நன்றி Mr .கார்த்திக்.என்னை பற்றி சிறு குறிப்பு.நான் நெல்லையில் 1967 ல் பிறந்தவன் நடிகர்திலகத்தின் ரசிகன்
Printable View
நன்றி Mr .கார்த்திக்.என்னை பற்றி சிறு குறிப்பு.நான் நெல்லையில் 1967 ல் பிறந்தவன் நடிகர்திலகத்தின் ரசிகன்
Hearty welcome to mr sankara, we wish you to get into NT OCEAN AND GET UPDATES. ALL THE VERY BEST.
dear karthik Sir. It all depends on the maturity of fans when they are madly after their heroes. In the Movie Gayathri Jaishankar was top billed though Rajinikanth was the hero cum villain. But in Murattukkaalai the scenario changed and Rajini got his top billing but with respect Jai was given a display in the titles as 'and' Jaishankar. However, our eyes are used to see the titile Nadigar Thilagam Sivaji Ganesan in the first place and the story should go round him only. In movies like Pennin Perumai and Paarthal Pasi Theerum the story was around GG but yet NT got the first billing. That is why these movies with our NT's prestigious presence are filtered out and our minds do not accept them as pure NT movies.
திரைஉலகம் மறக்க முடியாத 1972 - தென் இந்திய திரைப்பட வரலாற்றிலயே முதன் முதலாக - A, B, C சென்டர்களை உள்ளடக்கிய 29 ஊர்கள் 31 திரை அரங்கங்களிலும் 150 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் கண்ட திரைக்காவியம்
1971இன் கடைசி படமாக வந்து அப்போது வெளிவந்த மிகவும் பேசப்பட்ட பிரம்மாண்ட படங்களை விட பல மடங்கு இமாலய வெற்றிபெற்ற நடிகர் திலகத்தின் பாபுவிற்கு பிறகு ...1972இல் முதல் படமாக நடிகர் திலகம் மிகவும் இளமை பொலிவுடன், அழகுடன், ஸ்டைலாக நடித்து வெளிவந்து, மிகபெரிய வசூல் திருப்புமுனை ஏற்படுத்துகிறது ராஜா.
Devi Paradise திரை அரங்கின் முந்தைய 51 நாட்கள் வசூல் சாதனை, நடிகர் திலகத்தின் ராஜாவால் 50 நாட்களில் முறியடிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே !!
ராஜா படத்திற்கு மற்றும் ஒரு சிறப்பு இருக்கிறது. 23ஆம் தேதி, நமது இந்திய தேசத்தின் நாட்டிற்க்காக உயிர் துறந்த விமான படை வீரர்களின் மனைவியர் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் க்ஷேம நல நிதிக்காக சென்னை தேவி Paradise திரையரங்கில் திரையிடப்பட்டு அந்த வசூல் அனைத்தும், மற்றும் நடிகர் திலகத்தின் நன்கொடை உட்பட அவர்களுக்காக கொடுக்கப்பட்டது எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத விஷயம். ! ஆனால் இதனை நடிகர் திலகமோ மற்றவரோ சிறிதளவும் விளம்பரபடுத்தவில்லை என்பது திரைஉலகம், அரசியல் உலகம் கண்டிராத மிகபெரிய ஆச்சர்யம் . ஆனால் விமான படையின் RECORD REGISTER OF DONATIONS புத்தகத்தில் இன்று சென்றாலும் பொதுமக்கள் என்ற முறையில் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு காண முடியும்.
திரையுலகில் நடிகர் திலகத்தால் யாரைபோலவேண்டுமானாலும் சண்டை காட்சியில் பரிமளிக்கமுடியும் என்று மீண்டும் நிரூபித்தபடமான ராஜாவிற்கு அடுத்தபடியாக முற்றிலும் மாறுபட்ட கதையம்சமும் கதாபாத்திரமும் கொண்ட திரைப்படம் ஞானஒளி March 11அம் தேதி வெளிவருகிறது...
அதாவது ராஜா வெளிவந்து வெறும் 45-55 நாட்களுக்குள், அதுவும் 5 தியேட்டர்களில் வெளியிடு.
