https://i1077.photobucket.com/albums...psqndzxbc1.jpg
Printable View
மக்கள் திலகம் பக்தர் திரு லோகநாதன் அவர்களுக்கு இன்று இனிய பிறந்தநாள் இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள் தெரிவிப்போம் நண்பர்களே...
வாள் எம் ஜி ஆர் சேர்ந்தால் அங்கு மின்னல்களின் அணிவகுப்பு
ஒவ்வொரு வீச்சும் ஒரு மின்னல் வேகம்
நீரும் நெருப்பும் கடைசி சண்டை காட்சி எம் ஜி ஆரின் ஸ்டைல் அத்தனையும் கொண்ட வாள்வீச்சு
முதலில் கரிகாலனாக முரட்டு தனமான வாள்வீச்சு இடிபோல் இறங்கிய வாள் எதிரின் திகைப்பை அசோகன் நன்றாக பிரதிபலிப்பார் பின் மணிவண்ணனாக எம் ஜி ஆர் இடது கையால் வாள் வலது கை வேகத்தில் சுழற்றுவார் என்னா ஒரு லாகவம் நேரிடையாக இதை பார்த்த இந்தி பிரபல நடிகர் தர்மேந்திரா பிரமித்து உடனே எம் ஜி ஆர் பிரமிப்போடு பாராட்டினார் பின் இரு கரத்தால் வாள் வீசுவார் எம் ஜி ஆர் என்ன ஒரு அழகு இடது கையால் வீசி கொண்டே இடையிடையே வலது கையால் இடிபோல் தாக்குவார் என்ன ஒரு சக்தி அதில் வாள் கொண்டு எதிரியை பந்தாடுவார் அங்கும் இங்கும் எவராலும் செய்ய முடியாத காட்சி இது முடிவில் இடது வலது என எதிரியின் உடலில் வாளால் கோலம் இடும் வேகம் ஸ்டைல் எழுதும் போதே புல்லிரிக்கும் காட்சி
வில்லுக்கு விஜயன்
வாளுக்கு எம் ஜி ஆர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்........ Thanks fb.,
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே புதிய சுரங்கப் பாதை திறக்கப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு சுரங்கப் பாதையை திறப்பார் என அறிவிக்கப் பட்டிருந்தது. குறிப்பிட்டபடி விழாவுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். திறப்பு விழா நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உதவியாளர்களிடம் காதில் கிசுகிசுத்தார்.
அவர்கள் சென்று ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தவரை அழைத்து வந்து எம்.ஜி.ஆரிடம் நிறுத்தினர். அவர் பெயர் ஏழுமலை. எம்.ஜி.ஆரை வணங்கிவிட்டு ஏதும் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தவரின் கையில் கத்தரிக் கோலைக் கொடுத்து, சுரங்க நடைபாதை திறப்புவிழாவுக்கு அடையாளமாக ரிப்பனை வெட்டச் சொன்னார் எம்.ஜி.ஆர்.!
கண்களில் நீர் மல்க ரிப்பனை வெட்டி திறந்து வைத்த ஏழுமலைதான், அந்த சுரங்கப் பாதையை கட்டிய மேஸ்திரி!
எம்.ஜி.ஆரைப் பற்றி கவிஞர் வாலி ஒருமுறை இப்படி வாழ்த்திப் பாடினார். ‘‘மனிதர்களில் எத்தனையோ நடிகர்கள் உண்டு. நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதன் நீதான்!’’........ Thanks wa.,
அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கவிஞர் கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
- தி இந்து . ....... Thanks Friends....
