http://www.charuonline.com/Dec2009/iruthirutham.html
புத்தக விழாவில் சாரு நிவேதிதா என்ற மேற்கண்ட குறிப்பில் இரண்டு பிழைகள். உடையாடல்கள் என்பது உரையாடல்கள் என்று இருக்க வேண்டும்.
அப்ஸொலூட் வோட்காவின் விலை 750 ரூ. இல்லை; 2000 ரூ. என்று கேள்விப்பட்டேன். என்னுடைய மதுபானச் செலவு என் நண்பர்களுடையது என்பதால் எனக்கு எந்த போத்தலின் விலையும் தெரியாது. எனக்கு வரும் ராயல்டி தொகை ஆண்டுக்கு ஒரு லட்சம். மாதம் எட்டாயிரத்து சொச்சம். அதில் ஒரே ஒரு ஜட்டி (விலை: ரூ. 1200/- Kelvin Klein), ஒரு கிழிந்த ஜீன்ஸ் (ரூ.6000/- Kelvin Klein), மற்றும் ஒரு சட்டை ( ரூ.4000/- Espirit) வாங்குவதற்கே பட்ஜெட் இடிக்கிறது. இந்த நிலையில் நான் எங்கே மதுபானச் செலவையும் ஏற்றுக் கொள்வது?
வாரம் ஒரு போத்தல் அப்ஸொலூட் வோட்காவை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நண்பர் ரொம்பவும் கோபித்துக் கொண்டார். உங்களுக்கு போத்தல் அனுப்பி வைத்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று. பாருங்கள், இளையராஜாவின் பெயரை உச்சரித்ததும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டேன். போத்தல் அனுப்பி வைக்கும் நண்பரின் பெயரை மட்டும் கேட்காதீர்கள். அது ரகசியம்.
எனவே இளையராஜா பற்றி விவாதிக்க விரும்புபவர்கள் 2000 ரூ. கட்டணம் கொடுத்தால்தான் அது பற்றி என்னால் பேச முடியும்.
அகிலன் என்ற நண்பரின் இளையராஜா பற்றிய ஆய்வுக் கட்டுரையை அனுப்பி “இது பற்றி உங்கள் கருத்து என்ன? ” என்று கேட்ட முந்நூற்று சொச்சம் வாசகர்களுக்கும் என் பதில் இதுதான். இனிமேல் இளையராஜா விஷயத்தில் கட்டணம் கட்டினால்தான் பதில்.
மேலும், நண்பர் அகிலன் இளையராஜாவின் தொழில்ரீதியான விநியோகஸ்தர். அவரைப் போன்றவர்களிடம் என்னால் விவாதிக்க முடியாது. மேலும், அகிலன் முன்வைத்திருக்கும் எல்லா கேள்விகளுக்கும் நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லியாகி விட்டது.
மற்றபடி, வாருங்கள். புத்தகச் சந்தையில் சந்திப்போம். உரையாடுவோம். விவாதிப்போம்.
29.12.2009.
11.30 a.m.