http://i818.photobucket.com/albums/z...psgwxcye9v.jpg
Printable View
ராஜ் சீதாராமன் என்ற ஒரு பாடகர்.
ஒரு சமயம் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவிற்கும் பாலுவுக்கும் பூசல்.
அப்பொழுது புது பாடகரை கொண்டுவந்தார்.ஆம் அவர் தான் ராஜ் சீதாராமன்.
மள மள வென பல படங்களில் பாடினார். சோபன் பாபுவுக்கு பாடினார்.
அப்படியே தமிழிலும் பாடினார்
ஆம் மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தான் வி.எஸ். நரசிம்மன் இசையில் பாடினாரே அவர் தான்
https://www.youtube.com/watch?v=wEjZJ7G8uL0
இளையராஜாவின் இசையில் கலக்கிய பாடல் மெல்ல மெல்ல என்னைத்தொட்டு மன்மதன் தன் வேலையை காட்டு இசையரசியுடன் ஜமாய்த்திருப்பார்
https://www.youtube.com/watch?v=Qveg840rPDY
தெலுங்கில் பப்பி லஹரியின் இசையில் பல பாடல்கள் பிரபலமாயின
https://www.youtube.com/watch?v=fmAJibQIvLY
இப்படி நல்ல பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அவர் , பாலு மீண்டும் கிருஷ்ணாவிற்கு பாடத்தொடங்கியவுடன் இவர் காணாமலே போய்விட்டார்
தமிழ் பாடலான எங்கிருந்தோ அழைக்கும் பாடல் தெலுங்கில் பாடியது இவரே.. அப்புறம் காணவில்லை
https://www.youtube.com/watch?v=gfVQnr4pw-A
இப்படி சில நல்ல பாடகர்கள் கொஞ்சம் காலம் தலைகாட்டிவிட்டு மறைந்தே விடுகின்றனர் பாவம்.
வாசு , நீங்கள் வைதீஸ்வரன் கோயில்யைப்பற்றி கேட்டதால் , என் மன குமறல்களை கொட்டவேண்டியதாகிவிட்டது . அருமையான பழம்பெரும் கோயில் . கடலூரிலிருந்து 61km தொலைவில் உள்ள சிவன் கோயில் - இறைவன் பெயர் வைதீஸ்வரன் அல்லது Pullirukkuvelur . மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவர் - அன்னையின் பெயர் தையல் நாயகி . ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்கு இருந்த கோயில் , இன்று இருக்கும் நிலை மனதை என்னவோ செய்கிறது - கோயில் புதுப்பிக்கப்படவேயில்லை - சுவர்கள் சுண்ணாம்பை கண்டு பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன - அழகிய பறவைகள் கூடிய இந்த இடத்தில் இன்று புறாக்களும் , வெளவால்களும் தான் வாசம் செய்கின்றன . செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வரும் இடம் இது . இன்று கோவிலே தோஷம் உள்ளதாக காட்சி தருகின்றது . தேவாரம் பாடிய ஐவரும் இந்த கோயிலை பலவாறு புகழ்ந்தவர்கள் .
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே."
இந்த கோயிலை தர்மபுரம் ஆதினம் பார்த்துக்கொள்கிறது - மனம் கேட்க்காமல் இந்த கேள்வியைக் கேட்டேன் - ஏன் கோயில் இவ்வளவு பழமையாக உள்ளது - பணம் போதவில்லையா ?? - அங்கு இருந்த ஒரு பெரியவர் இருமிக்கொண்டே பதில் தந்தார் - இல்லை தம்பி - இந்த கோயிலுக்கு நிறைய நிலமும் , சொத்தும் இருக்கிறது - வெளிநாடுகளிடம் இருந்தும் பணம் வருகிறது - ஆனாலும் இங்கு இருப்பவர்களுக்கு புதுப்பிக்க மனம் வரவில்லை . போன தடவை விளக்குகளுக்காக நான் கொடுத்த சிறிய தொகையும் அந்த காரியத்திற்கு பயன் படுத்தப்படவில்லை .
