Originally Posted by
RavikiranSurya
எனது சகோதரரை இழந்தேன் !
இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்..தங்கை சண்டைகாட்சிகள் கொண்ட படம். அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் மிகசிறந்த ஒரு குணசித்திர நாயகனாக இருந்தார் . அந்த சமயத்தில் M G ராமசந்திரன் அவர்கள் தான் சண்டைகாட்சிகள் கொண்ட படங்களில் நடித்து வந்தார்.
சிவாஜிக்கு சண்டைகாட்சிகள் உள்ளதால் சிறிது சந்தேகமாக இருந்தது, இது தனக்குள்ள இமேஜிற்கு சரியாக வருமா என்று . மக்கள் இதை விரும்பாமல் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் பாதிக்கபடுவார்களே என்று கருதினார்.
ஆனால் நான் விடவில்லை அவரை, அவருக்கு புதிய ஒரு இமேஜ் இதன் மூலம் நிச்சயம் உருவாகும் என்று உறுதியளித்தேன் ...இருந்தாலும் பாதி மனதுடன் தான் நான் கூறியதை ஒத்துகொண்டார். அவருக்கு, மக்கள் நிச்சயம் தன்னை ஒரு சண்டை போட தெரிந்த நாயகனாக ஒத்துகொள்ள மாட்டார்கள் என்று பலமாக நம்பினார்.
அதிர்ஷ்டவசமாக தங்கை மிக பெரிய வெற்றி பெற்றது. தங்கை வரும் வரை MGR மட்டுமே சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல் பெற்றார். தங்கைக்கு பிறகு சிவாஜிக்கும் சண்டைகாட்சிகளுக்கு கைதட்டல்கள் பாராட்டுக்கள் கிடைத்தன. அதற்க்கு பிறகு அவரது படங்களில் ஒரு சண்டைகாட்சியாவது இருக்கும்.
தயாரிப்பாளர் பாலாஜியின் நினைவலைகள் தொடரும்...!