மதுரை திரு.ம.சோ.நாராயணன் பேசும்போது
http://i63.tinypic.com/15xv8df.jpg
Printable View
மதுரை திரு.ம.சோ.நாராயணன் பேசும்போது
http://i63.tinypic.com/15xv8df.jpg
ஆழ்வை திரு.ராஜப்பா சுவாமி பேசுகிறார் .
http://i66.tinypic.com/2itngd4.jpg
திருச்சி திரு.கிருஷ்ணன் பேசும்போது
http://i68.tinypic.com/xkppuw.jpg
தடம் பதித்தவர்கள் -வேந்தர் டிவி புகழ் திரு.பிரேம்ராஜ் அவர்களுக்கு திரு. மலரவன் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/zlq69d.jpg
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு,
நீண்ட இடைவெளிக்கு பிறகு தாங்கள் நமது திரியில்
பதிவிட்டமைக்கு நன்றி
தொடருங்கள்.
அன்புடன்,
எஸ் ரவிச்சந்திரன்
இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் தனது வசீகர சிரிப்பு, நடவடிக்கை, தன்னம்பிக்கை, பழகும் நேர்த்தி, ஆளுமை இவற்றால் எல்லா வகை மனிதர்களையும் கவர்ந்துவிடுவார். பெரிய பதவியில் இருப்பவர், சாதாரண மனிதர் என்று வேறுபாடு பார்க்கமாட்டார். பெரிய மனிதர் என்றால் அவர்களிடம் மிகவும் பவ்வியமாக இருப்பதும், எளிய மனிதர் என்றால் அவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும் பெரும்பாலும் உலக இயற்கை. ஆனால், புரட்சித் தலைவருக்கு அவருக்கு சமம்தான்.
இங்கே இரண்டு படங்கள் பதிவீடு செய்திருக்கிறேன். ஒரு படத்தில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார். தலைவர் எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார். அதற்காக மொரார்ஜி தேசாய் பிரதமர் என்பதால் மிகவும் பவ்வியமாக எல்லாம் இல்லை. சாதாரணமாக இயல்பாக மகிழ்ச்சியுடன் அவருடன் புரட்சித் தலைவர் பேசுகிறார். புரட்சித் தலைவரிடம் தயக்கம் எல்லாம் இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. புகைப்படத்தைப் பாருங்கள். பெரிய மனிதர்களை பிரபலங்களை உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை நாம் சந்தித்தால் நாம் கொஞ்சம் மரியாதை கலந்த தயக்கத்தோடு இருப்போம். நாம் அவர்கள் தோளில் கைபோடுவதோ அவர்கள் கையை பிடிப்பதோ செய்யமாட்டோம்.
ஆனால், இந்தப் படத்தில் பாருங்கள். மொரார்ஜி தேசாயின் கையை புரட்சித் தலைவர் இறுக்கமாக பிடித்திருக்கிறார். தன்னம்பிக்கையோடு இருப்பவர்கள்தான் வலுவாக கரம் பற்றுவார்கள். அதுவும் அவர் கரம் நீ்ண்டிருக்கிறது. அதுதான் புரட்சித் தலைவரின் தலைமைப் பண்பு.
http://i66.tinypic.com/vgug79.jpg
அடுத்ததாக, கீழே உள்ள படத்தை பாருங்கள். ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று பார்த்தாலே தெரிகிறது. புரட்சித் தலைவருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் நடுவிலே குள்ளமாக இருப்பவர் ஒரு நடிகர். ரி்க்க்ஷாக்காரன் படத்திலும் நடித்துள்ளார். பம்பை உடுக்கை கொட்டி பாடலில் காதில் பூவைத்தபடி சட்டை போடாமல் சந்தனத்தைப் பூசிக் கொண்டு ஆடுவார். அவரது பெயர் எனக்கு தெரியவில்லை.(யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்) அந்த அளவுக்கு பிரபலம் இல்லாதவர். புரட்சித் தலைவர் எங்கே, அந்த நடிகர் எங்கே? ஆனால், அவரை ஓரமாக நிற்க வைத்து தான் நடுநாயகமாக நிற்காமல், தான் ஓரமாக நின்று கொண்டு அந்த நடிகரை நடுவில் நிற்கச் செய்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பெருந்தன்மையின் வடிவமான நம் புரட்சித் தலைவர். அந்த குள்ள நடிகரின் முகத்தில் எவ்வளவு பெருமை, சந்தோசம் பாருங்கள்.
