-
அன்புள்ள வாசு சார் அவர்களுக்கு
மிஸ்டர் மகேந்திரா திரைப் படம் எனது தேடலில் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டமே... உங்களுக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்றால் எனக்கு மூன்று வகையான அதிர்ச்சியை கொடுத்தது...
1) நடிகர் திலகம் நடித்த பட வரிசை பட்டியலில் இந்த படம் பற்றி யாரும் சொல்லாதது , குறிப்பிடாதது
2) மொழி மாற்று படமாக இருந்தாலும் நடிகர் திலகமே குரல் கொடுத்திருந்தது ,இது மிக ஆச்சரியமாக இருந்தது
3) இப்படி ஒரு அபூர்வ படத்தை நாம் கொடுத்த பதிவுக்கு ஒரு பதில் கூட வரவில்லையே... ஒரு வேலை எல்லோருக்கும் இது முன்பே தெரிந்தது தானோ என நான் நினைத்தது...
என்ன இருந்தாலும் நீங்கள் இந்த படத்தின் பல சிறப்பை சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது... நன்றி உங்களுக்கு.
இந்த படம் தமிழில் சுமார் ஒண்ணரை மணி துளிகள்தான் இருந்தது... நடிகர் திலகத்தின் எல்லா காட்சிகளும் இதில் உள்ளன என நம்புகிறேன்..
நடிகர் திலகத்தின் 90 % படங்கள் உங்களிடம் இருப்பது மிக அருமை , நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் ஒரு 50 % என சொல்லலாம்...
இதற்கு பதில் உரைத்த திரு. வீயார் அவர்களுக்கும் நன்றி.
-
http://tamil.thehindu.com/multimedia...2_2008922g.jpg
திரு ராஜேஷ் அவர்களுக்கு இந்த புகைப்படத்தை சமர்பிக்கிறேன்
-
இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா
இத்தொடரில் அடுத்து வேறோர் கலைஞர் இடம் பெறும் நேரம் .... டி.ஆர்.பாப்பா அவர்களைப் பொறுத்த மட்டில் அவருக்கு உரிய புகழும் மரியாதையும் நிச்சயம் எக்காலத்திலும் நிலைத்து நிற்கும். அதை அவருடைய பாடல்கள் சொல்லிக் கொண்டே இருக்கும்..
முத்தாய்ப்பாக
டீச்சரம்மா படத்திலிருந்து...
முதல் இரண்டு வரிகளிலேயே கவிஞர் கதையை சொல்லி விட்டார்.. படத்தின் சாராம்சம் இந்த இரண்டு வரிகளிலேயே அடங்கியுள்ளது.
அதனுடைய உணர்வை இசையமைப்பாளரின் புலமையும் திறமையும் இசையரசியின் குரலில் வெளிப்படுகிறது..
சூடிக்கொடுத்தவள் நான் தோழி.. சூட்டிக் கொண்டவளே நீ வாழி..
இதற்கு மேல் என்ன வேண்டும்.. இயக்குநரின் திறமையும் இப்பாடல் காட்சியில் பளிச்சிடுகிறது. சூடிக் கொடுத்தவள் சூட்டிக் கொண்டவளின் புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தும் காட்சியாய் அமைத்து இந்த பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளார்.
இசையமைப்பாளரின் பாட்டுக்கு காட்சியமைப்பு நன்கு அமைந்து விட்டால் அது சிரஞ்சீவியாய் நிலைத்து விடும். அந்த வகையில் காலம்காலமாய் நிலைத்து நிற்கும் பாடல்.
கேட்க மட்டுமல்ல பார்க்கவும் வேண்டிய பாடல்..
https://www.youtube.com/watch?v=WGpToNeUBPM
-
நன்றி சுந்தர பாண்டியன் சார்.
1) //நடிகர் திலகம் நடித்த பட வரிசை பட்டியலில் இந்த படம் பற்றி யாரும் சொல்லாதது , குறிப்பிடாதது//
இந்தப் படம் நடிகர் திலகத்தின் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஒரிஜினல் தெலுங்கு 'நிவுரு கப்பின நிப்பு' நடிகர் திலகத்தின் 226 ஆவது படமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் திலகத்தின் 225 ஆவது சூப்பர் ஹிட் படமான 'தீர்ப்பு' படத்திற்கு அடுத்த படமாக.
