வாழ்நாளில் மறக்க இயலாத 'இரும்புத்திரை' புல்லாங்குழல் காவியக் காதல் காட்சி.
தலைவரும், வைஜயந்திமாலாவும் அந்த காட்டுப் பகுதியில் சந்தித்து உரையாடுமிடம். இருவரும் வழங்கும் அந்த அம்சமான டயலாக் டெலிவிரி. அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது. ஆடு மேய்க்கும் சிறுவனிடம் புல்லாங்குழல் வாங்கி வாசிக்கத் தெரியாதது போல வைஜயந்தியிடம் கலாய்த்து நடித்து பின் தன் திறமையை தலைவர் நிரூபிக்கும் காட்சியில் வைஜயந்திமாலா நன்கு ஈடு கொடுத்திருப்பார். கீழே வரும் உரையாடலைக் கவனியுங்கள்.
வைஜயந்தி: உண்மையிலேயே நீங்க யாரு?
நடிகர் திலகம்: இதென்ன கேள்வி? நான் சாதாரண ஒரு மனுஷன்.
வைஜயந்தி: ம்ஹூம்....(நீ சாதாரண மனிதன் இல்லை என்ற அர்த்தத்தில்)
நடிகர் திலகம்: அப்படின்னா நீ என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறே?
வைஜயந்தி: ஒரு 'தெய்வப்பிறவி' ன்னு நினைக்கிறேன்.
இது ஒன்று போதுமே...
https://www.youtube.com/watch?featur...&v=5_lghtjmgzU

