she is in ATLEE + VIJAY movie after PULI...
Printable View
சிம்பு பார்ட்டியில் நயன்தாரா - பிரிந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே
நயன்தாரா, சிம்பு பிரிந்த பிறகு அவர்கள் மீண்டும் ஒன்றாக நடிப்பார்கள் என யாரும் எண்ணவில்லை. அந்த எண்ணத்தை உடைத்து இது நம்ம ஆளு படத்தில் ஜோ*டியாக நடித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சிம்புவின் பிறந்தநாள். அன்று தனது நண்பர்களுக்கு அவர் பார்ட்டி அளித்தார். அந்தப் பார்ட்டியில் நயன்தாராவும் கலந்து கொண்டார்.
காதலித்து பிரேக்கப்பான பிறகும் சிம்புவும், நயன்தாராவும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். முன்னாள் காதலர்கள் பரஸ்பரம் காலைவாரிவிடும் காலத்தில் நட்பாக இருப்பது, அவர்களின் பெரிய மனிதத்தனத்தைதான் காட்டுகிறது.
நானும் ரவுடிதான் படத்தை இயக்கிவருபவர் விக்னேஷ் சிவன். இவரும் நயன்தாராவும் காதலித்துவருவதாகவும், கடந்த வாரம் கேரளாவில் திருமணமே முடிந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் “நானும் ரவுடிதான்” படம் உருவாகிவருகிறது. படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் மொரீஷியஸ் தீவுக்கு சுற்றுலா சென்று வந்ததாகவும், நயன்தாரா, இவருக்கு கார் பரிசளித்தகாகவும் பல செய்திகள் கோலிவுட் வட்டாரத்தை வட்டமிட்டுவருகின்றன.
தற்பொழுது ட்விட்டரில் விக்னேஷ் சிவன் “ என் திருமணம் பற்றியான எந்த தகவலும் உண்மையில்லை. இந்தமாதிரியான தவறான வதந்திகள் என் வேலையை கெடுப்பதற்கான நாசவேலை. அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட வகையில் இடையூறாகவும் இருக்கிறது” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விக்ரமுடன் நடிக்க வேண்டும் என்று யார் கேட்டாலும், நயன்தாராவின் பதில் எப்போதுமே 'நோ' தான்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகினார்கள். அதற்கு நயன்தாரா "நான் சொன்ன வார்த்தையில் எப்போதும் பின் வாங்குவதில்லை. விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க முடியாது" என்று கூறி அனுப்பிவிட்டார்.
விக்ரம் மீது நயன்தாரா கொண்டுள்ள கோபத்துக்கு ஒரு சம்பவம் தான் காரணம் என்கிறார்கள். என்ன அது?
'கள்வனின் காதலி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க நயன்தாரா தேதிகள் ஒதுக்கி இருந்தார். அப்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்க தேதிகள் கேட்டு அணுகினார்கள். அதற்கு நயன்தாரா "இல்லை.. தேதிகள் ஒதுக்கிவிட்டேன். வேண்டுமானால் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துக் கொண்டே விக்ரமுடன் நடிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஒரே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் இருவருடனும் நாயகியாக நடிப்பதை விக்ரம் படக்குழு விரும்பவில்லை. "இல்லை மேடம்.நீங்க எங்களுக்கு மட்டும் தேதிகள் ஒதுக்கி கொடுங்கள். விக்ரம் எவ்வளவு பெரிய நடிகர், அவருடைய மார்க்கெட் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டுள்ளார்கள்.
இதனால் மிகவும் கோபமடைந்த நயன்தாரா "இப்போது மட்டுமல்ல.. இனிமேல் எப்போதுமே விக்ரமுடன் நடிக்க மாட்டேன். சின்ன நடிகர், பெரிய நடிகர் என்று எப்போதுமே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால், நீங்கள் வித்தியாசம் பார்க்கிறீர்கள். எனக்கு இது பிடிக்காது. நான் இப்படிச் சொன்னேன் என்று நீங்கள் விக்ரமிடம் சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்" என்று கூறி அனுப்பிவிட்டார்.
gossip
நம்பர் ஒன் நடிகை நல்ல நல்ல பாத்திரங்களை எல்லாம் சமீப காலமாக நிராகரித்து வருகிறாராம். உச்ச நடிகரின் படத்திற்கு பேசப்பட்ட போதும் கேரக்டர் ஹீரோயின் ரேஞ்ச் இல்லை என கழண்டு கொண்டதாக கூறப்படுகிறது. இடையில் புகுந்து பாலிவுட் பச்சக்கிளி கேரக்டரை லபக்கியது. இப்போது பன்ச் நடிகர் படம் , அந்த மலையாள ரீமேக் படம் என வசந்தம் நடிகைக்கு படங்கள் கைமாறியுள்ளது. என்ன தான் ஆச்சு அம்மணி!
அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் - உணர்ச்சிவசப்பட்ட நயன்தாரா
அவருடன் நடிக்கணும், இவருடன் நடிக்கணும் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது நயன்தாரா.
அவருக்கு எல்லோரும் ஒன்றுதான். அதேபோல் எனக்குப் பிடித்த நடிகர் என்று யாரையும் குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டதில்லை. அவரே ஒரு நடிகரை பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன் என்று சொன்னால்...?
அவர் அரவிந்த்சாமி.
தனி ஒருவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஜெயம் ரவி ஹீரோ என்பது மட்டும்தான் நயன்தாராவுக்கு தெரியுமாம். அரவிந்த்சாமி நடிப்பது அதற்குப் பிறகே தெரிய வந்திருக்கிறது.
"அரவிந்த்சாமி எனக்குப் பிடித்த நடிகர். அவருடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறதா என்று டைரக்டரிடம் கேட்டேன். ஒரேயொரு காட்சி இருக்கிறது என்றார்.
அந்தக் காட்சியில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அது மறக்க முடியாத நிகழ்வு. எனக்கு அரவிந்த்சாமியை ரொம்பப் பிடிக்கும். அவர் சிறந்த நடிகர்" என நயன்தாரா கூறினார்.
எதற்கும் உணர்ச்சிவசப்படாதவரை அரவிந்த்சாமி பரவசப்படுத்தியிருக்கிறார்.
நயன்தாராவைக் கோபப்படுத்திய தயாரிப்பாளர்?
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் ஆரியின் நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் திகில் படம், "மாயா ". இப்படம் நாளை தெலுங்கிலும் ரிலீஸாக இருக்கிறது. தமிழில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், தெலுங்கில் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.
இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் சி. கல்யாண், ஒரு திகில் சவாலினை வைத்துள்ளார். மயூரி என மாயா படத்திற்குத் தெலுங்கில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மயூரி படத்தைக் காண வருவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு இருக்கிறதாம்.
இப்படத்தை தனியாக, தனது பல்ஸ் மற்றும் ரத்த அழுத்தத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி, அதாவது பயம் கொள்ளாமல் படம் முழுவதையும் பார்த்து முடிப்பவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதிலும் இந்த 5 லட்சத்தை நயன்தாரா அவரது கைகளால் வழங்குவார் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு நயன்தாரா தரப்பு என்னை ஏன் கேட்காமல் இப்படி ஒரு அறிவிப்பைக் கொடுத்தீர்கள் என கொஞ்சம் கோபமைடந்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும் தயாரிப்பாளரின் இந்த தில்லான அறிவிப்பால் படத்திற்கு தெலுங்குத் தரப்பிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதே பாணியில் பிரசாந்த், மீனா நடிப்பில் வெளியான ’ஷாக்’ படத்துக்கு படக்குழுவினர் சவால் வைத்தது குறிப்பிடத்தக்கது.
Maya Movie Review
தமிழ் சினிமால கொறஞ்ச செலவுல நெறைய துட்டு எடுக்கற Genre ரெண்டு, ஒன்னு நம்ம தல-தளபதி ரூட்டு. இதுல கொஞ்சம் ரிஸ்க்கு ஜாஸ்தி.கொஞ்சம் மொளகாய அள்ளி போட்டுட்டா ஒரு மாசமாச்சும் வெச்சு செஞ்சிருவாங்க. ஆனா இப்போதைக்கு ஸ்டார் value இல்லாம மக்களை வர வெக்கிறது இந்த பேய் படங்கள்தான்,
இதுலயும் success formula ஒன்னு இருக்கு, சுந்தர் சீ type ஆனா பேய் படங்கள். அதாவது சேலை கட்டிட்டு இருக்கும் போதே செத்து போய் மூஞ்சி முழுக்க முல்தானி மட்டியை அப்பி முக்கியமான மூன்று பாகம் தெரியற மாறி பேயை நடமாட உட்டு கடைசில பேயை பாத்தாலே சிரிக்கற ரஞ்சே இருக்கற படங்கள்.
இன்னொன்னு கொஞ்சம் சீரியஸ் பேய் படங்கள் பிட்சா, டீமான்டேகாலனி மாதிரி. இதுல மாயா[Maya] எந்த வகைன்னு பார்க்கலாம்.
http://www.tamilmoviecritic.com/movie/maya-movie-review
Grt
Attachment 4466
It's interesting How Word Of Mouth Plays An Important Role In The Industry. Nayan's #Maya Is Having More Occupancy Than #Puli After Re Entry