//நடிகர் திலகத்தின் எல்லா காட்சிகளும் இதில் உள்ளன என நம்புகிறேன்.//
ஆமாம் சார். தெலுங்கில் உள்ள நடிகர் திலகத்தின் காட்சிகள் ஒன்று கூடக் குறையாமல் தமிழில் அப்படியே உள்ளன என்பது மகிழ்வான விஷயம். தெலுங்கில் உள்ள இதர சில காட்சிகள் தமிழில் இல்லை. நடிகர் திலகமே மையம்.
//நான் இப்போது தான் ஆரம்பித்துள்ளேன் ஒரு 50 % என சொல்லலாம்//...
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார். அத்தனை படங்களும் கிடைக்கப் பெறுவோம்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாட்டை முடித்தவள் நீ வாழி
என்ன வரிகள்!
'எனக்கென்று நினைத்திருந்தவனை நீ இறுதில் முடி(ந்)த்துக் கொண்டாயே தோழி '
'நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன்
அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன்'
நாயகனைக் காணாமல் அவன் பெயரில் காதல் கொண்ட இந்த ஏமாளி நாயகியின் மனநிலை இது.
'மாலை தொடுத்து மலர் கொண்டு
நல்ல மஞ்சள் குங்குமச் சிமிழ் கொண்டு
ஏழை எழுந்தேன் எனக்கென்று
ஏழை எழுந்தேன் எனக்கென்று
அந்த இறைவன் முடித்தான் உனக்கென்று'
'அநாதை ஏழையான நான் யாருமில்லாமல் எனக்கு நானே ஆதரவாய் இருந்து, எல்லாம் தயாராக, என் காதலனைக் கரம் பற்ற நம்பிக்கையோடு காத்திருந்தேனே!'
ஆனால் நடந்தது என்ன?...
என்ன பரிதாபம்! தோழி ஏமாற்றி காதலனை தட்டிப் பறித்தாலும் 'இறைவன் முடித்தான் உனக்கென்று' என்று அவளுக்கு அவன் உரிமையானதை பெருந்தன்மையாய் எடுத்துக் கொள்ளும் இவளை எப்படி பாராட்டுவது?
கடலும் வானும் உள்ளவரை
தென்றல் காற்று நடந்து செல்லும் வரை
வளர்க உந்தன் பள்ளியறை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை
தன் காதலன் நல்லவன்... காதலனை அவளுக்கு விட்டுக் கொடுத்ததோடல்லாமல் 'அவன் நல்லவன்... அவனை நீ வாழ வைப்பாய்' என்று மூன்று முறை அழுத்தமாகக் கூறி தோழி மீது நம்பிக்கை வைக்கிறாளே! இவளுடைய தியாகத்திற்கு ஈடு உண்டா?
தோழி வஞ்சித்தாலும், கிஞ்சித்தும் அவள் மேல் கோபம் கொள்ளாமல், அவள் புகைப்படத்தைப் பார்த்து அவள் நல்வாழ்வு வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறாளே இந்த அருமைத் தோழி!
அமைதியான சுசீலா அம்மாவின் பாடலின் இடையே வரும் எனதருமை பாப்பாவின் அந்த புல்லாங்குழல் இசையின் மகத்துவத்தை மறக்கவே முடியாது. அந்தத் தோழியின் உண்மையான உள்ளக் குமுறலை அந்த புல்லாங்குழல் பிட் இரண்டு செகண்டுகளில் நமக்கு உணர்த்தி விடுமே!
பாடல் அல்ல. இசைப் பாடம்.
தங்கத்தை எடுத்து தாம்பூலத்தில் வைத்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்!
-
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 18)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
இன்றைய தொடரில்
'அவள் அப்படித்தான்' தொடர்கிறது
http://i.ytimg.com/vi/jJR5Fl377vM/hqdefault.jpg
The movie, praised by many for being far ahead of its times in terms of both treatment and technique, had numerous English dialogues and frequently employed jump cuts (two or more shots taken from only slightly different angles being placed sequentially, so as to communicate the passing of time in an abrupt manner). Shot in black and white, “Aval Appadithan” had only three songs, all of which were composed by Ilaiyaraaja. (thanks TCRC)
பெண்ணினம் ஆண் வர்க்கத்தின் பிடியில் சிக்கி பரிதாபமாகத் தவிக்கும் நிலைமையை இப்பாடல் கமலின் குரலில் நமக்கு அருமையாய் உணர்த்துகிறது. மனதில் சஞ்சலம் ஏற்படுத்துகிறது. இப்படத்தின் நாயகியின் பரிதாப நிலைகளை மனதில் நினைத்தபடியே கமல் சோகமுற்றிருக்க பின்னணியில் அவருடைய குரலிலேயே ஒலிக்கும் அற்புத பாடல். ராஜாவின் கைவண்ணத்தில் மிக மென்மையாய் நம் இதயத்தைப் பிசைகிறது.