அங்கு பணி புரியும் பண்டிதர்கள் வறுமைக்கு ஒரு புதிய அர்த்தத்தை தந்து கொண்டிருந்தார்கள் . அழகிய தெப்பக்குளம் - பாட்டி ,தாத்தா , அப்பா , அம்மாவுடன் பலதடவைகள் இங்கு வந்ததை மனம் சொல்லிக்கொண்டே இருந்தது . வைத்திய நாத சுவாமியிடம் , எல்லோருக்கும் ஆரோக்கியமான உடம்பை கொடுப்பா என்று கேட்கத் தோன்றவில்லை - ventillatorஇல் இருக்கும் அவரை - உன் உடம்பை கொஞ்சம் பார்த்துக்கோ " என்று சொல்லிவிட்டு மிகுந்த மனசுமையுடன் ஊர் திரும்பினேன் .
http://i818.photobucket.com/albums/z...psm6niayam.jpg
கருவின் கரு - பதிவு 96
கோமேதகம் (Hessonite)
Hessonite is one of the most beautiful and unique gemstones. In Hindi its name is “Gomed” while in ancient Sanskrit it is called “Gomedak.” Because Hessonite is related to the “Rahu and Ketu” or the north and the south lunar nodes to be exact, it is believed that it helps with problems related to Earth.
Also called ‘Gomedhaka’ in Tamil and Sinhalese, the name hessonite is derived from the unfortunate Greek word meaning ‘inferior’ – this does not relate to the beauty or popularity of the stone, but is due to the fact that it is has less hardness and density than most of the other garnet varieties.
You can identify the Hessonite stone with its red-orange (honey color). A fairly rare as a gemstone, the Hessonite is a silicate of zirconium and is commonly found in igneous rocks. The range of colors of Zircon is found in red, blue, green, yellow, orange, and brown shades. The types of Hessonite that are not associated with Rahu are the blue and green hessonite or the white colorless variety which are also rarely found.
http://i818.photobucket.com/albums/z...psgfxorfrg.jpg
http://i818.photobucket.com/albums/z...psxjhvi2bk.jpg
http://i818.photobucket.com/albums/z...pss2rxtvxq.jpg
கோமேதகம் -
அகஸ்தியரின் நவரத்தின மாலை 7
கோமேதகமே குளிர் வாண் நிலவே !---
கோமேதகமான சிவந்த உதடுகளை உடையவள் , நிலவைப்போல குளிர்ச்சியத்தரும் அவள் கருணை -------
நம் எண்ணங்கள் :
நம் அன்னை கோமேதகத்தைக்காட்டிலும் உயர் வானவள் - நம் கண்ணகளில் அவள் கொடுத்த முத்தங்கள் - எந்த நவரத்தின கற்களுக்கும் இணை ஆகாது .
உண்மை சம்பவம் 13 :
நான் பல வருடங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக வளர்ந்தேன் - கோயிலுக்கு செல்பவர்களை எள்ளி நகையாடுவேன் .. அம்மாவிற்கு ஒரே வருத்தம் - ஒரே பிள்ளை இப்படி வளர்ந்து விட்டானே என்று ... அம்மாவிற்கு அருகில் இருக்கும் அகிலாண்டேஸ்வரியைப் பார்க்காமல் ஒரு நாளும் பிறந்ததில்லை ... ஒரு நாளாவது இவன் திருந்தி தன்னுடன் இந்த அகிலாண்டேஸ்வரியை பார்க்க வரமாட்டானா என்று தினமும் புலம்புவாள் . ஒரு முறை அவளுக்குப்பிடிக்காத ஒரு கேள்வியை அவளிடம் வைத்தேன் . " அம்மா - கடவுள் உண்மையிலே இருக்கிறானா ? அவனுக்கு எதற்கு கும்பிடுவதர்க்கென்று ஒரு தனிப்பட்ட இடம் தேவை ?? "
அம்மா இந்த சின்ன கதையை சொன்னாள் ... இந்த ஒரு கதையினால் திருந்த முடியுமா இன்று கேட்க்காதீர்கள் - திருந்தி விட்டேன் - அம்மா சொன்ன விதம் அப்படி ------
ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு. அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?"
இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார்.அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று அந்த முடி திருத்துபவரிடம், "உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"
அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன். உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்."
"இல்லை...........அப்படி முடி திருத்துபவர் என்பவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."
"அஹ் முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான் இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள் என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல் கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.
“கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் ..”
