Quote:
கார்த்திகைப் பெண்கள்
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை பெண்கள் தொடர் சென்டிமென்ட், மர்மம், நகைச்சுவை என எல்லாத் தளங்களிலும் சரிவிகிதக் கலவையாய் அமைந்து விறுவிறுப்பின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. சொந்த தகப்பன் மற்றும் சகோதரனின் ஜாதிவெறிக்கு தன் கணவனை பறிகொடுத்த ஆர்த்திக்கு மீண்டும் சாருவே அடைக்கலம் தருகிறாள். மூர்த்தி பெரியவருக்கு ஆதரவாக மாறிவிடுகிறான். சாருவும் ஆர்த்தியும் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்வதை தடுப்பதற்காக அவர்களை கொல்ல பெரியவர் தனது ஆட்களை ஏவி விடுகிறார். சாருவும் ஆர்த்தியும் உயிர் பிழைப்பார்களா?
அம்மாவின் வற்புறுத்தலுக்காக சாருவின் ஹாஸ்டலை விட்டு வெளியேறிய செண்பகா, தன் மாமா வீட்டிலும் இருக்க முடியாமல் புது ஹாஸ்டலில் சேருகிறாள். அங்கு அவள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஒரு புதிய நபரை சந்திக்கிறாள். அது யார்? செண்பகாவும் பிரேமும் பழகுவதைக் கண்டு பொறாமைப்படும் பியூலா, அடுத்து என்ன செய்யப் போகிறாள்? பியூலாவை போனில் தொந்தரவு செய்யும் மர்ம மனிதன் யார்? கேள்விகள் அத்தனைக்கும் கார்த்திகைப் பெண்கள் தொடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதில் கிடைக்கும் என்கிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் எம்.திருமுருகன். தொடருக்கான கதையை வடிவமைத்ததோடு, தொடரின்தயாரிப்பும் இவரே. திரைக்கதை வசனம்: பாஸ்கர் சக்தி. ஒளிப்பதிவு: சரத்சந்தர். படத்தொகுப்பு: பிரேம். இசை:சஞ்சீவ் ரத்தன். இயக்கம்: கவிதாபாரதி. தொடரின் கதை மாந்தர்களாக பானுச்சந்தர், ‘கல்கி’ சுருதி, ராஜேந்திரன், ஷீபா, செல்வராஜ், ஆனந்தி, நிமா, சுவேதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.