இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...ps3e59a7fc.jpg
http://i501.photobucket.com/albums/e...ps01ae1153.jpg
Printable View
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...ps3e59a7fc.jpg
http://i501.photobucket.com/albums/e...ps01ae1153.jpg
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...psb8225925.jpg
http://i501.photobucket.com/albums/e...ps9d6e7995.jpg
இதற்க்கு பெயர்தான் வேடபொருத்தம் என்பது !!
http://i501.photobucket.com/albums/e...ps07521c0d.jpg
http://i501.photobucket.com/albums/e...ps274bacb6.jpg
மற்றவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் அவ்வளவு உருவ ஒற்றுமை உள்ளபோது, இதிகாசத்தில் உள்ள உண்மையான வள்ளல் கர்ணன் இவரை போல தான் இருப்பார் என்பதில் ஏது ஐயம் !
உன் விழிகளை விட அதிக மொழிகள் தெரிந்த ஒரு நடிகன் இந்த புவியில் இருக்க முடியுமா என்ன !
http://i501.photobucket.com/albums/e...psbb820484.jpg
Dear Ramamoorthi Sir,
ரசிகர் மன்ற நோட்டீஸ் மூலம் ஒரு வசூல் ஒப்பீடு !
Appreciate your enthusiasm !
But everybody knows that Rasigar Mandram Bit Notice is not an authenticated (or) Valid Document.
Please publish if you have Newspaper advertisement. Even if you have two separate advertisement it is ok.
ரசிகர் மன்ற நோட்டீஸ் இதைவிட பிரமாதமாக நாமும் தயார் செய்யலாம் !
காலம் மாறிவிட்டது....இதுபோல ரசிகர் மன்ற நோட்டீஸ் எந்த ஒரு ரசிகனும் சொந்தமாக அள்ளிவிடமுடியும் !
விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளர் தரும் பத்திரிகை விளம்பரம் வசூலை பொருத்தவரை ஏற்றுகொள்ளும் ஒரு ஆவண ஆதாரம் என்பது நடுநிலையான மக்களுக்கும், திரியை படிக்கும் புதிய தலைமுறையினருக்கும் இப்போது நன்கு தெரிந்திருக்கும்.
இப்போது கீழே இருக்கும் ஆவணம் பாருங்கள் ! நடுநிலையான தினசரியில் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் கொடுக்கப்பட்டது.
ஒன்று 1971 இல் வெளிவந்த திரு MGR அவர்கள் நடிப்பில் வந்த "ரிக்க்ஷாகாரன்" திரைப்பட 51 நாள் ஓடி முடிய வெளியிட்ட வசூல் விளம்பரம்
மற்றொன்று 1972 இல் வெளிவந்த திரு சிவாஜி அவர்கள் நடிப்பில் வந்த "ராஜா" திரைப்பட 50 ஓடி முடிய வெளியிட்ட வசூல் விளம்பரம்
இந்த இரண்டு விளம்பரங்களும் பத்திரிகையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் கொடுத்த விளம்பரம் .
இதை பார்த்தால் மக்கள் அனைவரும் கீழ்கண்ட விஷயத்தை உணர்ந்து புரிந்துகொள்ளலாம்.
http://i501.photobucket.com/albums/e...ps29b34524.jpg
http://i501.photobucket.com/albums/e...psd0bc8955.jpg
"ரிக்க்ஷாகாரன்" திரைப்படம் தேவிபாரடிஸ் திரை அரங்கில் 51 நாட்கள் ஓடி முடிய வசூலான தொகை RS 4,42,688 ( ருபாய் நாலு லட்சத்தி நாற்பத்தி இரண்டு ஆயிரத்தி அறநூற்று என்பத்தி எட்டு )
ஆனால் "ராஜா" திரைப்படமோ அதே தேவிபாரடிஸ் திரை அரங்கில் 50 நாட்கள் மட்டுமே ஓடி முடிய வசூலான தொகை RS 4,64,467.80 ( ருபாய் நாலு லட்சத்தி அறுபத்தி நாலாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு ருபாய் மற்றும் என்பது நயாபைசா )
இந்த இரண்டு விளம்பரங்களையும் பார்க்கும்போது எந்த ஒரு பொதுமக்களும் "ரிக்க்ஷாகாரன்" 51 நாள் ஓடி வசூல் செய்த தொகையை விட "ராஜா" திரைப்படம் 50 நாட்களிலேயே சுமார் RS 21,779.80 (ருபாய் இருபத்தி ஓராயிரத்தி எழுநூற்றி எழுபத்தி ஒன்பது ருபாய் மற்றும் என்பது நயாபைசா ) அதிகம் வசூல் செய்துள்ளது என்பதை தயாரிப்பாளர் கொடுத்த விளம்பர ஆதாரம் பார்த்து தெரிந்துகொள்வர்.
இதே விஷயத்தை ரசிகர் மன்ற நோட்டீஸ் மூலம் நாம் அச்சடித்தால் அது எப்படி உண்மையான ஆவணமாகும். அந்த நோடிசில் ஒரு 50,000 அதிகம் கூட யார் வேண்டுமானாலும் தங்கள் அபிமான நடிகரின் பட வசூலை மிகைபடுத்தி காட்டலாம். !
