எம்.எஸ்.வி பற்றிய ராஜாவின் புகழாரம் காணொளி பார்த்தேன். ஒரு விஷயத்தில் உடன்பாடில்லை.
பாடல் வரிகள் ஒன்றுமேயில்லை. இசைதான் அதை தூக்கி நிறுத்துகிறது என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்வது. உதாரணத்திற்கு
"தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை"
தவறில்லை. ஆனால் பாடல் வரிகளால் பல பாடல்கள் உயரிய அந்தஸ்தினை அடைந்திருக்கின்றன, மலிவான பாடல் வரிகளால் பல பாடல்கள் இசை நன்றாக இருந்த போதிலும் மக்கள் மத்தியில் பிரபலமடையாமலும் போயிருக்கிறது..
ராஜாவின் முன்னிலையில் ஒருவர் சிறந்த பாடல் வரிகளால் எப்படி ஒரு இசைப்பாடல் ஒரு மகத்தான உருவாக்கமாக மாறியது என்பதையும் விளக்கி பேசவேண்டும்.