http://www.youtube.com/watch?v=K1SgziR_Zxs
Printable View
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
http://www.youtube.com/watch?v=TBSWiFyGeVQ
தேசிய அளவில் 3-வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது:
முதல்வர் ஜெயலலிதா
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்....
பலமில்லாத மாடு , உழ முடியாத கலப்பை ,
அதிகாரமில்லாத பதவி , இவைகளை
நாங்கள் விரும்புவதேயில்லை !
http://i1170.photobucket.com/albums/...ps1cb433ad.jpg
புரட்சித் தலைவர் அவர்கள் அரசியலில் பெற்ற வெற்றியினை தொடர்ந்து, திரைக்கலைஞர்கள் பலருக்கும் "அரசியல் பிரவேசம்" எண்ணம் உதிர்த்தது. அவர் வழியில், ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறு மாற்றுக் கட்சி இல்லாத அப்போதைய சூழ்நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து என்.டி. ராமாராவ் பெரும் வெற்றி கண்டார். ஆனால், இந்த வெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
மக்கள் தலைவராம் நமது பொன்மனசெம்மலின் மறைவுக்கு பிறகு, அவர் கண்ட இயக்கமும், சின்னமும் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் தி. மு.க. வெற்றி பெற முடிந்தது. திரைக்கலைஞர்களாய் திகழ்ந்த ஜானகி அம்மையாரும், செல்வி. ஜெயலலிதாவும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தனர்.
தனிக்கட்சி கண்ட, பல வெற்றிப் படங்களிலும், புரணாப் படங்களிலும் நடித்த மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களும் தோல்வியைத்தான் சந்தித்தார். சொந்த தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியாமல் போனது.
நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்கள் புதுக்கட்சி துவங்கி பின்னர் அதனை கலைத்தும் விட்டார்.
தமிழ் திரையுலகில், வெற்றிப்படங்கள் பல தந்த, அஷ்டாவதானி என்றழைக்கப்பட்ட நடிகர் திரு.டி. ராஜேந்தர் தனிக்கட்சி தொடங்கி துவண்டு போனது தான் மிச்சம்.
வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியலில் நுழைந்து ஒரு கலகலப்பான நகைச்சுவையான சூழ் நிலையைத் தான் உருவாக்க முடிந்தது.
தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி யும் தனிக்கட்சி ஆரம்பித்து பின் சோபிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சியில் சங்கமித்து விட்டார்.
நடிகர்கள் கார்த்திக்கும், சரத்குமரும் மத ரீதியான கட்சி ஆரம்பித்து பிற கட்சியினை சார்ந்து தான் இருக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து, பிரபலமான கட்சிகளை சார்ந்துதான் திரைக்கலைஞர்கள் பலரும் இருந்தனர்.
1996ல் அப்போது நிலவிய சூழ்நிலையில், சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களும் தி. மு. க. மற்றும் த மா. க. ஆகிய கட்சிகளுக்காக "வாய்ஸ்" கொடுத்தார். அந்த சமயத்தில் அதற்கு பலன் இருந்தாலும், தொடர்ந்து வந்த தேர்தல்களில் அவர் "வாய்ஸ்" கொடுத்ததற்கு மக்கள் பெரிய அளவில் REACTION செய்யவில்லை.
தமிழக மற்றும் அந்திரா மாநிலங்களில், திரைக்கலைஞர்களின் அரசியல் ஈடுபாட்டின் தார்க்கம், மெதுவாக வட மாநில திரைக்கலைஞர்களையும் தொற்றிக்கொண்டது. வட மாநில சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட, இந்திப் பட உலகில் வெற்றிப்பட நாயகன் என்று கருதப்பட்ட, ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்த "ராஜேஷ் கன்னா" தனிக்கட்சி தோற்றுவிக்க தைரியம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துதான் பதவியை பெற முடிந்தது. இந்த "அரசியல் ஈடுபாடு " தார்க்கம், முகம்மது அசாருதீன், நவ்ஜோத் சிங்க் சித்து போன்ற விளையாட்டு கலைஞர்களையும் விட்டு வைக்க வில்லை. .
மற்றொரு இந்திப்பட பிரபல நடிகர் வினோத் கன்னா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். நடிகர் சத்ருகன் சின்ஹாவும் நிலையும் அவ்வாறே !
இந்திப்பட உலகில் இரண்டாம் கட்ட பிரபல நடிகராய் திகழ்ந்த ராஜ்பாப்பரும் அவ்வாறே. இவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தார். இன்னொரு இந்திப்பட நடிகர் சுனில்தத்தும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார்.