சென்னை மாநகரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் வெளியான பட்டியல் -2018ம் ஆண்டு
----------------------------------------------------------------------------------------------------------------------------
12/01/2018 - பாலாஜி நாளை நமதே - தினசரி 4 காட்சிகள்
12/01/2018 - அகஸ்தியா - அடிமைப்பெண் -தினசரி 3காட்சிகள்
12/01/2018 -ஸ்ரீநிவாஸா - நீதிக்கு தலை வணங்கு - பகல் காட்சி மட்டும்
02/02/2018 - எஸ்கேப் -தினசரி ஒரு காட்சி ) டிஜிட்டல்
அபிராமி -தினசரி ஒரு காட்சி ) எங்க வீட்டுப்பிள்ளை
ஏ. ஜி எஸ்.ராயல் -தினசரி ஒரு காட்சி )
தேவிபாலா -தினசரி 3 காட்சிகள் )
ஸ்ரீநிவாஸா -தினசரி 3 காட்சிகள் ) 2 வாரம் ஓடியது
வேளச்சேரி -ஜாஸ் -தினசரி ஒரு காட்சி )
02/02/2018 -சரவணா -நீரும் நெருப்பும் - தினசரி 4 காட்சிகள்
09/02/2018 -பாலாஜி - தாயை காத்த தனயன் -தினசரி 3 காட்சிகள்
16/02/2018 -மூலக்கடை ஐயப்பா -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
16/02/2018 - அகஸ்தியா - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 2 காட்சிகள்
16/02/2018 -மகாலட்சுமி - ஒளி விளக்கு - தினசரி 3 காட்சிகள்
23/02/2018 -ஸ்ரீநிவாஸா - குடியிருந்த கோயில் - தினசரி 3 காட்சிகள்
23/02/2018 - மகாலட்சுமி -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்
02/03/2018 - சரவணா -குடியிருந்த கோயில் -தினசரி 4 காட்சிகள்
02/03/2018 -பாரத் -அடிமைப்பெண் -தினசரி 2 காட்சிகள்
02/03/2018 - பாடி லட்சுமி பாலா -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
09/03/2018 -பாட்சா -குமரிக்கோட்டம் -தினசரி 3 காட்சிகள்
09/03/2018 -ஆல்பட் & (2 வாரம் ஓடியது )
நங்கநல்லூர் வேலன் --எங்க வீட்டு பிள்ளை -தினசரி 2காட்சிகள்
16/03/2018 -ஏ.ஜி.எஸ்.ராயல் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி ஒருகாட்சி
16/03/2018 -கிருஷ்ணவேணி -நல்லநேரம் - தினசரி 2 காட்சிகள்
16/03/2018 -மகாலட்சுமி - காவல்காரன் - தினசரி 3காட்சிகள்
23/03/2018 -ஆல்பட் ) நாடோடி மன்னன் -தினசரி 2 காட்சிகள் -4 வாரம்
5 வது வாரம் மேட்னி காட்சி மட்டும்
பாரத் )தினசரி 2 காட்சிகள் ஒரு வாரம்
ஏ.ஜி.எஸ்.ராயல் )தினசரி ஒரு காட்சி
23/03/2018 -சித்தூர் ஆனந்தா -நாடோடிமன்னன் -தினசரி 3 காட்சிகள்
30/03/2018 -சைதை ராஜ் ,ரெட்ஹில்ஸ் அம்பிகா,மணலி-மீனாட்சி ,
திருவொற்றியூர் ஓடியன் மணி , எம்.எம்.தியேட்டர்
நாடோடிமன்னன் -எங்கும் தினசரி 4 காட்சிகள்
30/03/2018 பாட்சா - சங்கே முழங்கு -தினசரி 3 காட்சிகள்
30/03/2018 -நங்கநல்லூர் வெற்றிவேல் -நினைத்ததை முடிப்பவன்
தினசரி 3 காட்சிகள்
06/04/2018 -மகாலட்சுமி - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3 காட்சிகள்
06/04/2018 -கிருஷ்ணவேணி -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 2 காட்சிகள்
06/04/18 -ஏ.வி.எம்.ராஜேஸ்வரி -நினைத்ததை முடிப்பவன் -
தினசரி மாலை காட்சி மட்டும்
06/04/2018 -மூலக்கடை சண்முகா , ஆரணி -எம்.சி. ,ஆற்காடு-லட்சுமி,
பாக்கம் சண்முகா -நாடோடிமன்னன்
13/04/2018 -அகஸ்தியா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 2 காட்சிகள்
