Quote:
மனதில் உறுதி வேண்டும்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், மனதில் உறுதி வேண்டும்.
கதையின் நாயகி பாரதி, தன் சம்பளத்தில் இரண்டு தங்கைகளை படிக்க வைப்பதோடு பெற்றோரையும் கவனித்து வருகிறாள். திடீரென ஒருநாள் தன் தந்தைக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் சொல்லி விட, பணத்திற்கு வகை தெரியாமல் திகைத்துப்போகிறாள்.
கதையின் நாயகன் திக்குவாய் திருநாவுக்கரசு, சித்தி வைத்தீஸ்வரியின் கொடுமையால் வெகுளியாக, படிப்பறிவு இல்லாமல் போனவன். வைத்தீஸ்வரி தனக்கு பிறந்த பிள்ளைகளை மட்டும் படிக்க வைத்து புத்திசாலியாக வளர்த்தாள். திருநாவுக்கரசுவின் அப்பா சுந்தரம் தன் மகனை மனிதனாக்க ஒரு நல்ல மருமகள் வேண்டுமென முடிவு செய்தவர், பாரதியை சந்திக்கிறார். அவள் தந்தையின் இருதய ஆபரேஷனை தன் செலவில் செய்து வைப்பதாக உறுதி சொன்னவர், பதிலுக்கு தன் திக்குவாய் மகனை மணந்து கொண்டு வாழ்நாள் முழுக்க திக்குவாயாக நடிக்க வேண்டும் என்கிறார். அவளும் சம்மதிக்கிறாள்.
திருமணத்திற்கு பின் பாரதி, தன் கணவன் திருநாவுக்கரசுவை படிக்க வைத்து புத்திசாலியாக்கினாளா? பாரதி ஊமையல்ல என்பது கணவன் திருநாவுக்கரசுவிற்கு தெரிந்தபோது என்ன முடிவு எடுத்தான்? தன் கணவனுக்கு அவன் சித்தி வைத்தீஸ்வரி கெட்டவள் என்பதை பாரதி எப்படி புரிய வைத்தாள்? கதை, திரைக்கதை வசனம்: எஸ்.சேக்கிழார். இயக்கம்: வி.சதாசிவம்.
நட்சத்திரங்கள்: ராம்ஜி, சஞ்சய்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யா, பிரீத்தி, சுமங்கலி.
தயாரிப்பு: ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ்.