http://tcrcindia.files.wordpress.com...-hassan-wm.jpg
One of the songs, titled “Paneer Pushpangale,” was written by Gangai Amaren and was sung by Kamal Hassan himself. Now, we’re used to Kamal singing his own songs. But it’s quite refreshing to hear Kamal croon a ‘Raaja Sir’ (as Ilaiyaraaja is known in the Tamil film industry) number from that era. In fact, when we heard the song for first time, we couldn’t even identify Kamal’s voice. Check it for yourself. Here is “Paneer Pushpangale” from “Aval Appadithan”:
'பன்னீர் புஷ்பங்களே' என்று கமல் உச்சரிக்கும் போது தமிழைவிட மலையாள வாடை அதிகம் தெரிவதை உணரலாம். (புஷ்பன்ங்களே!:)) கமலுக்கு மலையாளத்தின் மேல் இருந்த கிரேஸையும் உணரலாம்.
'பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே
பல பேரைச் சேரும் பரந்தாமன் தன்னைப்
புகழ் பாடக் கேட்டதுண்டு இந்த பூமியிலே'
அச(சா)த்திய கற்பனை. கண்ணகி, மாதவி, நளாயினி என்ற கற்புக்கரசிகளின் கண்ணீரை உணர்ந்த இந்த உலகம் ஐவரின் ஆசைநாயகியாய் அவதிப்பட்ட பாஞ்சாலியின் துன்பங்களைப் பற்றி கவலைப்பட்டதோ கண்ணீர் விட்டதோ இல்லையே என்று கமல் கவலைப்படுவது வித்தியாச கோணம்.
பாஞ்சாலியிடம் பரிதாபம்
பரந்தாமனிடம் அநியாயம்
ஒருதலைப்பட்சம் காணும் உலகத்தை சாடும் கவிஞனின் கொதிப்பு.
கங்கை அமரன் பாடல் வரிகள் என்று நினைக்கிறேன்.
'நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது'
அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும் வரிகள்.
கமல் குரலில் பெண்மைத்தன்மை சற்று அதிகம் குடி கொண்டிருக்கும் பாடல்.
http://i982.photobucket.com/albums/a...an-Panneer.jpg
http://www.youtube.com/watch?v=cyxd5...yer_detailpage
-
அழும்போது பொங்கி வரும் கண்ணீரின் முதல் துளி ,
வலது கண்ணில் இருந்து வந்தால் அது ஆனந்தக் கண்ணீராம்...!
இடது கண்ணில் இருந்து வந்தால் , அது வலியினால் வடியும் கண்ணீராம்..!
இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் கண்ணீர் பொங்கி வந்தால் ,விரக்தியினால் வெளிவரும் கண்ணீராம்..!
[சற்று முன் கண்ணில் பட்ட நண்பரின் பதிவு ]
இதைப் படிக்கும்போது ஒரு கண்ணீர்ப் பாடல் என் காதுகளில் வந்து விழுந்தது ..
“இப்படி ஓர் தாலாட்டு பாடவா..அதில் அப்படியே என் கதையை கூறவா ..?”
எஸ்.ஜானகியின் குரல்.....
என்னைப் பொறுத்தவரை எஸ்.ஜானகியின் இடத்தில் யார் இருந்தாலும் , விரக்தியின் விளிம்புக்கே போய் இருப்பார்கள்...
“சிங்கார வேலனே தேவா” என்று கொஞ்சும் குரலில் , எஸ்.ஜானகி பாடிய “கொஞ்சும் சலங்கை” வெளிவந்த ஆண்டு 1962...
ஆனானப்பட்ட பி.சுசீலாவே பாட முடியாமல் திணறிப் போன பாடலாம் “சிங்கார வேலனே தேவா..”
அப்புறம் பி.லீலாவைக் கூப்பிட்டு அதைப் பாடச் சொல்ல , அவராலும் முடியாமல் போக..
அதன் பின் அழைக்கப்பட்டவர்தான் எஸ்.ஜானகி...!
“தேனோடு கலந்த தெள்ளமுதாக ...கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றலாக” அந்தப் பாடலைப் பாடியும் அடுத்த சில ஆண்டுகள் ,பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை எஸ். ஜானகிக்கு...