அம்மா சொன்ன கதை நெஞ்சை உலுக்கியது - இன்று தினமும் அகிலாண்டேஸ்வரியைப்பார்க்க அம்மா என்னுடன் தான் வருகிறாள்
கோமேதம் என்ற வார்த்தையில் பாடல்கள் கிடைக்கவில்லை - அதனால் அதனையும் மிஞ்சுகின்ற சில உயர்ந்த பாடல்களை இங்கு பதிவு செய்கின்றேன்
https://youtu.be/nckSMw3J34U
https://youtu.be/nx_v9qo6gnM
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 9: கிராமத்துக் காதலின் சங்கீதம்
ஊருக்கு வெளியே இருக்கும் ரயில்வே கேட், ரயில் வரும் நேரங்களில் மூடப்படும்போது, அதன் இருபுறங்களிலும் நிற்கும் வாகனங்களில் காத்திருக்கும் பயணிகளிடம் பூ, பழம், தின்பண்டங்களை விற்பவர்களைப் பார்த்திருப்போம். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் 1983-ல் வெளியான ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தின் கதைமாந்தர்கள் அவர்கள்தான்.
கையில், பேசும் கிளியுடன் அந்தச் சிறு வணிகத்தில் பங்கேற்கும் ராஜலட்சுமிதான் படத்தின் நாயகி. எளிய மனிதர்கள் வாழும் சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்துக்கு முதல் முறையாக வரும் பேருந்து இன்னொரு முக்கியமான பாத்திரம். அதன் நடத்துநர் (கார்த்திக்) படத்தின் நாயகன். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் இந்தக் கதை சிறப்பாகப் படமாக்கப்பட்டதா என்பது வேறு விஷயம்.
எனினும், ‘ராசிபுரம் காத்தவராயன், ஸ்ரீரங்கம் சீனிவாசன் ஆகியோர் விரும்பி கேட்டிருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’. பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி. ஷைலஜா. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா’ என்று மவுன இடைவெளிகளுக்கு நடுவில் விவித்பாரதி அறிவிப்பாளர்களால் பல முறை ஒலிபரப்பப்பட்ட பாடல்களைக் கொண்ட படம் இது.
காலை நேரத் தென்றல்
முந்தைய நாளில் எத்தனையோ கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இயற்கையின் சுகந்தத்துடன், புத்தம் புதிதாக, மலர்ச்சியுடன் மறுநாள் காலை புலரும் தருணங்கள், எவர் மனதையும் உடலையும் புத்துயிர்ப்புடன் உணரவைத்துவிடும். காலை நேரத்தில் கண் விழிக்கும் மலர்களும் பறவைகளும் இயற்கையின் அற்புதத்தைப் பாடிக்கொண்டிருக்கும். நமது நாயகனும் நாயகியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வது இந்த நேரத்தில்தான் என்பதால், ‘காலை நேரக் காற்றின் வாழ்த்தைக்’ கோருகிறது இந்தப் பாடல்.
துள்ளும் இளமையுடன் ஒலிக்கும் கிட்டாருக்கு இணையாகக் குதூகலமாக இசைக்கும் வீணையுடன் பாடல் தொடங்குகிறது. துடிக்கும் மனதின் இசை வடிவமாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தபேலா, இயற்கையின் இளமையைச் சுமந்தபடி பாடல் முழுவதும் ஒலிக்கும். ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் சிலிர்த்துக் கிடக்கும் செடி-கொடிகள், காற்றின் தாளத்துக்கு அசையும் நாற்றுக்கள், காற்றின் தீண்டலில் மெல்லிய அலைகள் பரவும் நீர்ப்பரப்புகள் என்று இந்தப் பாடல் வழங்கும் மனச்சித்திரங்கள் அபாரமானவை. முதல் சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல் இயற்கை அழகை ரசித்தபடி வருடிச் செல்லும் காலைத் தென்றலின் இசை வடிவமாக ஒலிக்கும்.
இயற்கை சார்ந்த பல பாடல்களைத் தீபன் சக்கரவர்த்திக்கு இளையராஜா வழங்கியதன் காரணம் என்னவாக இருக்கும்? இயற்கையை வியக்கும் அடங்கிய, குளிர்ந்த அவரது குரல் இப்பாடல்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று இளையராஜாவுக்குத் தோன்றியிருக்கலாம்.
