-
டியர் வாசுதேவன் சார்,
"சிவந்த மண்" வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதை, மிகவும் அனுபவித்து ரசித்து, சிறிதும் சுவை குன்றாமல், கட்டுரையாக வழங்கியிருந்தார் நமது நடிகர் திலகம். அதனைத் தாங்களும் மிகமிக ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்பது தங்களது பதில் பதிவிலிருந்து புலனாகிறது. தங்களது பாராட்டுக்கு எனது பாசமான நன்றி !
2000 பதிவுகளை அடியேன் அளித்துள்ளதை பாராட்டும் விதமாக, தாங்கள் பதிவிட்டுள்ள, வாழ்த்துக்களுடன் கூடிய ஜொலிஜொலிக்கும் பாராட்டுப்பதிவைப் பார்க்கும் போதெல்லாம் எனது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தங்களுக்கு எனது உணர்வுபூர்வமான, உயிர்ப்பான நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
பம்மலார்.
-
டியர் ஜேயார் சார்,
தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம் ! பாராட்டுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பார்த்தசாரதி சார்,
திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது எனது பேறு. தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !
தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கலக்கல் நெடுந்தொடரில், லேட்டஸ்ட் பதிவாக வெளிவந்துள்ள "உயர்ந்த மனிதன்" காவியப்பாடலான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடலின் அலசல் அசத்தலோ அசத்தல் ! நடிகர் திலகத்தின் மறைவுக்குப்பின் நடந்த ஒரு அஞ்சலிக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திரு.குமரி அனந்தன் பேசும் போது இந்தப்பாடல்காட்சியைக் குறிப்பிட்டு ஒரு வாசகம் சொன்னார். அது ஒரு வாசகமானாலும் திருவாசகம் போல் என் மனதில் நிலை பெற்றுவிட்டது. அப்படி அவர் என்னதான் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள்?, 'அந்த நாள் ஞாபகம்' பாடலைக் குறிப்பிட்டு. "இப்பாடலில் நடிகர்திலகத்தின் உடம்பில் ஓடுகின்ற நரம்பும் நடிக்கும், அவர் கையில் ஆடுகின்ற பிரம்பும் நடிக்கும்" என்றாரே பார்க்கலாம், அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.
மணியான பாடலைப் பற்றி மணிமணியாக தகவல்களை வழங்கி ஆய்வு செய்தமைக்காக தங்களுக்கு எனது பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
-
பார்த்தசாரதி சார் அருமையாக ஆய்வு செய்து இடுகை செய்த உயர்ந்தமனிதனின் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் இப்போது நம் எல்லோருடைய நெஞ்சிலும் ஞாபகமாக நிழலாடிக் கொண்டிருப்பதால் சில அற்புதமான காட்சிகளோடு அந்தக் காவியப் பாடலில் நடிகர் திலகத்தை கண்டு பூரிக்கலாம்.
http://www.youtube.com/watch?feature...&v=WrivDNF8CoA
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்பு ஆனந்த் அவர்களே!
தங்களுடைய அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றிகள். உங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் வரவில்லை. மீண்டும் என்னுடைய அன்பான நன்றிகள். தங்கள் அன்பு உள்ளத்திற்காக இதோ ஓர் அன்புப் பரிசு.
http://i1087.photobucket.com/albums/...g?t=1322276572
அன்புடன்,
வாசுதேவன்.
-
பதிவு 2000 பம்மலார் சார்,
என்னுடைய பாசமான பாராட்டுக்கள். 2000 20000 ஆக உயரவும்,தாங்கள் மென்மேலும் உயர்ந்து மேன்மை அடையவும் சிவாஜினோ துணையிருப்பாராக.
'சிவந்த மண்' பேசும் படம் அட்டைப்படம் விழிகள் சிவக்க சிவக்க பார்க்க வைக்கிறது.
'சிவந்த மண்' காவியத்தை உருவாக்க ஏற்பட்ட செலவு பற்றிய மதி ஒளி செய்தி ஒரு புதுமையான வரலாறு.
'சிவந்த மண்' சாதனைப் பொன்னேடுகள் சரித்திரப் பதிவுகள்.
'சிவந்த மண்' 50வது நாள் விளம்பரம் (தங்களது 2000-மாவது மைல்கல் நாகாஸ்திர பொற்பதிவு) 'நச்'. அந்த விளம்பரத்தில் எங்கள் கடலூர் 'ரமேஷ்' திரையரங்கு இடம் பெற்றிருப்பது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்கிறது.
'சிவந்த மண்' 100வது நாள் விளம்பரம் [பிரம்மாஸ்திரம்] பிரம்மாண்டம்.
நம் 'சிவந்த மண்' இலங்கை மண்ணிலும் கலந்து அந்த மண்ணையும் செழிப்படையச் செய்தது பெருமிதம்.
அரிய ஆவணங்கள் இவை எல்லாவற்றையும் அள்ளித் தந்த தங்கள் பணி தன்னிகரில்லாதது.
அனைத்திற்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Hearty congrats pammalar sir for the landmark achieved. We expect more pammalars to keep our nt fame and glory alive. Really you are great.
-
-
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
சிறிது இடைவெளிக்குப்பின் உங்கள் 'காவியப்பாடல்கள்' சீரியலில் நீங்கள் ஆய்வு செய்திருக்கும் 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் விவரிப்பு மிக மிக அருமை. என்ன ஒரு முழுமையான ஆய்வு. (அதை உடனே ரெஃபர் செய்துகொள்ளும் வண்ணம் பாடல் காட்சியைப்பதிப்பித்த வாசுதேவருக்கு நன்றி).
நிச்சயம் இரு ஒரு சாகாவரம் பெற்ற பாடல்தான். ஏனென்றால் இப்பாடலில் பங்கேற்ற பலரே இப்பாடலைப்பற்றி விரிவாகப்பேசியிருக்கிறார்கள்.
மெல்லிசை மன்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்பாடல் உருவான விதம் பற்றியும் அது நடிகர்திலகத்தின் சீரிய நடிப்பால் சிறப்பாக அமைந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.
அதுபோல கவிஞர் வாலியும், நடிகர்திலகத்துக்கு தான் எழுதிய பாடல்களைப்பற்றிப்பேசும்போது, மறக்காமல் இப்பாடலைப் பற்றிச்சொல்வார். சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாலிப வாலி' நிகழ்ச்சியில்கூட இப்பாடலைப்பற்றி மிகவும் விரிவாக சொன்னார்.
அதுபோல டி.எஸ்.சௌந்தர்ராஜன் அவர்களும், தான் பாடிய மிகவும் சிறந்த பாடல்களைப்பற்றிச்சொல்லும்போது 'அந்தநாள்' பாடலை மறக்காமல் சொல்வார். மூச்சிரைக்கப்பாடுவது தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக பாடல் துவங்குமுன் ரெக்கார்டிங் தியேட்டரைச்சுற்றி நான்கு ரவுண்ட் ஓடி வந்து, மெல்லிசை மன்னரிடம் பாடலைத்துவங்கும்படி சைகை செய்தாராம்.
சிறப்பு தேன்கிண்ணம் வழங்கும் விருந்தினர்களும் சரி, பாடல்களைத் தொகுத்து வழங்கும் காம்பியர்களும் சரி, இப்பாடலை குறிப்பாக நடிகர்திலகத்தின் அபார பெர்ஃபாமன்ஸை ரொம்பவே விரிவாக, உயர்வாக சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வண்ணம் நீங்களும் மிக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
நிச்சயம் இது காலங்களைக் கடந்த சாதனைப் பாடல்தான். அருமையாக திறனாய்வு செய்த தங்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.