அப்புறம் இளையராஜா வந்து ..வாய்ப்பு தந்து...“மச்சானை பாத்தீங்களா” என எஸ்.ஜானகி நம்மையெல்லாம் கேட்ட ..அன்னக்கிளி வெளிவந்த ஆண்டு 1976…
இரண்டுக்கும் இடையில் 14 ஆண்டுகள் இடைவெளி....இருளில் மறைந்த நிலவாகவே இருந்து வந்தார் ஜானகி..!
இந்தக் கால கட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்பு..!
எந்த இசையமைப்பாளரும் அழைத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தராத அளவுக்கு ..குரலில் என்ன குறை இருந்தது எஸ்.ஜானகிக்கு..?
இத்தனை திறமை இருந்தும் ஏன் இந்த இடைவெளி..?
வாழ்வின் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று...
கால நேரமா..?பூர்வ ஜென்ம ஜாதகமா...?
இந்தக் கேள்விக்கு பதில் ஏது..?
“நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டிலே தங்கி வந்தது
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா”
-
அழும்போது பொங்கி வரும் கண்ணீரின் முதல் துளி ,
வலது கண்ணில் இருந்து வந்தால் அது ஆனந்தக் கண்ணீராம்...!
இடது கண்ணில் இருந்து வந்தால் , அது வலியினால் வடியும் கண்ணீராம்..!
இரண்டு கண்களிலும் ஒரே நேரத்தில் கண்ணீர் பொங்கி வந்தால் ,விரக்தியினால் வெளிவரும் கண்ணீராம்..!
[சற்று முன் கண்ணில் பட்ட நண்பரின் பதிவு ]
இதைப் படிக்கும்போது ஒரு கண்ணீர்ப் பாடல் என் காதுகளில் வந்து விழுந்தது ..
“இப்படி ஓர் தாலாட்டு பாடவா..அதில் அப்படியே என் கதையை கூறவா ..?”
எஸ்.ஜானகியின் குரல்.....
என்னைப் பொறுத்தவரை எஸ்.ஜானகியின் இடத்தில் யார் இருந்தாலும் , விரக்தியின் விளிம்புக்கே போய் இருப்பார்கள்...
“சிங்கார வேலனே தேவா” என்று கொஞ்சும் குரலில் , எஸ்.ஜானகி பாடிய “கொஞ்சும் சலங்கை” வெளிவந்த ஆண்டு 1962...
ஆனானப்பட்ட பி.சுசீலாவே பாட முடியாமல் திணறிப் போன பாடலாம் “சிங்கார வேலனே தேவா..”
அப்புறம் பி.லீலாவைக் கூப்பிட்டு அதைப் பாடச் சொல்ல , அவராலும் முடியாமல் போக..
அதன் பின் அழைக்கப்பட்டவர்தான் எஸ்.ஜானகி...!
“தேனோடு கலந்த தெள்ளமுதாக ...கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றலாக” அந்தப் பாடலைப் பாடியும் அடுத்த சில ஆண்டுகள் ,பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை எஸ். ஜானகிக்கு...
அப்புறம் இளையராஜா வந்து ..வாய்ப்பு தந்து...“மச்சானை பாத்தீங்களா” என எஸ்.ஜானகி நம்மையெல்லாம் கேட்ட ..அன்னக்கிளி வெளிவந்த ஆண்டு 1976…
இரண்டுக்கும் இடையில் 14 ஆண்டுகள் இடைவெளி....இருளில் மறைந்த நிலவாகவே இருந்து வந்தார் ஜானகி..!
இந்தக் கால கட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்கள் மட்டுமே பாட வாய்ப்பு..!
எந்த இசையமைப்பாளரும் அழைத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் தராத அளவுக்கு ..குரலில் என்ன குறை இருந்தது எஸ்.ஜானகிக்கு..?
இத்தனை திறமை இருந்தும் ஏன் இந்த இடைவெளி..?
வாழ்வின் புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று...
கால நேரமா..?பூர்வ ஜென்ம ஜாதகமா...?
இந்தக் கேள்விக்கு பதில் ஏது..?
“நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டிலே தங்கி வந்தது
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா”
-
வாசு சார்
மிகச் சிறந்த பாடலை இளையராஜாவின் இசை வரிசையில் தந்துள்ளீர்கள்...ருத்ரையா என்ற சிறந்த கலைஞனுக்கு நல்ல புகழாரம் தந்துள்ளீர்கள். சினிமாவில் தான் பதிக்கும் எந்தத் துறையிலும் தன் முத்திரையைப் பதிக்காமல் விடாத கமலஹாசன் என்ற அற்புதக் கலைஞனின் திறமையில் ஒன்றான பாடும் திறனை நன்கு பயன் படுத்திக் கொண்டவர் இளையராஜா. முதன் முதலில் அவருடைய பாடும் ஆற்றலை வெளிக் கொண்டு வந்த ஜி.தேவராஜன் அவர்களை நாம் பாராட்ட வேண்டும். 1978ம் ஆண்டு தீபாவளி வெடிச்சத்தத்தில் இதன் ஓசை எடுபடாமல் போயிற்று. என்றாலும் காலப் போக்கில் இதன் புகழ் பரவி இன்றைக்கு க்ளாஸிக் அந்தஸ்து பெற்று விட்டது. வெறும் அழகு பொம்மையாக வலம் வந்த ஸ்ரீப்ரியா அவர்களின் நடிப்பிற்கு சரியான தீனி தந்த படம் அவள் அப்படித்தான்.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாக உள்ளது. கமல் ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் நடிகர் திலகத்தை தரம் தாழ்த்தி விமர்சிக்கும் போது அல்லது அவரால் தான் நடிகர் திலகத்தைப் பற்றி மக்கள் அறியப் போகின்றனர் என்றெல்லாம் கூறி வரும் போது இதை நடிகர் திலகம் திரியிலேயே கூறும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் கிடைக்கும் போதும் நடிகர் திலகத்தை தெய்வமாய் வழிபடும் நம் மனம் படும் பாடு அந்த இறைவனுக்குத் தான் தெரியும். இதற்கெல்லாம் விடிவு அந்த நடிகர் திலகம் தான் தரவேண்டும்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
டியர் ராகவேந்திரன் சார்
நன்றி.
நீங்கள் வருத்தப்பட்டுள்ள விஷயங்கள் நியாயமானதே. தங்களுடைய தற்போதைய signature தங்களின் மனநிலையை நன்கு உணர்த்துகிறது. தாங்கள் குறிப்பிட்டது போல அங்கு என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எல்லை மீறல் அதிகமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மிகவும் வருத்தமாகவும் இருந்தது. நீங்கள் நினைக்கும் வண்ணத்தில் எழுதப்படவில்லை என்ற மேல்பூச்சுகளும் பூசப்படுகின்றன. நடிகர் திலகத்தின் புகழ் பற்றி சேற்றை வாரி இறைக்கும் பதிவுகள் நிச்சயம் கண்டிக்கத் தக்கவையே. ஆனால் புரிந்து கொள்ளப் படவில்லை என்று நம் மேலேயே திரும்பும் அபாயம் வேறு சூழ்ந்துள்ளது. வேறு யாராவது எழுதி இருந்தாலும் கூட ஆச்ச்ரயமில்லை. இதில் நம் நண்பர்கள் நிலையும் என்னவென்று புரியவில்லை. ஒருவேளை நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என்னமோ.
ஆனால் நடிகர் திலகம் திரியில் உள்ள நண்பர்களே நடிகர் திலகத்தை சிலாகித்துக் கொள்வது போன்ற கேலியும், கிண்டலும் தரும் இழுக்கான வரிகளை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்ற மனதை புண்படுத்தும் வார்த்தைகள் பழுத்த அனுபவசாலிகளின் கருத்தாக வருவதுதான் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. நடிகர் திலகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு புறந்தள்ளப்படுகிறாரோ என்கிற சந்தேகமும் வலுக்கிறது. அளவுக்கு மீறிய சுதந்திரம் என்ற பெயரில் பலரும் எழுத ஆரம்பித்திருப்பது சரியான போக்காக தெரியவில்லை. சுதந்திரத்தை நாம் குறை சொல்லவில்லை. அது வேண்டப்பட்டதே. அதுதான் முறையும் கூட. அது மற்ற திரிகளில் இல்லாமல் அங்கு மட்டும் தாறுமாறாக செயல்படத் துவங்கியுள்ளது நிச்சயம் ஒவ்வொரு நடிகர் திலகம் ரசிகன் நெஞ்சிலே சொல்லொணா வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இந்த நிகழ்வுகளெல்லாம் நல்லதுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. வசந்த மாளிகையில் தலைவர் சொல்லுவது போல 'இதையெல்லாம் சட்டை பண்ணாம போறதுதான் நமக்கு மரியாதை' என்ற வெறுப்புதான் இப்போதெல்லாம் மேலோங்குகிறது.
கடவுள் சொன்னது போல
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
என்ற நம்பிக்கையை இன்னும் நெஞ்சில் விதைத்துக் காத்திருப்போம்.