இயற்கையுடன் இசைந்து ஒலிக்கும் இதுபோன்ற பாடல்கள் எஸ்.பி. ஷைலஜாவுக்குக் கொடுக்கப்பட்டதற்கு, விரிந்துகிடக்கும் இயற்கையின் எல்லையைத் தொட முயலும் அவரது துல்லியமான குரல் காரணமாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் இதுபோன்ற கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள், இயற்கையின் பேரழகை நம் கண்முன் நிறுத்துபவை.
சாரல் தெறிக்கும் இசையருவி
உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடிய ‘செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு’ பாடல், கிராமியக் காட்சிகளை வரைந்துசெல்லும் மற்றொரு பாடல். ‘காலை நேரக் காற்றே’ பாடல் புதிதாகத் தொடங்கும் காதலின் குறுகுறுப்பு கலந்த துள்ளல் கலந்தது என்றால், இந்தப் பாடல் காதலில் திளைக்கும் ஜோடியின் ரகசியச் சந்திப்பின் கொண்டாட்டம் எனலாம்.
‘தானானே… தானானா…’ என்று கிராமத்தின் அசல் குரல் ஒன்றுடன் தொடங்கும் பாடல், எளிய தாளக்கட்டுடன் கிட்டார், ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளின் சங்கமத்துடன் தொடர்கிறது. அருவியின் கிளைகளாகப் பிரிந்து செல்லும் ஓடைகளில் ஒன்று, பசுமையாகக் குளிர்ந்து கிடக்கும் பாறைகளின் மீது ஓடிச்செல்வது போல், தன்னியல்பாக விரிந்துசெல்லும் இசை கொண்ட பாடல் இது.
மாலை நேரத்தில் தென்னங்கீற்றுகளின் நடுவில் எட்டிப் பார்க்கும் சூரியக் கதிர்களின் மஞ்சள் பின்னணியில், பெயர் தெரியாத காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சி மனதுக்குள் விரியும். ‘கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே’ என்று இளையராஜா பாடும்போது, இதுவரை அறிந்திராத அருவியின் சாரல் நம் மீது தெறிப்பதை உணர முடியும். அத்தனை அசலான கிராமத்துப் பாடல் இது.
கங்கை அமரன் பாடிய டைட்டில் பாடலைத் தவிர்த்து வேறு இரண்டு பாடல்களும் படத்தில் உண்டு. சசிரேகா பாடிய ‘தென்றல் காற்றும் அன்புப் பாட்டும்’ பாடல், காதல் வாழ்வில் குறுக்கிடும் சோகங்களை நினைத்து வருந்தும் நாயகியின் மனக்குரலாக ஒலிக்கும். தனித்த குரல் கொண்ட சசிரேகாவின் சிறந்த பாடல்களில் ஒன்று இது. எஸ்.பி.பி. பாடும் ‘ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை’ பாடல், நாயகனின் தரப்பில் பாடப்படும் மற்றொரு காதல் சோகப் பாடல்
Courtesy: Tamil Hindu
சினிமா ரசனை 3: முப்பதே ஷாட்களில் ஒரு திரைப்படம்!
பொதுவாகவே உலகம் முழுக்க இருக்கும் திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஒரு கருத்து நிலவுவதைப் பார்க்கலாம். ‘திரைப்படம் என்பது வேகமாக இருக்க வேண்டும்' என்பதே அது. வணிகத் திரைப்படங்கள் இப்படி இருந்தால்தான் ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்பது ஒரு விஷயம். உலகத் திரைப்பட ரசிகர்களுக்கேகூட இப்படி ஒரு எண்ணம் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில், கலைப்படங்களைப் பற்றி எப்போது எழுதப்பட்டாலும், நகைச்சுவையான உதாரணமாக ‘மரத்தையே அரைமணி நேரம் காட்டுதல்', ‘கேமராவை நகர்த்தாமல் நீண்ட ஷாட்கள் எடுத்தல்' என்றெல்லாம் எழுதப்படுவதைக் காண்கிறோம். ஆ
னால், வாழ்க்கை என்பதை எடுத்துக்கொண்டால், நிஜத்தில் அப்படியா இருக்கிறது? மெதுவாக நகரும் பல சம்பவங்களைக் கொண்டதே நம் வாழ்க்கை. இதில் இப்படிப்பட்ட சம்பவங்களைக் காண்பதால்/அனுபவிப்பதால் நமக்குள் ஏற்படும் எண்ணங்கள், நிகழும் மாற்றங்கள் ஆகியவற்றை எப்படி விளக்குவது?