அதனால் தான் ரசிகர் மன்ற நோட்டீஸ் எக்காலத்திலும் ஒரு ஆதார ஆவணம் அல்ல என்று ஞாயம் பேசுவோர் கூறுவார்கள் !
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.
தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 60-களின் இறுதியில் விவசாய போராட்டங்கள் ஆரம்பித்தன. குறிப்பாக குறைந்த அளவு நிலமும் பம்ப் செட்டும் வைத்திருந்த விவசாயிகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் இந்த போராட்டங்கள் துவங்கின. நாம் இப்போது கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972-ல் அந்த போராட்டங்கள் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரமடைய துவங்கியது. நாராயணசுவாமி நாயுடு போன்று பிற்காலத்தில் விவசாய சங்க தலைவராக பிரபலமானவர்கள் அந்த 1972 போராட்டதின்போதுதான் தங்களை முன்னணி போராட்ட வீரனாக முன் நிறுத்திக் கொண்டனர். அன்று விவசாயிகள் தலைவராக இருந்தவர் சிவசாமி. ஜூன் முதல் வாரத்தில் (7-ந் தேதி என்று நினைவு) கோவை மாநகரில் மிகப் பெரிய காளை வண்டி போராட்டம் நடத்தினார்கள். முதல் நாளே பல சுற்றுவட்டார ஊர்களிலிருந்து வண்டிகளை கொண்டு வந்து இரவோடு இரவாக நகருக்குள்ளே நுழைந்து நகரையே ஆக்கிரமிப்பு செய்த விட்டனர். எந்த அளவிற்கு என்றால் மாவட்ட ஆட்சி தலைவரின் வாகனம் கூட அவரது அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. அவர் காரிலிருந்து இறங்கி நடந்தே அலுவலகம் சென்று அன்றைய முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்று அங்கே நிலவிய சூழலை பற்றி தகவல் தெரிவித்தார். பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டபப்டவில்லை. நாட்கள் செல்ல செல்ல போராட்டம் கடுமையாக பெருமாநல்லூர் என்ற ஊரில் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்த மூன்று பேர் உயிரிழந்தனர். இது தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது.
அதே நேரத்தில் அன்றைய ஆளும் கட்சியில் ஒரு பனிப் போர் ரூபம் கொண்டு பெரிதாவது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. அன்றைய முதல்வர் மு.க.வின் மூத்த மகன் மு.க.முத்துவை நாயகனாக்கி இரட்டை வேடங்கள கொடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிள்ளையோ பிள்ளை என்ற படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாராகி வெளியிடுவதற்கு ரெடியானது. 1971 அக்டோபரில் எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த படம் 1972 ஜூன் மாதம் 23 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முதல் நாள் தேவி பாரடைஸ் அரங்கில் பிரிமியர் ஷோ நடைபெற்றது. அந்த காட்சிக்கு வாலி அவர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு காரை விட்டு கிழே இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது "அனைத்துலக மு.க.முத்து ரசிகர் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பானர்தான். அதை பார்த்துவிட்டு உள்ளே போனவர் மு.க.முத்துவை வாழ்த்திவிட்டு [என்னை எங்க வீட்டு பிள்ளை என்று தமிழக தாய்மார்கள் கூறுவார்கள். முத்து நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் பெற வேண்டும்] படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அடுத்த கட்டதிற்கு நகர ஆரம்பித்தபோது அதற்கு ஆதரவாக பெருந்தலைவர் களமிறங்கினார். கட்டணம் குறைக்கப்பட வேண்டும், துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஸ்தாபன காங்கிரஸ். [1972 ஜூலை 5-ந் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக நினைவு]
இதன் நடுவில் ஜூலை 15 அன்று வெளியிடுவதற்காக தர்மம் எங்கே தயாராகிக் கொண்டிருந்தது. சொன்னது போல் ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்தது. பட்டிக்காடா பட்டணமா வெளியான அனைத்து ஊர்களிலும் 50-வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.
(தொடரும்)
அன்புடன்
.by Murali SrinivasQuote:
Quote:
.....படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.
Cloning turned Clowning!
அந்தக்காலகட்ட அரசியல் சதுரங்கத்தில் நடிகர் திரு M.G. ராமச்சந்திரனின் Cloning ஆக திரு.மு.க. முத்து முன்னிலைப்படுத்தப்பட்டதே அவர் வளர்ச்சிக்கு குந்தகமாகிவிட்டது. நல்ல உடற்கட்டும் சிறிது நடிப்புத்திறனும் குரல்வளமும் (like NT's one time play back singer C.S. Jayaraaman, Muthu's uncle) கொண்டிருந்த மு.க. முத்து யாரையும் நகலெடுக்க எண்ணாது build-up தவிர்த்து இப்போதைய அறிவுநிதி மற்றும் உதயநிதி போல தன்வழியில் பயணித்திருந்தால் அவர் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைத்திருக்கும்.
https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY
Mr RKS
You can include the pose of Tiruvalluvar also on the above. If possible that can be also posted here for the
benefit of the hubbers.
Regards
Intelligence of Tenelai Raman - NT's Superb Movie
http://youtu.be/HIgM-XCrw6g
Enjoy the comedy scene from Tenali Raman
http://youtu.be/5CvSf6--tJ4