இந்தியத் திரைப்பட உலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஹேமமாலினியின் அரசியல் வாழ்க்கையும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததன் மூலம் துவங்கியதே !
மக்களின் முன் எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், அவர்கள் அரசியலில் சோபிக்க முடியாது என்பதற்கு கீழ்கண்டவர்களின் தோல்வி ஒரு சிறந்த உதாரணம் :
1. நடிகர் ராஜ்பாப்பர்
2. நடிகை நக்மா
3. நடிகை விஜயசாந்தி
4. நடிகை ஜெயசுதா
5. நடிகை குத்து ரம்யா
6. நடிகை ராக்கி சாவந்த்
7. முகம்மது அசாருதீன்
தமிழக மக்களிடையே, மறைந்து 27 வருடங்கள் ஆகியும் புரட்சி தலைவருக்கு நிலவி வரும் செல்வாக்கினை மட்டுமே நம்பி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் துணிந்து 40 இடங்களில் தனித்து நின்று, 37 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியை நாட்டுக்கு நிரூபித்துள்ளார்.
மக்கள் திலகம் காலத்து அரசியலில், தமிழகத்தில் அவரது ஆதரவு அலையினால் மட்டுமே அவர் மகத்தான வெற்றியை தொடர்ந்து பெற்று வந்தார்.
ஆனால், தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மோடி அலை நாடு முழவதும் வீசியிருந்தாலும், தமிழகத்தில், புரட்சித் தலைவரின் VOTE BANK உடன் கூடிய எழுச்சி அலையுடன், காங்கிரஸ் மற்றும் அதன் ஆட்சியில் பங்கு பெற்ற தி. மு. க. வின் எதிர்ப்பு அலையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய சுனாமியாக உருவெடுத்தது தான் நிதர்சனமான உண்மை. மேலும், தமிழக முதல்வரின் கடந்த 3 வருட ஆட்சிக் காலத்தில் மக்களுக்கும் பெரிய அளவில் அதிருப்தி இல்லை.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நடைபெற்ற ஊழல்களையும், சோனியா காந்தி, தனது தனிப்பட்ட குரோத மனப்பான்மையில், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்க்ஷே அரசுக்கு ஆதரவாக இருந்த நிலையினையும், அதற்கு துணை போன தி. மு. க. வினையும்., ராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் துர்ப்பாக்கிய நிலையினை கண்டும் காணாமல் இருந்த மன்மோகன் சிங் அரசின் மெத்தன போக்கையும், மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் தயாராக இல்லை.
எது எப்படியோ புரட்சித் தலைவர் காலத்து அரசியல் சூழ்நிலை தற்போது இல்லையென்றாலும், அவரையும், அவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா தி. மு. க. வினையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக மக்கள் மறக்க வில்லை என்பதனேயே சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளன..
http://i61.tinypic.com/rhvazl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.
THANK YOU M/s. VINOTH, RAVICHANDRAN and LOGANATHAN, JAI SHANKAR & YUKESH BABU for your VALUABLE POSTINGS on the splendid victory by AIADMK started by our beloved God M.G.R.
http://i57.tinypic.com/b9fynl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i61.tinypic.com/10s52qv.jpg
VERY NICE POSTING. THANKS SELVAKUMAR SIR
FROM TO DAY
MADURAI - TIRUPPARANGUNDRAM - LAKSHMI
MAKKAL THILAGAM MGR IN ''NEERUM NERUPPUM ''
http://i61.tinypic.com/15eagav.jpg
Yukesh Babu Sir,
மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், BJP தேர்தல் வெற்றி என்பது ஒரு இயக்கத்தின் செயல்பாட்டை அங்கீகரிப்பது ஆகாது..
அப்படியெனில் இன்றைக்கு தோற்று உள்ள கட்சிகள் Congress [I] கடந்த காலத்தில குற்றசாட்டுகளுக்கு ஆளாகி அதன் பின் வென்றவையே... அப்படியெனில் அவைகளின் கடந்த கால செயல்கள் நியாயம் ஆகிவிட்டது எனப் பொருள் ஆகுமா..?.
Nevertheless, Tamil Nadu is Saved. Please have given [AIADMK] one more opportunity to serve them from the Centre which should be PROPERLY utilised. Thanks to people proving it is MGR wave & LADY wave only in Tamil Nadu.
http://www.youtube.com/watch?v=_t5e7...ature=youtu.be
Whoever AS A WHOLE who does not think so are showing their grudge towards AIADMK and people's mandate. So we need to ignore that as usual.