13/04/2018 -ஏ.வி.எம்.ராஜேஸ்வரி -ரிக்ஷாக்காரன் -தினசரி 2 காட்சிகள்
13/04/2018-பிருந்தா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
13/04/2018-ருக்மணி (கோபிகிருஷ்ணா காம்ப்ளெக்ஸ்)
ரிக் ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்
13/04/2018 -சரவணா -பணம் படைத்தவன் -தினசரி 4 காட்சிகள்
13/04/2018 -ரெட் ஹில்ஸ் லட்சுமி -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4காட்சிகள்
20/04/2018 -மகாலட்சுமி -அடிமைப்பெண் -தினசரி 3 காட்சிகள் -2 வாரம் ஓடியது
20/04/2018 -கிருஷ்ணவேணி -ஒளி விளக்கு -தினசரி 2 காட்சிகள்
27/04/2018-ஸ்ரீநிவாஸா - அடிமைப்பெண் -தினசரி 3 காட்சிகள்
11/05/2018 -ஸ்ரீநிவாஸா -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 3காட்சிகள்
18/05/2018-சரவணா -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்
01/06/2018-சரவணா - முகராசி - தினசரி 4 காட்சிகள்
22/06/2018-சரவணா -பல்லாண்டு வாழ்க -தினசரி 4 காட்சிகள்
22/06/2018-மகாலட்சுமி -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 2 காட்சிகள்
03/07/2018-பாட்சா -நீ.தலைவணங்கு -தினசரி 3காட்சிகள் -4நாட்கள்மட்டும்
13/07/2018-சரவணா -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
20/07/2018-பாட்சா - நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்
20/07/2018 -சரவணா -ராமன் தேடிய சீதை - தினசரி 3 காட்சிகள்
20/07/2018-ஸ்ரீநிவாஸா - ரிக் ஷாக்காரன் -தினசரி 3காட்சிகள்
20/07/2018-ரெட்ஹில்ஸ் அம்பிகா -எங்க வீட்டுப்பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
03/08/2018-சரவணா -தாய்க்கு தலைமகன் - தினசரி 4 காட்சிகள்
17/08/2018 -பாலாஜி -பணக்கார குடும்பம் -தினசரி 4 காட்சிகள்
24/08/2018 -சரவணா -அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
24/08/2018-ஸ்ரீநிவாஸா -தர்மம்தலைகாக்கும் -தினசரி 3காட்சிகள்
31/08/2018-மூலக்கடை ஐயப்பா ,
ரெட்ஹில்ஸ் அம்பிகா -தர்மம் தலைகாக்கும் =தினசரி 4காட்சிகள்
14/09/2018 -பாலாஜி -பெரிய இடத்து பெண் -தினசரி 4காட்சிகள்
28/09/2018-சரவணா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்
05/10/2018 -சரவணா - காவல்காரன் -தினசரி 4 காட்சிகள்
12/10/2018-பாலாஜி -குலேபகாவலி -தினசரி 4 காட்சிகள்
26/10/2018 - பாலாஜி - புதுமைப்பித்தன் -தினசரி 4 காட்சிகள்
26/10/2018 -ஸ்ரீநிவாஸா -வேட்டைக்காரன் -தினசரி 2 காட்சிகள்
02/11/2018-ஸ்ரீநிவாஸா -பணம் படைத்தவன் -தினசரி 2 காட்சிகள்
23/11/2018-பாலாஜி -உழைக்கும் கரங்கள் - தினசரி 4காட்சிகள்
30/11/2018-பாலாஜி -வேட்டைக்காரன் -தினசரி 4 காட்சிகள்
30/11/2018 -ஸ்ரீநிவாஸா -ராமன் தேடிய சீதை -தினசரி 3காட்சிகள்
07/12/2018 -பாலாஜி -உரிமைக்குரல் -தினசரி 4 காட்சிகள்
14/12/2018-ஸ்ரீநிவாஸா -கலங்கரை விளக்கம் - தினசரி 3 காட்சிகள்
21/12/2018-பாலாஜி - ஒளிவிளக்கு - தினசரி 4 காட்சிகள்
குறிப்பு : வேறு எந்த நடிகரின் திரைப்படமும் இது போன்று பரவலாக பல அரங்குகளில் கடந்த ஆண்டு (2018) திரையிடப்படவில்லை