ஞானஒளி வெளிவந்த சமயத்தில் சென்னையிலும் மற்றும் அதன் சுற்றுபுரங்களிலும் நடிகர் திலகத்தின் சுமார் 20 திரைப்படங்கள் ( ராஜா 5 தியேட்டர்களில்)ஓடிகொண்டிருகின்றன..! அதன் ஆவணம் (உபயம் பம்மலார்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Attachment 2467
அதுமட்டுமா? Plaza திரை அரங்கில் சுமார் 136 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் வேறு.. ஆவணம் உபயம் திரு.பம்மலார்.
Attachment 2468
இப்படி ஞானஒளி அனைவருக்கும் ஞானத்தை ஏற்றி முடிவதற்குள் மே 6 முதல் 1972ஆம் ஆண்டின் இரெண்டாவது கருப்பு வெள்ளை காவியம் பட்டிக்காடா பட்டணமா ரிலீஸ்...
அதாவது முதல் படம் ராஜா வெளிவந்து 55 நாட்களுக்குள் ,
இரெண்டாவது படம் ஞானஒளி வெளிவந்து வெறும் 45 நாட்களுக்குள்
மூன்றாவது படமும் ரிலீஸ்...முதற்க்கண் இதவே ஒரு மிகபெரிய சாதனை !
பட்டிக்காடா பட்டணமா வின் வசூல் சாதனை இன்றுவரை முரியடிக்கபடாத ஒன்றாகும். திரையிட்ட 29 ஊர்களில் உள்ள , 31 திரை அரங்குகளில் (A , B , C என அழைக்கபடுகிற மூன்று சென்டர்களிலும் ) 150 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்... முறியடிக்கப்படாத, முறியடிக்கமுடியாத சாதனையாக விளங்குகிறது !
அந்த சாதனை விளம்பரம் 50வது நாள் விளம்பரத்துடன், 6 வார வசூலுடன் ( ருபாய் 30 லட்சத்தி 54ஆயிரத்தி 573 ருபாய் 34 நயாபைசா) சேர்த்து வெளிவந்தது அனைவர் பார்வைக்கும்...!
ஒரு திரைப்படம் பெரும்பாலான திரை அரங்குகளில் 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதே மறுக்கமுடியாத மிகபெரும் சாதனை என்று ஒத்துகொள்கிற பட்சத்தில்,
நம் நடிகர் திலகமோ அந்த சாதனயைவிட ஒரு படி மேலாக தான் நடித்து வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் மூலம்
தென் இந்திய திரைப்பட வரலாற்றிலயே முதன் முதலாக ஒரு நடிகருடைய திரைப்படம் திரையிட்ட 29 ஊர்களில் உள்ள A , B , C என அழைக்கபடுகிற மூன்று சென்டர்களிலும், அனைத்து திரையரங்குகளிலும்(அதாவது 31 திரையரங்குகளிலும் ) 150 தொடர்ந்து அரங்குநிறைந்த காட்சிகளை எந்த வித பிரம்மாண்டமும் இல்லாமல் ஒரு கருப்பு வெள்ளை படத்தில் 1972லயே செய்து காட்டிவிட்டார் என்று நினைக்கும்போது ஏன் இந்த இமாலய சாதனையின் சிகரமாக விளங்கும் இந்த முரியடிக்கபடாத சாதனை எல்லாம் மக்களிடத்தில் சென்றடையவில்லை என்று தெரியவில்லை. !
அவர் நடித்த முந்தைய படங்கள் திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும்போதே 45 நாட்களில் வெளிவந்த மூன்றாவது படம் பட்டிக்காடா பட்டணமா. அந்த காவியத்தின் 150 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் மற்றும் 6 வார வசூல் விபரங்களின் ஆவணம் அனைவருக்காகவும்.! உபயம் திரு.பம்மலார்
Attachment 2469
எனக்கு தெரிந்த சிறு தகவல்
நெல்லையில்
தினசரி 3 காட்சிகள் நடைபெற்ற காலத்தில் தினசரி காலைகட்சி ஆரம்பிகப்பட்ட முதல் திரைப்படம் அந்தமான் காதலி (மறு வெளியீடு )வருடம் 1982 திரைஅரங்கு பூர்ணகலா
தினசரி 4 கட்சிகளாக 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் முதல் மரியாதை (திரை அரங்கு-சிவசக்தி)
இன்று பிறந்த நாள் காணும் அருமை சகோதரரும் நமது யாஹூ சிவாஜி குரூப்ஸ் தலைவருமான சங்கர நாராயணன் [சங்கரா 70] அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
திரியின் புதிய வரவும் நெல்லை சீமையின் மைந்தனுமான ஷண்முகா அவர்களுக்கு வரவேற்ப்போடு கூடிய வாழ்த்துகள்.
