Originally Posted by
venkkiram
ஆல்பத்தின் தொண்ணூறு சதவிகிதத்தில் கமலில் குரல். சொற்களை கணக்கெடுத்தாலும் கமல் எழுதிய பாடல் வரிகள் முன்னிலையில் இருக்கும். இசையமைப்பாளர் ஜிப்ரான் கூட கமலால் தான் இதெல்லாம் சாதிக்க முடிந்தது எனப் புகழாரம். ஆக்கமும் அவரே. காஸ்டியூம் என்பதில் கௌதமி என்ற பெயரில் கமல். பினாமி ரமேஷை முன்னிலைப் படுத்தி இயக்கியதும் அவரே. கமல். கமல். கமல். எங்கு பார்த்தாலும் கமல்தான் இதுவரை. படத்திலாவது மற்ற பாத்திரங்களின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என நம்புகிறேன். உண்மையிலேயே கமல் அதிர்ஷ்டசாலி. அதாவது.. ஒரு இடம் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் கமல் என்ற நிலையை இன்னொருவரின் தயாரிப்பில் சாதித்துக் காட்டியது. நேற்றுதான் யோசித்துப் பார்த்தேன். கமல் ஒரு சக மாணவராக எனது பள்ளி வகுப்பில் கூடப் படித்திருந்தால் எனது மற்றும் பிற மாணவர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும்? ஒன்று நான் வேறொரு வகுப்பிற்கு என்னை மாற்றச் சொல்லி தலைமை ஆசிரியரிடம் மன்றாடி இருந்திருப்பேன், இல்லையேல் பள்ளியையே மாற்றிவிட்டிருப்பேன்.