புதிய படங்களுக்கான பாடல்களில் ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிண்ணணி பாடகர்களின் திறமையின்மையைப் பற்றி குறை சொல்லி, எஸ்.பி.பி மலேஷியா வாசுதேவன் போன்ற தேர்ந்த பாடகர்களை போல இருப்பதில்லை என இங்கே பலர் தங்களது கருத்துக்களை வைக்கும்போது, எனக்கு அதைவிட முக்கியமாக பாடல் வரிகளின் மீது கவனம் செல்கிறது.
உதாரணத்திற்கு அழகர் மலையிலிருந்து ஒரு அருமையான காதல் பாடல்.
"கருகுமணி கருகுமணி கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி எனக்கென்னு பாடுதடி
கொடுத்துவச்ச ஆள் நானு அது உனக்குத் தெரியாது
வயதில் வரும் கோளாறு வந்திருச்சி தகராரு
இது யாருக்கான திருநாளு திருநாளு!"
பாடலின் ராக அமைப்பு கேட்கும் முதல் முறையிலேயே மனதிற்கு பிடித்துப்போய் வருகிறது. ஆனால் பாடல்வரிகள் இதை எழுதியர் நா.முத்துக்குமார் தானா என சந்தேகம் வரும்படியாக இருக்கும்விதத்தில் அமைகிறது. அதிலும் பல்லவி வரிகள் தரம் எனப்பார்க்கும் போது கண்ணுக்கெட்டும் தூரத்தில் கூட இல்லை. ஒரு நல்ல ட்யூனை ஏன் இப்படி சீரழிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. பல்லவியின் வரிகள் பளிச்சென்று, பாடலைப் பற்றிய ஒரு பிரமிப்பைக் கொண்டுவர வேண்டாமா? பாடல் வரிகளின் தரம் எப்படி இருந்தால் என்ன, சந்தத்திற்கு ஏற்றவாறு அமைந்தவிட்டதா அது போதும் என இதையெல்லாம் அனுமதிக்கும் ராஜாதான் இதுபோன்ற செயல்களுக்கு பொறுப்பாகிறார் என கணிக்கிறேன். இன்னும் எத்தனை முறைத்தான் ராஜா தனது பாடல் இசைக்கும், பாடல்வரிகளுக்கும் இடையே ஒரு இமாலய அளவு சுவரை எழுப்பிக்கொள்ளப் போகிறார் எனத் தெரியவில்லை.
இந்தக் கூத்தையெல்லாம் பார்க்கும் போது "நிழலின் பெருமை வெயிலில் நின்றால் தான் புரியும்" என்பதுபோல வைரமுத்து இல்லாத வெற்றிடத்தை நன்றாகவே உணரமுடிகிறது.