வணக்கம் ஜி
Printable View
வணக்கம் ஜி
நாளை 20.06.2015 சனிக்கிழமை மாலை மெல்லிசை மன்னரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக அவர் இசையமைத்த படங்களின் முகப்பிசை, பின்னணி இசை, இடையிசை போன்றவற்றை விளக்கமாக அலசும் வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழின் நிழற்படம்.
அனுமதிச்சீட்டுக்கு நிழற்படத்தில் உள்ள கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்க
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...77875240_o.jpg
அபூர்வ நிழற்படம்..
மணியோசை திரைப்படப் பாடல் உருவாக்கத்திற்காக இயக்குநர் மாதவன், கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி விவாதிக்கும் காட்சி..
http://i872.photobucket.com/albums/a...psmhyertok.jpg
பேசும்படம் டிச.1962 இதழிலிருந்து..
நண்பர்களே,
ஜூன் 24 கவியரசர் மெல்லிசை மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று முழுதும் இவர்கள் இணையில் வெளிவந்த பாடல்களைப் பற்றி பகிர்ந்து கொள்வோமா..
கருவின் கரு - பதிவு 100:):smile2:
தாயின் பரிமாணங்கள் -1
நம் எல்லோரிடமும் தாயின் சில அம்சங்களாவது இணைந்திருக்கும் - உறவுகள் வேறுபட்டாலும் , பிறருக்கு நாம் கருணையை , அன்பைக் காட்டும் போது நாமும் தாய்மை என்ற பெயரை பெற்றுவிடுகிறோம் - கருணைக்கு "அம்மா " என்ற ஒரே அர்த்தத்தை தவிர வேறு ஒரு அர்த்தம் அதற்கில்லை .. இங்கே பாருங்கள் - ஒரு தங்கை தன் அண்ணனை "தாயின் முகம் இங்கு நிழலாடுகிறது "என்று பாடுகிறாள் - ஒரு அண்ணன் இங்கே ஒரு தாயாக அவள் கண்களில் தெரிகிறாள்
https://youtu.be/MmWZrz-IwdM
தாயின் பரிமாணங்கள் -2.
இன்னொமொரு தங்கை அண்ணனை ஒரு கோயிலாகவும் , தன்னை அந்த கோயினுள் இருக்கும் தீபமாகவும் நினைக்கிறாள் - தாய் தந்தை அன்பை தன் அண்ணன் மூலம் தான் பார்க்கிறாள் - இங்கும் அந்த அண்ணன் ஒரு தாயாக மாறுகிறான் ..
https://youtu.be/VLMjv8LzMHY
கருவின் கரு - பதிவு 101
தாயின் பரிமாணங்கள் -3.
இங்கே ஒருவன் தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும் - தாளாத என் ஆசை சின்னம்மா -- வெகு நாளாக என் ஆசை சின்னம்மா " என்று பாடுகிறான் -தாயாகுவதில் இவனுக்குத்தான் எவ்வளவு பெருமை !! உருக வைக்கும் பாடல் .....
https://youtu.be/J0TrMbpWScg
தாயின் பரிமாணங்கள் -4
இங்கே தங்கையைப்பற்றி கனவு காணும் ஒரு அண்ணன் - தாயில்லை அவளுக்கு வரன் பார்க்க ----
பூமணம் கொண்டவள் பால் மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
எல்லாமே தங்கைதான் என்று வாழும் ஒரு அண்ணன் - தாயின் பாசத்தையும் மிஞ்சியவனாகுகிறான் ......
https://youtu.be/9P8Hynotz1M
தாயின் பரிமாணங்கள் -5
நட்புக்காக எதையும் செய்பவன் இவன் --- தன் காதலையும் தன் நண்பனுக்காக மறக்கிறான் ... அவன் காதலி அவனுக்கே தங்கை ஆகின்றாள் --- தன் அன்பையும் , பாசத்தையும் உலகம் புரிந்துக்கொள்ளவில்லை - நண்பன் சந்தேகிக்கிறான் அவர்கள் உறவை ----- வெறுத்த மனம் - விதைக்கும் விஷ வார்த்தைகள் - இதன் நடுவில் அவளை அவளின் காதலனுடன் இணைக்கிறான் - இங்கேயும் தாயை மறக்காமல் வரும் வார்த்தைகள் - தாய் வழியே வந்த நாணத்தைக்காட்டி ------------
வேறு யார்
இப்படி எழுதமுடியும்?
இப்படி இசையமைக்கமுடியும்?
இப்படிப்பாடமுடியும்?
இப்படி நடிக்கமுடியும்
அது ஒரு பொற்காலம்... இணையத்தளத்தில் ஒருவரின் புலம்பல் ------
https://youtu.be/prT3e7Wb29M
கருவில் கரு - பாகம் 1 - இத்துடன் இந்த பாகம் இனிதாக முடிவடைகிறது - எவ்வளவோ சொல்ல விரும்பினேன் - கொஞ்சம் தான் சொல்ல முடிந்தது - அன்னையின் கருணைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க யாரால் முடியும் ? பல பாடல்கள் , உங்களுக்குத் தெரிந்தவைகள் இங்கே நான் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம் --- சில பதிவுகள் தப்பித்தவறி உங்கள் மனங்களை காயப்படுத்திருக்கலாம் - இரண்டுக்கும் முதலில் என் மன்னிப்புக்கள் .....
ஒரு வேள்வியைப்போல ஆரம்பித்தேன் - எண்ண ஓட்டங்களில் தடை வரவேயில்லை அவளின் அருளால் ... முன்னமேயே சொன்ன மாதிரி இங்கு சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் , என் வாழ்க்கையிலும் , உறவினர்கள் வாழ்க்கையிலும் , நண்பர்கள் சிலர் வாழ்க்கையிலும் நடந்த உண்மை சம்பவங்கள் - மிகைப்படுத்தப்பட்டவைகள் அல்ல ......
நடமாடும் அந்த தெய்வத்திற்கு ஒரு பாமாலை நான் சூட வாயிப்பு கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் , இந்த திரியை ப்படிக்கும் அத்தனை நல்ல இதயங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . இறைவன் எங்குமே தனியாக இருப்பதில்லை அவள் உருவில் என்றுமே நம்முடன் வாழ்கிறான் - இருக்கும் போது மதிப்போம் - அவள் நிழலும் நமக்கு உதவும் - இல்லை என்று ஆகி விட்டால் அவளைப்போல ஆகமுயற்ச்சிப்போம் மற்றவர்களுக்கு ------
இங்கு இருக்கும் / படிக்கும் எல்லோருடைய அன்னையர்களின் பாதங்களில் இந்த கருவின் கரு - பாகம் 1 யை அன்புடன் வணங்கி சமர்ப்பிக்கிறேன் .
அன்புடன்
https://youtu.be/PFPX9OgqEG4
https://youtu.be/jDn2bn7_YSM
RECAP - கருவின் கரு - பாகம் ஒன்று ( ஆரம்பித்த நாள் 23/05/205-பதிவு எண் 98 ) பதித்த பாடல்கள் , சொற்பழிவு , ஸ்லோகங்கள் மொத்தம் 155க்கும் மேல் ......
முதலில் ஆதி சங்கரரின் மனம் உருகி தாயைப்பற்றி பாடிய மாத்ருகா பஞ்சகம்த்தை பார்த்தோம் - 5 பாடல்கள் அன்னையின் சிறப்பை சிகரமாக வைத்தவை
அதனை ஒட்டி தாயின் அன்பை , கருணையை பல திரைப்பட பாடல்கள் மூலம் கண்டு உருகினோம் - மொழி வித்தியாசம் இல்லாத பாடல்கள்
ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக பார்த்தோம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .
இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .
அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - இவைகளில் சம்பந்தப்பட்ட திரைப்பாடல்களை ரசித்தோம் .
பிறகு நவரத்தினத்தால் அன்னைக்கு ஒரு அழகிய மாலையைத்தொடுத்தோம் ..
கடைசியாக அன்னையின் கருணையை வைத்து எழுப்பப்படும் பல பரிமாணங்களைபார்த்தோம் - அவளின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் .
திரு கோபாலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் - கருவில் ஒரு பதிவை உருக்கமாக போட்டதற்காக ..... அதே மாதிரி திரு ஆதிராமும் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்திருக்க அந்த இறைவன் அருள் செய்யட்டும் -----ராஜேஷ் அவர்களும் அவர் பங்கில் சில நல்ல பாடல்களை சேர்த்திருந்தார் - பிறகு CK வின் உருக்கமான அவருடைய தாயைப்பற்றிய பதிவு - உற்சாகப்படுத்தும் திரு வாசு , திரு கல்நாயக் , திரு முரளி , திரு ராகவேந்திரா சார் ,திரு கலை அண்ட் திரு வினோத் அவர்களின் வார்த்தைகள் ( யாருடைய பெயர்கள் விட்டிருந்தால் மன்னிக்கவும் ) , திரு கோபு அவர்களின் திரிக்குப்பின் இருந்து வரும் "likes ", திரு ராஜ் ராஜ் அவர்களின் மௌனம் கலந்த வாழ்த்துக்கள் - சொல்லிக்கொண்டே போகலாம் ----எல்லோருக்கும் மீண்டும் எனது தாழ்மையான வணக்கங்கள் , நன்றிகள்
அன்புடன்
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.
கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.
அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.
1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.
2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)
3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)
4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.
5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )
கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.