாவின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஆளுமை வாழ்ந்த இல்லம் இது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாராலும் நம்ப முடியாத எளிமையான இல்லம்.
1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தாலும், அதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் ரசிகர்கள் திரளாக வந்து தரிசித்து சென்ற இல்லம் இது. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயித்த பல முடிவுகள் பிறந்த இடமும் இதுதான்.
எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இல்லத்துக்கு வந்து கண்ணீர் மல்க அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதைப் பார்க்க முடிகிறது.
இனி இல்லத்தைச் சுற்றி வருவோம்…
நினைவு இல்லத்தின் தரை தளப் பகுதியில் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வைக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா கேடயமும் நினைவுப் பரிசும் கொடுத்திருக்கிறார்கள். கீழ் தளத்தின் மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே மைக்குகள், செயற்கைக் கோள் ரேடியோ வசதி. இப்போதும் நல்ல கண்டிஷனுடன் இருக்கும் கார் இது என்றார்கள் பாதுகாவலர்கள். இது மக்கள் திலகத்தின் சொந்தக் கார். கடைசி வரை அவர் அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தவில்லை!
முதல் தளத்தில் எம்ஜிஆர் பெற்ற பரிசுகள், டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள், கூலர்ஸ், அந்த பிரத்யேக ஷூ என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் பெருமளவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடலைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது.
பெருந்தலைவரைப் போலவே இந்த புரட்சித் தலைவரும் ஒரு படிக்காத மேதைதான். அவரது நூலகம் இன்னொரு ஆச்சர்யம். கிட்டத்தட்ட ஐயாயிரம் நூல்கள்… பெரும்பாலும் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில நூல்கள் இடம்பெற்ற அந்த நூலகம், எம்ஜிஆரின் அறிவுப் பசிக்கு சின்னமாக நிற்கிறது.
எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அந்த சிறிய அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது தொப்பி, கண்ணாடிகள், பேனாக்கள்.
அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வந்தால், அங்குள்ள அறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக – சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் தமிழ் சினிமாவில் அவர்தான் ராஜாதி ராஜா. பெரும்பான்மையான படங்கள் நூறு நாட்கள் அல்லது வெள்ளி விழா அல்லது அதற்கும் மேல் நிறைந்த மக்கள் திரள், குறையாத வசூலுடன் ஓடியவை.
வெளியில் வந்தால், புரட்சித் தலைவர் பற்றிய புத்தகக்கள், சிடிக்கள், கேசட்டுகள், டிவிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்ப்பூட்டும் அவரது மணிக்குரலில் வெளியான பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள், டிவிடிக்களுக்கு அத்தனை மவுசு… இவர் போல யாரென்று ஊர் சொல்லிக் கொண்டே இருக்கும்… அடுத்த நூற்றாண்டிலும்!
குறிப்பு: சென்னையில் என் மனம் லயித்த இடங்களைப் பற்றி ‘மெட்ராஸ் தினங்கள்’ எனும் தலைப்பில் தொடர்ச்சியாக எழுத ஒரு விருப்பம். முடிந்த வரை பெரிய இடை வெளி விடாமல் எழுத முயற்சிக்கிறேன். இஷ்ட தெய்வத்தை வணங்கி முதல் அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற வழக்கை நானும் மீற விரும்பவில்லை. அமரர் எம்ஜிஆரை வணங்கி முதல் பகுதியை எழுதியுள்ளேன்!!
–வினோ