-
அன்புள்ள வாசுதேவன் அவர்களே,
ராஜேந்திர குமார் பற்றியும், வகீதா ரகுமான் பற்றியும் நான் கேட்டதும் விரிவாக (அவர்களின் புகைப்படத்துடன்) விடையளித்தமைக்கு மிக்க நன்றி. ராஜேந்திர குமார் அவர்கள், நடிகர்திலகத்துக்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இப்போதுதான் தெரிகிறது. வகீதா நலமுடன் இருக்கிறார் என்ற விவரம் ஆறுதல் அளிக்கிறது. (அவருக்கு இது பவள விழா ஆண்டு என்று நினைவூட்டிய பம்மலாருக்கு நன்றி. இறைவன் நீண்ட ஆயுளைக்கொடுக்கட்டும்).
(அவ்விருவரையும் பற்றி நீங்களும் பம்மலாரும் அளித்திருக்கும் விவரங்கள், நடிகர்திலகத்தின் ரசிகர்கள், நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலக வரலாற்றையே கைக்குள் வைத்திருப்பவர்கள் என்று நிரூபிக்கிறது).
'அந்தநாள் ஞாபகம்' வீடியோ இணைப்புக்கும் மிக்க நன்றி.
-
அன்புள்ள பம்மலார் சார்,
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக வந்துகொண்டிருக்கும் 'சிவந்த மண்' ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி.
50-வது நாள் விளம்பரம் என்ற நாகாஸ்திரத்தையும், 100-வது நாள் விளம்பரப்பதிவு என்ற பிரம்மாஸ்திரத்தையும் பார்த்ததும் முதல் வேலையாக, இந்தச் சாதனைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பற்றி குறை சொல்லியிருந்த இரண்டு வலைப்பூக்களைத் தேடிப்பிடித்து அவற்றின் பின்னூட்டத்தில், நமது திரியின் இந்தப்பக்கத்துக்கான இணைப்பைக்கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தேன். இன்னும் எங்கெங்கே எந்தெந்த பிரகஸ்பதிகள் உளறி வைத்திருக்கிறார்கள் என்று தேட வேண்டும்.
இரண்டு விளம்பரங்களிலும் அனைத்துத் திரையரங்கங்களின் பெயர்களையும் இடம்பெறச்செய்த 'சித்ராலயா' நிறுவனத்துக்கு முதல் நன்றி.
சென்னையில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளில் திரையிடாததன்மூலம் மேலும் சில வாய்களுக்கு ஆப்பு வைத்த, சித்ராலயா மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இரண்டாவது நன்றி.
தங்களின் மகத்தான ஆதரவின் மூலம், இக்காவியத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு ஏராளமான நன்றிகள்.
அவற்றை இங்கே பதிப்பித்து நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் ஏ.கே.47 களைக்கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
அக்டோபர் 1969 'பேசும்படம்' அட்டைப்படம் சூப்பரோ சூப்பர். இந்த இதழ் என்னிடம் வெகுநாட்கள் இருந்தது. இதில் ஒரு விசேஷம். முதல் நான்கு பக்கங்களையும் புரட்டப்புரட்ட நடிகர்திலகத்தின் பட விளம்பரங்கலாகவே வரும். அட்டைப்படத்தில் சிவந்த மண். அட்டையைப்புரட்டியதும் முதல் பக்கத்தில் 'இப்பொழுது நடைபெறுகிறது நிறைகுடம்' விளம்பரம், அதைப்புரட்டியதும் அடுத்த தாளில் 'இப்பொழுது நடைபெறுகிறது தெய்வ மகன்' விளம்பரம், அடுத்த பக்கத்தில் வெற்றிநடைபோடுகிறது 'திருடன்' விளம்பரம். எந்தக்கதாநாயகனுக்கும் இந்த தைரியம் இருக்காதுங்க.
அடுத்த மாதம் (நவம்பர் 1969) பேசும் படம் அட்டைப்படமும் 'சிவந்த மண்' தான் இடம்பெற்றிருந்தது. பின் அட்டையில் இன்னொரு தீபாவளி வெளியீடான 'செல்லப்பெண்' இடம்பெற்றிருக்க, 'போட்டிப்படம்' உள்பக்கத்தில் கருப்புவெள்ளை விளம்பரமாக இடம்பெற்றிருந்தது.
தாங்கள் இப்போது வெளியிட்டுள்ள 'ரிசர்வ் செய்யப்படுகிறது' விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் சிம்மாசனத்தில் பம்மலார் என்று பொறிக்கப்பட்டிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாமன்னர் நீங்கள் என்பதை பொருத்தமாகச் சொல்கிறது. (அதுபோல முன்பு நீங்கள் தந்த சிவந்த மண் Helecopter படப்பிடிப்பு பற்றிய பொம்மை கவரேஜில், நடிகர்திலகத்தின் இதயப்பகுதியில் 'பம்மலார்' என்று பொறித்திருந்தீர்கள். நடிகர்திலகத்தின் இதயத்தில் இடம்பெறப் பொருத்தமானவர் நீங்கள் என்பதை சொல்லாமல் சொல்லியது மிகவும் சந்தோஷமாக இருந்தது).
மதிஒளியில் வெளியான 'சிவந்த மண்' செலவினம் பற்றிய ஏட்டில் ஒரு அதிசயம் பார்த்தீர்களா?. 1972-க்குப்பின் 'சிலருக்கு' சூட்டப்பட்ட பட்டத்தை 1969-லேயே மதிஒளி, நமது நடிகர்திலகத்துக்கு சூட்டிவிட்டது. நடிகர்திலகம் மறைந்திருக்கும் இடம் பற்றிய செட்டைப்பற்றிக் குறிப்பிடும் வரி "புரட்சித்தலைவன் வீடு".
-
-
ரசிகவேந்தர் ராகவேந்திரன் சார்,
தங்களது வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுப்பதிவுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது செழுமையான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் ராமஜெயம் சார்,
தங்களின் புகழுரைக்கு எனது பணிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Dear kumareshanprabhu Sir,
Thank You So Much !
Regards,
Pammalar.
-
Dear Chandrashekaran Sir,
Thanks a lot !
Regards,
Pammalar.
-
டியர் mr_karthik,
தங்களின் தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அளிக்கும் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு எனது தூய்மையான நன்றிகள் !
நடிகர் திலகத்தின் பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை இருட்டடிப்பு செய்யும் நபர்களின் வலைப்பூக்களையெல்லாம் தேடிப் பிடித்து, அங்கே நமது ஆவணப் பொக்கிஷங்களை அளித்து, அவர்கள் அனைவரையும் உண்மையை உணர்ந்து கொள்ளச் செய்யும், தங்களது அளப்பரிய சேவை மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று. தங்களுக்கு நமது திரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் !
தாங்கள் குறிப்பிட்டு எழுதிய 'பேசும் படம்' நவம்பர் 1969 இதழின் "சிவந்த மண்" அட்டைப்பட விளம்பரம் ஆவணப்பொக்கிஷமாக அடுத்த பதிவில் !
அன்புடன்,
பம்மலார்.
-
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
சிவந்த மண்
[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : பேசும் படம் : நவம்பர் 1969
http://i1110.photobucket.com/albums/...GEDC5108-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.