அன்புடன்
மதுரை அலங்காரில் சென்ற வாரம் வெற்றி முரசு கொட்டி ஓடி முடித்து, உடனே 27-ந் தேதி சனிக்கிழமை முதல் வண்டியூர் பழனி ஆறுமுகாவில் வசந்த மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி வருகிறது.
மதுரையில் நடிகர் திலகத்தின் வெற்றி சித்திரங்களின் தொடர் பவனி தொடர்கிறது. வரும் வெள்ளி ஆகஸ்ட் 2 முதல் மதுரை சென்ட்ரலில் ஸ்டைல் சகரவர்த்தியின் எங்கள் தங்க ராஜா வெளியாகிறது.
அன்புடன்
என்றுமே மனம் வீசும் பாரிஜாத பாசமலர் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை வெகு கோலாகலமாக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
சத்யம் வளாகம் காலையிலே களைகட்ட தொடங்கி விட்டது. சாதரணமாக இது போன்ற விழாக்கள் சத்யம் வளாகத்தில் நடைபெறும்போது விழா தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே அரங்கத்தினுள்ளில் ஆட்களை அனுமதிப்பது வழக்கம். ஆனால் இன்று காலை 9 மணிக்கு விழா என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலையில் 8 மணி முதலே வந்து குவிந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் 8.30 மணிக்கு முன்பே மக்களை அனுமதித்து விட்டனர். விழா தொடங்கும் முன்னரே அரங்கத்தில் அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்டன. மேலும் சாரி சாரியாக உள்ளே ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். கிட்டத்தட்ட அரங்கின் பல்வேறு பாகங்களில் சுமார் 200-250 பேர் விழா நடைபெற்ற நேரம் முழுக்க நின்று கொண்டே விழா நிகழ்சிகளை கண்டு களித்தனர். அதில் கணிசமான அளவு பெண்களும் இருந்தனர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
விழா மேடையை அல்லது மைக்கை அதிக நேரம் [தொகுத்து வழங்கிய ஒய் ஜி எம்மை விட] பிடித்துக் கொண்டது வழக்கம் போல் வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசினார். பேச முடியாமல் இடையிடையே மூச்சு திணறல் இருந்த போதினும் அதை பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தார். ஒரு சில விஷயங்கள் நெகிழ்ச்சியாக இருந்த போதும் பெரும்பான்மையான விஷயங்கள் அவர் ஏற்கனவே தினத்தந்தியில் பாசமலர் பற்றி எழுதியவைதான். வசனங்களைப் பற்றி குறிப்பிடும் போது நான் வசனத்தில் compromise செய்துக் கொள்வதில்லை. அதுவும் சிவாஜிக்கு எழுதும் போது compounded மற்றும் double compounded sentences தான் எழுதுவேன் என்று குறிப்பிட்ட ஆரூர்தாஸ் அதற்கு உதாரணமாக தெய்வமகன் படத்தில் மகன் கண்ணன் தந்தை சங்கரை சந்திக்கும் காட்சியை குறிப்பிட்டார். வசனத்தை முழுக்க சொல்லி விட்டு அதை நடிகர் திலகம் எப்படி கையாண்டார் என்பதையும் சொன்னார்.
