Originally Posted by Murali Srinivas
செந்தில்,
முன்பொரு முறை ஜோ அவர்கள் சிவந்த மண் படத்தின் வெற்றி விவரங்களை பற்றி கேட்க அந்த படத்தின் வசூல் விவரங்களைப் பற்றியும் நமது திரியிலே வெளியிட்டோம். சென்ற வருடம் 2008 மார்ச் ஏப்ரல் என்று நினைவு. பின் மீண்டும் ஒரு முறை நமது ஹப்பிலேயே வேறொரு திரியில் அது இடம் பெற்றது. இப்போது வசூல் விவரங்களை தவிர்த்து, ஆனால் தியேட்டர் இருக்கைகளின் எண்ணிக்கையோடு அதை அழகுபடுத்தியிருக்கிறார் நண்பர் சுவாமி அவர்கள். முதலில் பதிவு செய்த போது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளின் விவரங்கள் கூட இடம் பெற்றது.
ராகவேந்தர் சாரும், சாரதாவும், பாலாவும் படத்தின் சிறப்புகளை வர்ணிக்க மீண்டும் பழைய நினைவுகள். செந்தில், மோகன் ஏன் சுவாமி போன்றவர்களுக்கு இது தெரியுமா என்பது தெரியவில்லை. படம் முதலில் வெளியான போது கிளைமாக்ஸ் முடிந்து அரண்மனை வாசலில் நடிகர் திலகம் மக்களிடையே பேசும் ஒரு காட்சி இருந்தது. நாட்டின் சுதந்திரத்தை பற்றிய ஒரு உரையாக அது அமைந்திருந்தது. முடிவில் நடிகர் திலகம் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிக்க வணக்கம் போடுவார்கள். முதல் சுற்றில் படம் ஓடிய போது இடம் பெற்ற இந்த காட்சி சில வருடங்களுக்கு பிறகு திரையிட்ட போது வெட்டப்பட்டிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அது போல முதல் வெளியீட்டில், இறுதி பாடலான சொல்லவோ [சுசீலா பின்னியிருப்பார்] பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் மிக பெரிய Prelude இடம் பெற்றிருந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான பிறகு அந்த Prelude இல்லாமல் சட்டென்று ஆரம்பிக்கும்.
செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள மலையில் ஹெலிகாப்டர் துரத்தும் காட்சி படமாக்கப்பட்ட போது நடிகர் திலகம் நூலிழையில் உயிர் தப்பினார். அது போல வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஏரி செட் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதை சரி செய்து மீண்டும் செட் போட்டார்கள். இந்த படத்தை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
மோகன் சொன்னது போல் இப்போது தியேட்டர் ரிலீஸ் நடந்தால் ஒரு திருவிழாவை மீண்டும் பார்க்கலாம். அதெல்லாம் நடப்பதற்கு நாம் என்ன மதுரையிலா இருக்கிறோம்?
அன்புடன்