ஒரு குதிரை ஒரு தத்துவவாதி
‘ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவவாதி ஃப்ரீட்ரிஃக் நீட்ஸ்ஸே (Friedrich Nietzsche - நீட்ஷே என்று நாம் தவறாக உச்சரிக்கும் பெயர், ஜேர்மன் மொழியில் இப்படித்தான் சொல்லப்படுகிறது), 1889 ஜனவரி மூன்றாம் தேதி, டுரின் நகரில் ஆறாம் எண்ணுள்ள வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, அங்கே ஒரு கோச் வண்டியில் பிணைக்கப்பட்டுள்ள குதிரை திமிறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறார்.
நகர மறுக்கும் அந்தக் குதிரையை, வேறுவழியில்லாமல் அந்தக் குதிரைக்காரர் அடிக்க முயல்கிறார். இதைக் கண்டதும் பொறுக்க முடியாமல் நீட்ஸ்ஸே ஓடிச்சென்று குதிரையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழத் துவங்குகிறார். அவரது நண்பர் உடனடியாக வந்து நீட்ஸ்ஸேவை உள்ளே அழைத்துச் சென்றுவிடுகிறார்.
வீட்டுக்குள் இரண்டு நாட்கள் அசையாமல் படுத்திருக்கும் நீட்ஸ்ஸே, கடைசியாக, ‘Mother, I am stupid' என்று சொல்கிறார். இதன் பின் பத்து வருடங்கள் பேசாமலும் மனநிலை பாதிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்த நீட்ஸ்ஸேவை அவரது தாயும் சகோதரிகளும் கவனித்துக்கொண்டனர். அந்தக் குதிரையின் கதி தெரியவில்லை'.
இவை The Turin Horse (A torini l) என்ற படத்தின் ஆரம்ப வரிகள். நீட்ஸ்ஸேவால் காப்பாற்றப்பட்ட குதிரையின் கதை இது. இந்த வரிகளுக்குப் பின்னர் திரை வெளிச்சம் பெறுகிறது. வண்டியில் பூட்டப்பட்ட குதிரையை மிக அருகே காண்கிறோம். ஓட்டுபவரின் கையில் ஒரு சாட்டை. சற்றே வேகமாக நடக்கும் அந்தக் குதிரையின் கடிவாளம், கஷ்டப்பட்டு வண்டியை இழுக்கும் அதன் வலி ஆகியவை தெளிவாகப் புரிகின்றன.
இதன்பின் அதே ஷாட்டில் பின்னால் அமர்ந்திருக்கும் குதிரைக்காரரைக் கவனிக்கிறோம். கடிவாளத்தை இழுத்துப்பிடித்திருக்கும் அவரது முகத்தில் ஒருவித இயந்திரத்தனத்தோடு கூடிய சலிப்பும் வலியும் தெளிவாகத் தெரிகிறது. அவரையே கவனித்துக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர் மறுபடியும் குதிரைக்குச் செல்கிறது கேமரா. அந்தக் குதிரையுமே இயந்திரத்தனமாகவே செல்வதுபோன்ற பிரமை ஏற்படுகிறது.
பின்னணியில் வரும் இசை, உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது மனதை அறுக்கிறது. இதன் பின் கேமரா மெதுவே பின்னால் வருகிறது. வண்டியைப் பனி சூழ்கிறது. ஒருவிதக் காட்டுப் பகுதியில் வண்டி செல்கிறது. துவக்கத்தில் இருந்து ஒரேபோன்ற இசை. பின்னர் மறுபடியும் குதிரைக்கு வருகிறோம். அதன் முகத்தைக் கவனிக்கிறோம். மெல்ல இசை குறைந்து வண்டியின் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. வண்டி நிற்கப்போகிறது என்பதை அறிகிறோம். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஓடும் ஒரே ஷாட் இது.