http://i64.tinypic.com/2eyvtko.jpg
மனிதர்களை பதவி, அந்தஸ்து, புகழ் என்று வேறுபாடு பார்க்காமல் மனிதனாக பார்க்கும் மனத்தைக் கொண்ட மனிதாபிமானி புரட்சித் தலைவர்.
http://i66.tinypic.com/2ik8wo1.jpg
தமிழ்த் திரை உலகின் இணையற்ற காதல் ஜோடி என்றால் மக்கள் திலகம் – சரோஜா தேவி இணைதான். கெமிஸ்ட்ரி மட்டும் இல்லை, பிஸிக்ஸ், பயாலஜி எல்லாம் இந்த ஜோடிக்கு பொருந்தும்.
சரோஜா தேவி ஒரு சமயம் புது வீடு வாங்க முயற்சி செய்திருக்கிறார். 25 ஆயிரம் ரூபாய் பணம் கூடுதலாக தேவைப்பட்டிருக்கிறது. நடிகை விஜயகுமாரியிடம் கடன் கேட்டிருக்கிறார். அவரிடம் பணம் இல்லை. இந்த விசயத்தை மக்கள் திலகத்திடம் விஜயகுமாரி சொல்லி இருக்கிறார். உடனே மக்கள் திலகம் அந்தப் பணத்தை நான் தருகிறேன். ஆனால், நான் கொடுத்ததாக சரோஜா தேவிக்கு தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன் பணம் கொடுத்திருக்கிறார்.
சரோஜா தேவி மக்கள் திலகத்திடமே நேரடியாக கேட்டிருந்தாலும் புரட்சித் தலைவர் கொடுத்திருப்பார். ஆனால், மக்கள் திலகம் எல்லாருக்கும் பணத்தை கொடுப்பாரே தவிர, கடனாக கொடுத்து திரும்பி வாங்கிக் கொள்ள மாட்டார். இது சரோஜா தேவி .உட்பட எல்லாருக்கும் தெரியும். மக்கள் திலகத்திடம் கேட்டால் சும்மாவே கொடுப்பார், பணத்தை இனாமாக வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று சரோஜா தேவி நினைத்திருக்கலாம். அல்லது சும்மா தருவார் என்று தெரிந்தே அவ்வளவு பெரிய தொகையை (அந்தக் காலத்தில் 25 ஆயிரம் = இன்று பல லட்சம்) எப்படிக் கேட்பது, மக்கள் திலகம் என்ன நினைப்பாரோ என்றும் தயங்கியிருக்கலாம்.
எப்படியோ? விசயம் விஜயகுமாரி மூலம் தெரிந்து அந்தத் தொகையை புரட்சித் தலைவர் கொடுத்திருக்கிறார். புரட்சித் தலைவர் இருக்கும் வரை தனக்கு பணம் கொடுத்தது புரட்சித் தலைவர்தான் என்ற விசயம் சரோஜாதேவிக்குத் தெரியாது இதை விஜயகுமாரி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருக்கிறார்.
இப்படி வெளியே தெரியாமல் புரட்சித் தலைவர் எவ்வளவோ உதவிகள் எத்தனையோ பேருக்கு செய்திருக்கிறார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் செய்த உதவிகளை பலர் கூறுகிறார்கள். உதவிகளாக வெளியே தெரிந்தவையே ஏராளமாக உள்ளது. தெரியாதது எத்தனையோ?