"குட்டி விகாரமாக பிறந்தது என்பதற்காக அதை ஒதுக்கி விடும் மிருகத்தையோ" இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "மலர் அழகாக இல்லை என்பதற்காக அதை உதிர்த்து விடும் கொடியைப் பற்றியோ நான் கதைகளில் கூட படித்ததில்லையே." இங்கே ஒரு தம் எடுத்துக்கிட்டேலே "நான் விகாரமாக பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை ஒதுக்கி விட்டிங்களே நீங்களும் விகாரமாதானே இருக்கீங்க உங்களை உங்க அப்பா ஒதுக்கிட்டாரா" [இன்னும் ஒரு வரி இருக்கிறது] அப்படின்னு நீளமா வண்டி ஓட்றே என்று கேட்டாராம் நடிகர் திலகம். இதை குறிப்பிட்டு ஆரூர்தாஸ் சொன்னார் படிப்பறிவு இல்லாதவர்தான், ஆனா ஒரு தமிழாசிரியரான நான் எங்கே இடைவெளி விடுகிறேன் எங்கே நிறுத்தாமல் செல்கிறேன் என்பதை வசனத்தை ஒரு முறை கேட்டே சொன்னவர் அவர். அண்ணனுக்கு தமிழின் ஆழமும் தெரியும் அகலமும் தெரியும் என்று குறிப்பிட்ட போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஆமோதித்தது.
தான் எழுதிய சிவாஜி வென்ற சினிமா சாம்ராஜ்ஜியம் புத்தகம் சிற் சில மாற்றங்களுடன் புதிய பதிப்பாக வெளிவந்திருப்பதை குறிப்பிட்டு அதன் ஒரு பிரதியை கையொப்பமிட்டு நடிகர் திலகத்தின் புதல்வியார் தேன்மொழி அவர்களுக்கு வழங்கினார்.
ட்ரைலர் வெளியீடும் நிகழ்வாக ஒரு ரீல் சுருள் அடங்கிய பெட்டியை சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு வெளியிட சகோதரிகள் கமலா செல்வராஜ், விஜய சாமுண்டீஸ்வரி, தேன்மொழி மற்றும் பீம்சிங் அவர்களின் புதல்வி [சுசீ?] ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். [எங்கிருந்தோ ஒரு ரசிக கண்மணியின் குரல்" பாச மலர் பெட்டி வாழ்க", அரங்கம் சிரித்து கைதட்டி மகிழ்ந்தது].
இனி ட்ரைலர் பற்றி. வெளிவந்த போது 35 mm-ல் வெளியானதை சினிமாஸ்கோப்-ற்கு நவீன தொழில் நுட்ப உதவியுடன் மாற்றியிருக்கிறார்கள். அந்த restoration வேலையை மிக நன்றாக செய்திருக்கிறார்கள். Black அண்ட் White படத்தின் depth மற்றும் quality சற்றும் குறையாமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகவே உழைத்த பிரசாத் லேப் technicians இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்தனர். அதே போன்று படத்தை master copy யிலிருந்து re-edit செய்த பீம்சிங்கின் மகனும் எடிட்டருமான B.லெனினையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
படத்தின் காட்சிகளை அவர்கள் கோர்த்திருக்கும் விதமே லெனினின் வித்தையை பறை சாற்றியது. உதாரணமாக சிவாஜி ஜெமினியிடம் அவளுக்காக நான் என்னவெல்லாம் கனவு கண்டிடிருக்கேன் தெரியுமா என்று சொல்ல என்னவெல்லாம் என்று ஜெமினி கேட்க உடனே மலர்களை போல் பாடல் காட்சியில் ஒரு சில வரிகள், நான் உன்னை லவ் பண்றேன் என்று ஜெமினி சொல்ல அப்படினா என்று சாவித்திரி கேட்க உடனே யார் யார் யார் அவள் யாரோ வரிகள்.நான் உன் மேலே நிறைய அன்பு வைச்சிருக்கேன் என்று சொல்லும் ஜெமினியிடம் எங்கண்ணனை விடவா என்று சாவித்திரி கேட்க இப்படி ஒரு தங்கைகாக ஒரு அண்ணன் என்ன வேண்டும்மானாலும் செய்யலாம் என்ற வசனம், சிவாஜியிடம் அவர் கல்யாணத்தைப் பற்றி சாவித்திரி பேச நமக்கு வரும் பட்டத்து ராணி யாரோ என்று அவர் கேட்க உடனே பாட்டொன்று கேட்டேன் M .N.ராஜம், இந்த கல்யாணம் நடக்காது என்று சிவாஜி சொல்ல இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும் என்று நம்பியாரிடம் சாவித்திரி சொல்லும் காட்சி இப்படி நிறைய சொல்லலாம்.