மறக்கவே முடியாது
வண்டிக்காரரின் வீட்டில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்த மகள், குதிரை, குதிரைக்காரர் ஆகியவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் முழுப்படமும். நீட்ஸ்ஸேவைத் தீராத துயரில் தள்ளிய குதிரை இது. இந்தக் குதிரை அந்தக் குதிரைக்காரரின் வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது? அந்தக் குதிரை இல்லாமல் அவராலும் அவரது மகளாலும் வாழ்க்கையைத் தொடர முடியுமா?
வீட்டில் அந்த மகளின் தினசரி வாழ்க்கை எப்படிச் செல்கிறது? குதிரை இறந்துவிட்டால் அதன்பின் அவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலாகவே இந்த முழுப்படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தப் படத்திலும் முப்பதே ஷாட்கள்தான். படம் முழுதும் தொடரும் அருமையான இசையும் (Mihly Vg), படத்தின் நீளமான ஷாட்களும் இந்தப் படத்தை அவசியம் நம்மால் மறக்கவே முடியாத ஒரு படமாக ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எதைப் பற்றிப் பேசுகிறது?
மனித வாழ்க்கையின் அழுந்தும் பாரம் பற்றிய வெளிப்பாடுதான் இந்தப் படம் என்பது இயக்குநர் பேலா தாரின் (Bla Tarr) கருத்து. ஒவ்வொரு நாளும் ஒரே விதமான வேலைகளை- கிணற்றுக்குச் சென்று தண்ணீர் எடுப்பதை - செய்துவருவது எத்தனை கடினம்? எத்தனை கொடுமை? ஒரேவிதமான இந்த வேலைகளைத் தினமும் முடிவே இல்லாமல் செய்வது, இவர்களின் உலகத்தில் எதுவோ தவறு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்பது பேலா தாரின் வாதம்.
Slow Cinema என்ற கருத்துக்கு இப்படம் ஒரு உதாரணம். இது ஒரு கறுப்பு வெள்ளைப் படமும் கூட. ‘மெதுவான திரைப்படம்', ‘கறுப்பு வெள்ளை' என்றதும் இது பழைய படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது 2011-ல் வெளிவந்த படம். இயக்குநர் பேலா தாரின் இறுதிப் படமும்கூட.
இதுவொரு இயக்கம்
முப்பதே ஷாட்களில், திரும்பத் திரும்ப ஒரே விஷயங்கள் நடக்கும் கதையாக இருந்தாலும், உள்ளது உள்ளபடி கவனித்தால் இந்தப் படத்தில் பல கருத்துகளை நாம் அறியலாம். படம் பார்த்து முடித்தபின் மனித வாழ்க்கையின் துயரம் பற்றி நம் ஒவ்வொருவருக்கும் பல கருத்துகள் எழும்.
இதுபோன்ற கருத்துகள்தான் வாழ்க்கையைப் பற்றிய பல எண்ணங்களை நமது மனதில் அழித்து இன்னும் செம்மையாக எழுதுகின்றன. இதுபோன்ற படங்கள்தான் பிற உயிர்களின்மீது கருணை கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகின்றன.
Slow Cinema Moment பற்றிய ஒரு அறிமுகம்தான் இந்தக் கட்டுரை. இன்னும் ஏராளமான விஷயங்கள் இதில் உள்ளன. அவற்றை அறிய, Theo Angelopoulos, Bla Tarr, Albert Serra, Aleksandr Sokurov, Lisandro Alonso, Tsai Ming-liang, Sharunas Bartas, Pedro Costa, Jia Zhang-ke, Carlos Reygadas, Gus Van Sant, Hou Hsiao-hsien ஆகிய இயக்குநர்களின் படங்களைக் கவனிக்கலாம். நிஜ வாழ்க்கையின் பரிணாமங்களை உள்ளது உள்ளபடி நமக்கு உணர்த்தும் இந்த ரீதியிலான படங்கள் நம் திரை ரசனையை மேம்படுத்திக் கொள்ள அவசியம். இதுபோன்ற படங்களைப் பார்க்கப் பார்க்க அதை கண்டிப்பாய் உணர்வீர்கள்.
கருவின் கரு - பதிவு 97
பதுமராகம்
Yellow Sapphire
The enduring and alluring Sapphire forms in more colors than just the legendary blue. Each color exhibits its own unique metaphysical properties and vibrational patterns, yet all are Stones of Wisdom. They honor the higher mind, bringing intuition, clarity and self-mastery. Worn throughout the ages for protection, good fortune and spiritual insight, Sapphires are not only symbols of power and strength, but also of kindness and wise judgment.
