யதார்த்தம் என்றால் --------------
1. ஹீரோ நம்மில் ஒருவராக இருக்க கூடாது - அசாதரணமான , இறைவனின் மறு அவதாரமாக , சத்தியத்தை மட்டும் படித்தவராக , சமுத்துவத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் .
2. தன்னிடத்தில் காசு இல்லாவிட்டாலும் , திருடியாவது ஏழைகளுக்கு உதவும் குணம் இருக்கவேண்டும் .
3. கண்டிப்பாக படம் முடிவில் இறக்கவே கூடாது - அப்படி ஒரு கட்டம் வந்தால் அது ஒரு கனவு காட்சியாகவோ , அல்லது ஒரு நிமிடத்தில் , உயிர் திரும்பும்படியாகவோ அந்த காட்சி அமைய வேண்டும் .
4. பல கதாநாயகிகள் இருக்க வேண்டும் - எல்லோரும் ஹீரோவை நிஜத்திலும் , கனவிலும் காதலிப்பார்கள் - முடிவில் ஒரே ஒரு காதலி வெற்றி அடைவாள் - மற்றவர்கள் சந்தோஷமாக , ஹீரோ கட்டும் ராக்கிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் .
5. ஹீரோ குறைந்தது 50 பேரையாவது புரட்டி அடிக்க வேண்டும் - அடிக்கும்போது , முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும் - ஆனால் ஒரோ சின்ன கீறல் கூட ஹீரோவிற்கு ஏற்படகூடாது . ரசிகர்களால் தாங்க முடியாது .
6.வில்லனிடம் தப்பி தவறிகூட ஒரு நல்ல பழக்கம் இருக்க கூடாது .
எவ்வளவு தூரம் நாம் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கின்றோம் - ஒரு விட்டலாச்சாரியார் படத்தையோ , விக்கிரமாதிதன் கதையையோ பார்க்கும் போதோ , கேட்கும் போதோ நம்மால் அவைகளை நம்ப முடிவதில்லை - ஆனால் நம்முடிய பிடித்த ஹீரோ இவைகளை செய்யும் போது அவைகளை தவிர வேறு எதையும் நம்புவதில்லை . யதார்த்தத்திற்கு பிரியா விடை கொடுக்கிறோம் - நாம் மறு கேள்விகள் கேட்டால் - இந்த மசாலாக்களை தான் எங்கள் தலைவரிடம் எதிர்பார்க்கிறோம் என்ற சால்சாப்பு வேறு !!
NT யதார்த்தத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் - எவ்வளவோ படங்கள் அதற்க்கு உதாரனமாக சொல்லலாம் - அந்த சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்களிலும் கூட சாதாரணமாக நடிக்க தவறவில்லை - பேட்டி கொடுப்பவர்கள் , கேட்பவர்கள் பேட்டி யை திரித்து எழுதலாம் - ஏன் என்றால் அவர்களுக்குத்தான் யதார்த்தம் என்றால் என்னவென்றே புரியாதே !!!!!!
அன்புடன் ரவி
:):smokesmile: