Just saw this ... :rotfl: ... Idhukkum Nayan threadkku enna sambandham.
Printable View
She looks great in the GRT ad.
Sent from my iPhone using Tapatalk
Arasiyalikku irakki CM aakki azhagu paarakanum ivangalai.
நயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குணங்கள்! - VIKATAN
தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் ஹிட்களால் லைக்ஸ் குவித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இப்போதைக்கு தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் அவர்தான். ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன்... இரண்டிலும் நயன்தாரா ஏன் ஹிட்..?
இந்த 11 கெத்து குணங்கள்தாம்.!
1) சின்சியர் குயின்
வாழ்க்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்த போதும் வேலையில் நயன் எப்போதும் கில்லி. தனது சொந்த பிரச்னைகள் படப்பிடிப்புகளில் தன் கவனத்தைக் கலைக்காமல் பார்த்துக் கொள்வார். ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டால் நயனின் கவனம் அதில் மட்டுமே..
2) பவர் பெர்ஃபார்மர்
வெறும் கிளாமர் டாலாக வந்து செல்பவரல்ல நயன். நடிப்புதான் தொழில் என ஆனபின், தன்னை ஒரு தேர்ந்த நடிகையாக உருமாற்றிக் கொண்டே இருக்கிறார். அதனால் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அவரைத் தேடி வந்தன. அப்படி வந்ததை கச்சிதமாக பிடித்துக் கொள்வார் நயன். இந்த ஆண்டு பேய் ஹிட் அடித்த மாயா அப்படி வந்ததுதான். படத்தின் இயக்குநர் ஆண்ட்ரியாவை நடிக்க வைக்கத்தான் நினைத்திருந்தார். ஆனால், பேச்சுவாக்கில் கதையைக் கேட்ட நயன், சம்பளம் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உடனடியாக அந்த புராஜெக்ட்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.
3) தில் லேடி
ஓடி ஒளிவது நயனுக்கு எப்போதும் பழக்கமில்லை. எதையும் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகவே இருக்கிறார். அந்த தைரியம் தான் நயனின் பலம் என்கிறார்கள் அவர் நலன் விரும்பிகள். ’உங்கள் அழகு எது’ என ஒரு பேட்டியில் கேட்டபோது நயன் சொன்ன பதிலும் அதுதான் “என் தைரியம்”!
4) வைரல் ரீச்
நயனின் சொந்த ஊர் கேரளா. நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். ஆனால், தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே, ‘நம்ம பொண்ணு’ என எல்லா மாநிலங்களிலும் ஒரு பிரியம் இருப்பதால், நயன் நடிக்கும் படங்களுக்கு நாலு மாநிலங்களிலும் வைரல் ரீச் கிடைக்கும்.
5) தொழில் வேறு நட்பு வேறு
நயன்தாராவுக்கு ஒரு நல்ல குணம் உண்டு. சினிமாவையும் பர்சனல் வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ள மாட்டார். சிம்புவுடன் பிரச்னை. ஆனால் அதனால் அவருடன் நடிக்க மாட்டேன் என அவர் மறுக்கவில்லை.
6) க்யூட்டி பியூட்டி
சில நடிகைகள் மட்டுமே எல்லா உடைகளிலும் பார்க்க அழகாய் இருப்பார்கள். நயனுக்கு அந்த அதிர்ஷ்டம் உண்டு. சேலை முதல் பிகினி வரை எல்லா உடைகளிலும் நயன் வந்திருக்கிறார். ஆனால் முகம் சுளிக்க வைத்ததே இல்லை. அந்த ரசனைதான் நயனை ரசிகர்களிடம் நிலைக்க வைத்திருக்கிறது.
7) பெஸ்ட் கேர்ள்ஃப்ரெண்ட்
நயன்தாராவுக்கு இண்டஸ்ட்ரி முழுக்கவே நல்ல நண்பர்கள் உண்டு. அவர்களுக்காக நிறைய செய்திருக்கிறார் நயன். அவர்களும் தக்க சமயத்தில் அவருக்கு உதவி இருக்கிறார்கள். மீண்டும் நடிக்க வந்தபோது முன்னணி நடிகர்கள் பலர் அவருடன் நடிக்கத் தயாராக இருந்தார்கள். அஜித்துடன் ஆரம்பம், ஆர்யாவுடன் ராஜா ராணி போன்ற கம் பேக் படங்கள் அப்படி அமைந்ததுதான்.
8) வெட்டி பந்தா வேஸ்ட்
தனது ரீச் என்ன என்பது அவருக்குத் தெரிந்தாலும் அடக்கமாகவே இருப்பார். வெட்டி பந்தா என்பதே நயனிடம் கிடையாது என்பது கோலிவுட் டாக். தொலைக்காட்சி பேட்டிகளிலும் அது வெளிப்படையாகவே தெரியும். மனதுக்கு கஷ்டமான கேள்விகள் என்றாலும் கொஞ்சம் உறுதியான பதில்கள் கிடைக்குமே தவிர, பந்தாவோ, வெறுப்போ இருக்காது.
9) தனி ஒருத்தி
பொதுவாக நடிகைகள் பலர் சினிமா குடும்பத்தில் இருந்தோ, மாடலிங் துறைகளில் இருந்தோ வருவதுண்டு. ஆனால் நயன் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர். அது அவரது ப்ளஸ்களில் ஒன்று!
10) காசு பணம் துட்டு முக்கியமில்லை
இப்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நயனின் சம்பளம் கோடிகளில் என்கிறார்கள். ஆனால் மலையாள இண்டஸ்ட்ரியில் ஹீரோக்களுக்கே அது கிடைப்பதில்லை. அது சின்ன மார்க்கெட். ஆனால், மலையாளப் படங்களில் வாய்ப்புகள் வந்தால் தவறாமல் நடிப்பார் நயன். சம்பளமும் சில லகரங்கள் தான். பணம் தனது அடையாளத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
11) பாசிட்டிவ் பலன்கள் மட்டுமே
“பிரபுதேவாவுடன் காதலில் இருந்த போது ஒருநாள் இது பிரேக் அப் ஆகும் நினைத்தீர்களா?” என நயனிடம் கேட்டார்கள். “நான் எந்த வேலை செய்யும்போதும் நெகட்டிவாக நினைக்க மாட்டேன். அதன் நல்லதை மட்டுமே பார்ப்பேன்” என்றார். அதுதான் நயன். எப்போதும் பாசிட்டிவ்வாக யோசிப்பார். அது தவறிப்போனாலும் அதில் அவருக்கு கிடைத்த பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வார். வருந்த மாட்டார்!
- கார்க்கி பவாபின் குறிப்பு: நீங்களும் நயன்தாரா ரசிகரென்றால், அவரிடம் உங்களுக்குப் பிடித்த குணத்தை கமென்ட் பாக்சில் பதியலாமே..!
விக்னேஷ்சிவன் குறித்து நயன்தாரா அளித்த முதல் பதில்!
நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கிசுகிசுவில் சிக்கினார் நயன்தாரா. இப்போதுவரை டாப் கிசுகிசு என்றால் அவர்கள் தான். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நயன்தாரா விக்னேஷுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என தினமும் ஏதேனும் ஒரு அரசல் புரசல் செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்.
இந்நிலையில் நயன்தாராவிடம் விக்னேஷ் குறித்து கேள்வி வைக்கப்பட அதற்கு எந்தக் கருத்தும் இல்லை(No comments) என இரண்டே வார்த்தையில் முடித்துள்ளார். மேலும் எப்போதும் உங்களைக் குறித்த கிசுகிசுக்கள் தலைப்புச் செய்திகளாகி விடுகிறதே எனினும் நீங்கள் எதற்கும் பதிலளிப்பதில்லையே ஏன்? எனக் கேள்வி வைத்தபோது அதற்கு கொஞ்சம் காரசாரமாகவே பதிலளித்துள்ளார்.
அவர் பேசுகையில், மீடியாக்கள் ஏன் எப்போதும் நடிகர்களின் சொந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் நாங்கள் பொழுதுபோக்கு சார்ந்த துறையில் இருப்பதால் தான். ஆனால் எங்கள் சொந்த வாழ்க்கை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு அல்ல. மீடியாக்கள் என் சொந்த வாழ்க்கை குறித்து முக்கியத்துவம் கொடுத்து எழுதினாலோ, பேசினாலோ கண்டிப்பாக நான் அதற்கு பதிலோ, கருத்தோ ஏதும் தர இயலாது.
காரணம் எனது சொந்த வாழ்க்கைக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என்னைப் பொருத்தவரை வேலையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நல்ல படங்கள் தேர்வு செய்யவும் முயன்று வருகிறேன் எனக் கூறியுள்ளார் நயன்தாரா.
2015 இன் கனவுக்கன்னி யார்?....சர்வே முடிவு!
2015 முடிவை நெருங்கிவிட்டது. 2015ம் வருடமும் பல நடிகைகளுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து, சில நடிகைகளுக்கு எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்தது. பல புது ஹீரோயின்களையும் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், அதிகப் படங்கள் மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர்கள் வட்டம், நடிப்பு, என 2015ம் ஆண்டின் கனவுக் கன்னி யார்? என்ற கேள்வியுடன் சினிமா விகடனில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நயன்தாரா அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
‘மாயா’, ‘மாஸ்’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ என நயன்தாராவுக்கு இந்த வருடம் அமைந்த படங்களும் ஒரு காரணம். முக்கியமாக நானும் ரவுடிதான், மாயா போன்ற படங்கள் 60 சதவீதம் நயன்தாராவை மையப்படுத்தியே வெளியான படங்கள். இதன் காரணமாக சேலத்தில் கடைத்திறப்பு விழாவின் போது ஊரையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு நயன்தாராவைக் காண கூட்டம் குவிந்தது.ஒரு நடிகையின் வரவிற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது என்றால் அதுவே முதல் முறை எனலாம். கருத்துக்கணிப்பிலும், நயன்தாரா 49.5 சதவீத வாக்குகளுடன் 2015ம் ஆண்டின் கனவுக் கன்னியாக முதலிடத்தில் இருக்கிறார்.
மற்ற நடிகைகள் பிடித்துள்ள இடமும் வாக்குகளின் சதவீதமும்.
1. நயன்தாரா 45.5%
2. சமந்தா 11%
3. ஸ்ரீதிவ்யா 8%
4. அனுஷ்கா 7%
5. எமி ஜாக்சன் 5%
6. த்ரிஷா 4%
7. ஹன்சிகா 4%
8.ஸ்ருதி ஹாசன் 4%
9. காஜல் அகர்வால் 3%
10. லட்சுமி மேனன் 3%
11. தமன்னா 2%
Nandri Makkalay
http://www.actressimages.in/wp-conte...llpapers-3.jpg
Anuska Dedication Level 2015 = Johnny Depp + Dicaprio + Christian Bale => Vera Level
http://moviegalleri.net/wp-content/g...os_1732c3f.jpg
http://www.iflickz.com/wp-content/up...k-revealed.jpg
http://galleries.celebs.movies.3.plu...a4f15236ca.jpg
Congrats to Nayan, indeed a great year for her too.
http://www.breezemasti.com/gallery/d...ons-2012-1.jpg