Originally Posted by RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் கண்கள் எப்போதும் சிவந்திருக்கும். அதைப் பற்றிப் பலர் பலவாறு கதை கட்டிய காலமும் உண்டு. சமீபத்தில் தான் அதன் காரணம் புரிய வந்தது. அந்த செய்தியைக் கேட்டதும் துடிதுடித்து விட்டேன் நான். இப்படி ஓர் ஆத்மார்த்தமான கலைஞன் ஏன் தமிழ்நாட்டில் வந்து பிறந்தார் என்று மிகவும் வருந்தினேன்.
நடிகர் திலகத்துடன் நெருங்கிய ஒருவர் சொன்ன தெரியாத தகவல் ஒன்று. அன்றைய தினம் உணர்ச்சி மயமான காட்சி அல்லது சோகக் காட்சி என்றால், வந்த உடனேயே கண்களில் கிளிசரின் ஊற்றிக் கொண்டு விடுவாராம். அவர் நடிக்க வேண்டிய நேரம் வரும் வரை அந்த கிளிசரின் அவர் கண்களுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்து அவர் நடிக்கும் போது வெளிப்படுத்துவாராம். அவ்வளவு நேரம் அவ்வளவு ஆண்டுகள் அவ்வாறு கிளிசரின் வைத்த கண்களை வைத்து அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டு அவர் நடித்தைக் கேள்விப் படும் போதே நமக்கு நெஞ்சு பதைக்கிறது. இப்படிப் பட்ட திறமையுள்ள கலைஞனை நமது நாடு எப்படியெல்லாம் கௌரவப் படுத்தியிருக்கிறது என்பதை எண்ணும் போது ....?