Yellow Sapphire brings the wisdom of prosperity, not only by attracting wealth and financial abundance into one’s life, but in its ability to manifest one’s creative energy into form through action. Yellow Sapphire stimulates the intellect, helping to formulate ideas and goals, then focuses that intent through the Solar Plexus Chakra, the will center, allowing one to hold their vision long enough to bring it into being. It also encourages the exploration of moving in new directions, bringing excitement and joyful expectation about the possibilities in life.
http://i818.photobucket.com/albums/z...psoz1d7g5b.jpg
http://i818.photobucket.com/albums/z...ps9r5q94vn.jpg
அகஸ்தியரின் நவரத்தின மாலை - 8 பதுமராகம்
|| ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராக விகா ஸவியாபினி அம்பா ||
Goddess who makes peace, who has divine bliss,
Who has pretty limbs , who extends everywhere,
Who is the shine of sapphire , who is the mother - victory to you
நம் எண்ணங்கள் :
அம்மாவின் அழகு அவளுடைய கருணை அந்த பதுமராகத்திர்க்கு ஏது - ஏதோ மின்னுகிறது அவ்வளவுதான் - என்றும் மின்னுபவள் நம் தாய் - ஏ பதும ராகமே கொஞ்சம் அடங்கு !!
https://youtu.be/b-Uwn2O_tDw
https://youtu.be/o2bjPcpZW1A
கருவின் கரு - பதிவு 98
9. cat's eye : வைடூரியம்
General Information Of Cat’s Eye Gemstone/ Lehsuniya :
According to Indian astrologer Cat’s Eye gemstones symbolize “KETU”. It is known as Lehsunia or Vaiduria. The other names of this gem are Chrysoberyl, Cyophane Cat’s Eye, Ketu-Ratna, Ketu’s Gem and Sutra-Mani but Indian people knows it as Sutra Mani.This gemstone is found in Brazil, China, South India, Ceylon and many other countries. Cat’s eye gemstone is available in different shades and sizes. Even then this gem destroys and removes all bad effects of ketu in horoscope/ birth chart. Ketu is also known as second mars. Rahu and Ketu are so attached to each other that they could not be talked about in different sentences. Ketu is almost the another print of Rahu exploring different shades and in different confinements which could be seen in its icon Cat’s Eye Gemstone or lehsunia on land.
The strength of Cat’s Eye or lehsunia gem could be predicted by smoothness, brilliance of chatoyance, high specific gravity, having three streaks of light similar to the sacred thread worn by Brahmins in India, straightness of the chatoyance. But Cat’s Eye or lehsunia could contain some flaws as well like dullness which could lead to bad health and wealth, crack bring injuries from sharp edged weapons, cobweb inside bring imprisonment, holes or dents bring diseases of the stomach, five bands bring misfortune, flat tell its being devoid of effects and uneven shape tells about being unlucky.
http://i818.photobucket.com/albums/z...pszjzj7lud.gif
http://i818.photobucket.com/albums/z...ps9bidcb7p.jpg
http://i818.photobucket.com/albums/z...psn59ybymg.jpg
நவரத்தின மாலை 9 - வைடூரியம்
" அடியார் முடிவாழ் வைடூரியமே "
உன்னை வணங்கும் எல்லோருக்கும் வைடூரியமாக இருப்பவள் நீ ----
இந்த ஒரு கல் தான் கொஞ்சம் அம்மாவுடன் ஒத்துப்போகிறது -- அவளை வணங்கும் எல்லோருமே வைடூரியங்களாகத்தான் ஜொலிப்பார்கள் - இதில் சந்தேகமே இல்லை
Song - Vaidoorya Ratnamaala Charthi...
Film - Pullimaan (പുള്ളിമാന്), 1972,
Lyrics - Sreekumaran Thampi,
https://youtu.be/BOXexqxLiBc
https://youtu.be/1oeao8pBkX8
https://youtu.be/LnFCiai2QcU
https://youtu.be/qVl_wv1dRAI
கருவின் கரு - பதிவு 99
நவரத்தின மாலை இனிதே முடிவடைகிறது ......
http://i818.photobucket.com/albums/z...pst199dlxi.jpg
https://youtu.be/y6siMElVT8k