பாக்டரி காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். இருவருக்கும் இடையே நடக்கும் வாதப் பிரதிவாதக் காட்சியை நாம் முழுமையாக காணும்போது ரசித்திருப்போம். ஆனால் இந்த ட்ரைலரில் சடாரென்று நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழும் ராஜசேகரன் I am the sole proprietor of this concern. I can do whatever I want என்று முழங்கும்போது அரங்கம் ஒரு வினாடி ஸ்தம்பித்து பின்னர் அதிர்ந்தது.
துப்பாக்கியால் கண்ணீரை துடைக்கும் காட்சி, வாராய் என் தோழி பாடலில் வரும் அந்த வெட்கம் கலந்த ஒரு அண்ணனின் தலை குனியல், தன் முதலிரவன்று தங்கை அவள் கணவன் போட்டோவை திருப்பி வைத்து விட்டு வரும் அந்த சிங்கத்தின் காதல் பார்வை, நம்பியார் வீட்டு பார்ட்டியில் cool drink கிளாஸ்-ஐ எடுத்துக் கொண்டு thank you சொல்லும் அந்த sophistication, இவை எல்லாமே வினாடி நேரத்தில் மின்னி மறைந்தாலும் கண்ணிலேயே இன்னும் நிற்கிறது.
பிறகு மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. முதலில் எங்களுக்கும் காலம் வரும் பாடல். அதில் இறுதியில் "நெஞ்சில் ஒரு வஞ்சமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை வஞ்சம் இல்லா வாழ்வினிலே தோல்வியும் இல்லை" என்று டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட இங்கே நடிகர் திலகம் காலை அகற்றி கை இரண்டையும் விரித்து வாயசைக்க காது செவிடாகும் கைதட்டல். அடுத்த பாடல் பாட்டொன்று கேட்டேன். நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு கேட்க வேண்டுமா? அதிலும் அந்த பியானோவில் கைகள் விளையாட அவர் காட்டும் முகபாவங்கள், இங்கே ஆரவார அலப்பரைகள்.
இறுதியாக இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாடல் மலர்ந்தும் மலராத. இதை பற்றி நான் விவரிக்க தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்ததுதான் அத்தை மகளை மணம் கொண்டு வரி, நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகைப்படத்தின் முன்னே நின்று சாவித்திரி பாடும் மாமன் தங்கை மகளான வரி, தரையில் விரிக்கப்பட்டிருக்கும் பெரிய கார்பெட்டில் படுத்துக் கொண்டே கண்ணின் மனி போல வரியின் போது காட்டும் போஸ். ஒரே அமர்க்களம்தான்.
மனதுக்கு நிறைவான ஒரு காலைப்பொழுது. மற்ற சில மனதுக்கு நிறைவான விஷயங்கள், தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் மோகன் அவர்களுக்கு செய்யப்பட்ட மரியாதை, ட்ரைலரில் யாரையும் விட்டு விடாமல் [K.P.கொட்டராகராவின் கதை, ஆரூர்தாசின் வசனம், கண்ணதாசன் பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை] என்று டைட்டில் போட்டது.
வெளியே வந்தபோது எப்போது ஆகஸ்ட் 15 வரும் என்றுதான் அனைவரின் மனத்திலும் சிந்தனை ஓடியிருக்கும்.
அன்புடன்
murali srinivas sir,
Excellent review of PASAMALAR TRAILOR INAUGRAL in your own and typical style.
As you say lenin's editing is marvaleous. full credits to all technicians involved.
one more important point ARUN' s NANDRIYURAI he clearly focussed the lakhs and lakhs of fans MANIMANDAPAM REQUEST to the beloved CM in a apt manner.
EXPECTING AUGUST 15 very soon.
முரளி சார்,
எதிர்பார்த்து வந்தேன் .. நீங்கள் எப்போதும் ஏமாற்றியதில்லை . பாசமலர் முன்னோட்ட வெளியீடு நிகழ்வு பகிர்வுக்கு நன்றி.
முன்னோட்ட ஒளிக்காட்சி விரைவில் இணையத்தில் கிடைக்கும் என நம்புகிறேன்.