இப்படி வெளியே தெரியாத உதவிகளுக்கு காரணம் என்ன தெரியுமா? நாம்தான் புரட்சித் தலைவர் அவருக்கு உதவினார், இவருக்கு உதவினார் என்று இப்போதும் சொல்கிறோமே தவிர, அவர் எப்போதுமே இதையெல்லாம் விரும்பியது இல்லை. புரட்சித் தலைவருக்கு விளம்பரம் பிடிக்காது. அதனால், அவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியவில்லை.
http://i63.tinypic.com/2hn19xi.jpg
http://i63.tinypic.com/2ywbbe0.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் "ஆயிரத்தில் ஒருவன் " - சென்னை மகாலட்சுமியில்
ஞாயிறு (05/03/2017) மாலை ரசிகர்களின் சிறப்பு காட்சி -கொண்டாட்டம் -திருவிழா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மகாலட்சுமியில் நேற்று மாலை காட்சி, ரசிகர்கள் /பக்தர்களின் சிறப்பு
காட்சியாக நடைபெற்றது .
காட்சி தொடங்கும் முன்பு அரங்கு நிறைந்தது சிறப்பு அம்சம் .
மாலை 4 மணி முதலே, ரசிகர்கள் திரளாக வந்திருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு , அரங்க வாயிலில் ஆக்கிரமித்த வண்ணமும் , சிறப்பு ஏற்பாடுகள் செய்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்த வகையிலும் இருந்தனர் .
மக்கள் திலகத்தின் திரைப்பட பாடல்கள் அரங்க வாயிலில் ஒலித்தவாறு இருந்தது .பேண்ட் வாத்திய குழுவினர் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பட பாடல்களை இசைத்த வண்ணம் இருந்தனர் .
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் ,அனைத்திந்திய எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம் , உரிமைக்குரல் மாத இதழ் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
அமைப்பைச் சார்ந்தவர்கள் அமைத்திருந்த பேனர்கள், பதாகைகளுக்கு வண்ணமலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன .
மாலை 5 மணி முதல் பட்டாசுகள், சரவெடிகள் , வான வெடிகள் சாலையில்
சிறிது இடைவெளியில் வெடித்த வண்ணம் இருந்தன . இதனால் போக்குவரத்து
பாதிப்படைந்து, சிறிது நேரம் ஸ்தம்பித்தது . மிகுந்த சிரமத்துக்கு இடையில் காவல்துறையினர் போக்குவரத்து சரி செய்ய முற்பட்டனர் .
மாலை 5.30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். பேனருக்கு செய்யப்பட்டு , ஆரத்தி எடுக்கப்பட்டது .முக்கிய பேனர்களுக்கு பாலபிஷேகம் நடந்தேறியது .
பின்பு சாலையில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன .
மாலை 6 மணியளவில் அரங்கத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும்
பல்வேறு அமைப்புகள் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன .
அரங்கம் நிறைந்த பின்பும் சுமார் 100டிக்கட்டுகள் அதிகம் தரப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார் .
காட்சி ஆரம்பிக்கும் சமயம் , திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம்
அரங்கத்திற்கு வருகை தந்தார் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அறிமுக காட்சியிலும், பாடல்கள், முக்கிய வசன காட்சிகளின் போதும் ரசிகர்கள் பலத்த ஆரவாரத்துடன், கைத்தட்டலுடன் அலப்பரை செய்தது சாலையில் எதிரொலித்தது .
இரவு 7 மணியளவில் அரங்க உரிமையாளர் திரு. தர்மேந்தர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு. சொக்கலிங்கம் ஆகியோருக்கு ,உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு , பொன்னாடை போர்த்தி, எம்.ஜி.ஆர். விருது
என்கிற நினைவு பரிசு வழங்கினார் .
நேற்று (05/03/2017) மாலை 6 மணியளவில் , ஒரே சமயத்தில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் , ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா வழங்கும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சியும் ,
சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரபல இசையமைப்பாளர் , யு கே.முரளியின்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சியும் திரளான பக்தர்களின் பெருத்த ஆதரவோடு நடைபெற்றன.
அதே சமயத்தில் , சென்னை மகாலட்சுமியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளையும் மீறி நல்ல வரவேற்புடன்
அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .