Very nice
Printable View
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள்
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ் நாட்டில் குறிப்பாக நெல்லை - நாகர்கோயில் மாவட்டங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது .மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் நாகர்கோயில் நகரை சேர்ந்தவருமான திரு நாகர்கோயில் k.s .மணி அவர்கள் மூலமாக பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய மக்கள் திலகத்தின் சாதனை பட்டியல் .
நன்றி திரு மணி சார் . செல்வகுமார் சார் .
http://i46.tinypic.com/25zkzet.jpg http://i48.tinypic.com/30rtmwg.jpg
.
1. முதன் முதலில் நாகர்கோயில் நகரில், 1969ம் ஆண்டிலேயே, ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்தது இதய தெய்வம் எம். ஜி. ஆர்.
அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். முத்து திரை அரங்கில் வெளியானது.
2. அதே போல் முதன் முதலில் நாகர்கோயில் நகரில் ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் பொன் மனச்செம்மலின்
"உலகம் சுற்றும் வாலிபன்" படமே. வெளியான ஆண்டு 1973. திரை அரங்கம் : முத்து.
http://i47.tinypic.com/2z86clt.jpg
3. மறு வெளியீடு செய்யப்பட பழைய படங்களில் முதன் முறையாக ருபாய் ஒரு லட்சம் வசூல் சாதனை புரிந்ததும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். அவர்களின் "அடிமைப்பெண்" படம் தான். இம்முறை கார்த்திகை திரை அரங்கில் வெளியானது. மறு வெளியீடு
செய்யப்பட்ட வருடம் 1987.
4. நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் இரண்டு லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1969ல் சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட "அடிமைப்பெண் ' திரைப்படம் தான்.
5. அதே நெல்லை மாநகரில் முதன் முதலாக ருபாய் மூன்று லட்சம் வசூல் சாதனை படைத்ததும் 1973ல் அதே சென்ட்ரல் அரங்கில்
வெளிடப்பட்ட " உலகம் சுற்றும் வாலிபன் ' திரைப்படம்.
6. நெல்லை மாநகரில் முதன் முதலாக வெள்ளி விழா கண்டதும் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். நடிப்பில் 1974ம் வருடம் வெளியான
"உரிமைக்குரல்" திரைப்படம்.
7. நெல்லை மாநகரில் 1977ம் ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படங்களாக, நமது கலியுக கர்ணன் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பில் வெளியான "மீனவ நண்பன்" மற்றும் "இன்று போல் என்றும் வாழ்க" திரைப்படங்கள்.
8. நெல்லையில் 1975ல் அதிக வசூல் சாதனை படைத்தது சென்ட்ரல் அரங்கில் வெளியிடப்பட்ட கலையுலக
காவலனின் "இதயக்கனி" திரைப்படமும், பூர்ணகலா அரங்கில் வெளியிடப்பட்ட "பல்லாண்டு வாழ்க" படமும் தான்.
9. நெல்லையில் 1976ல் "நீதிக்கு தலை வணங்கு" 11 வாரங்களும், "உழைக்கும் கரங்கள்" 9 வாரங்களும், "ஊருக்கு உழைப்பவன்"
50 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது.
நாகர்கோயில் நகரிலும் 1975ம் ஆண்டு அதிக வசூல் சாதனை புரிந்தது நமது ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்.
நடிப்பில் வெளியான "இதயக்கனி" மற்றும் "பல்லாண்டு வாழ்க" படங்களே.
http://i46.tinypic.com/2dkgx6s.jpg
கடலூர் மாநகரில் 100 நாட்களை கண்ட முதல் படம் "மதுரை வீரன்". அதனை தொடர்ந்து "எங்க வீட்டு பிள்ளை" மூலம் மீண்டும் 100
நாட்கள் சாதனை புரிந்தார் மனிதப் புனிதர் எம்.ஜி. ஆர். அவர்கள்.
ஈரோடு நகரில் முதன் முதலில் 2 லட்சம், 4 லட்சம் என வசூல் சாதனை படைத்தது, முறையே - எங்கள் இதய வேந்தன் எம்.ஜி. ஆர்.
அவர்கள் நடிப்பில் 1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" மற்றும் 1974ல் வெளியான "உரிமைக்குரல்" ஆகிய படங்களே.
சிதம்பரம், விழுப்புரம், காட்டு மன்னார் கோயில், பாண்டி, தூத்துக்குடி, திண்டுக்கல், பழனி, விருதுநகர், காரைக்குடி, தேனி, கம்பம், தஞ்சை,
குடந்தை, மாயவரம் (மயிலாடு துறை), கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோபி, குமாரப்பாளையம், ஆத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆம்பூர், ஆரணி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற துணை நகரங்களிலும் சாதனை
படைத்த திரைப் படங்கள் நமது புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த படங்களே.
மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். நடித்த ஒரு திரைப்பட வசூலை முறியடிக்க அவரது மற்றோரூ திரைப்படம் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்
என்பது மேற் கூறிய சாதனைகளின் புள்ளி விவரங்களினால் புலனாகிறது.
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் பொஆற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எந்கள் குலம் என்போம்
7,12,2012 முதல் சென்னை - மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகம் அவர்களின் ரகசிய போலீஸ் 115 நடைபெறுகிறது
http://i45.tinypic.com/2ijry1f.jpg.
courtesy - tamil torrent .
MAKKAL THILAGAM MGR IN ORU THAI MAKKAL - 9TH DEC 1971.
41ST ANNIVERSARY . 9TH DEC 2012.
ஒரு தாய் மக்கள்
http://i49.tinypic.com/343hw9d.jpg
நடிக+நடிகைகள்:- இதயதெய்வம் புரட்சித்தலைவர் மக்கள்திலகம் எம். ஜி.ஆர், கலைச்செல்வி ஜெயலலிதா, எஸ்.ஏ.அசோகன், சோ, வி.கே.ராமசாமி, திருச்சி செளந்தர்ராஜன், உதய சந்திரிகா, எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, லக்ஷ்மிபிரபா, ஜஸ்டின், கோகிலா, குமுதினி, திருப்பதிசாமி , முத்துராமன் , எம்.என்.நம்பியார், புத்தூர் நடராஜன் மற்றும் பலர்.
பாடல்கள்:- கவியரசு கண்ணதாசன் + வாலி
இசை:-மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்
தயாரிப்பு:-ரி.ஏ.துரைராஜ் அவர்கள்
இயக்கம்:-ப.நீலகண்டன் அவர்கள்
மனதைக் கொள்ளை கொள்ளும் மதுர கானங்கள்
1.ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் உன்
அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ! ஓஹோ! ஹோ! அது நானல்ல! அது நானல்ல!...(ஆயிரம்) (டி.எம்.செளந்தர்ராஜன்)
2. ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என்
அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ! ஓஹோ! ஹோ! அது நீயன்றோ! அது நீயன்!றோ...(ஆயிரம்) (பி.சுசிலா)
3. பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ?
பொன் மயில் அவள் பேரோ?
4. கண்ணன் எந்தன் காதலன்
கண்ணிலாடும் மாயவன்
என்னைச் சேர்ந்தவன்-கனவில்
என்னைச் சேர்ந்தவன்...(கண்ணன்)
5. இங்கு நல்லா இருக்கணும் எல்லாரும்-நலம்
எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாகச் சேரணும்-இந்த
மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்...(இங்கு நல்லா)
MAKKAL THILAGAM MGR HARDCORE FAN AND CHENNAI IRAIVAN MGR BHAKTHARGAL KUZHU MR . BABU"S DAUGHTER WEDDING INVITATION .
http://i45.tinypic.com/264omf7.jpg
இன்று போல என்றும் வாழ்க
எங்கள் வீட்டு பொன் மகளே
வாழை கன்று போல தலைவன் பக்கம் நின்றிருக்கும் குலமகளே
திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
என் இரு விழி போலே இரு வரும் இன்று
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக
மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்
ஏந்தி நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட வாழ்ந்திடு மகளே நலமாக
ஆனந்தத்தாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி )
http://i46.tinypic.com/2r53i9c.jpg
எங்கள் வானத்து வெண்ணிலவாம்
இவள் இன்னொரு வீட்டுக்கு விளக்கானால்
எங்கள் குலம் வளர் கண்மணியாம் ,
இவள் இன்னொரு குடும்பத்தின் கண் ஆனாள்
தாய் வழி வந்த நாணமும் மானமும்
தன் வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்
ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு
வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதி என்று இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
குரல் வழி காணும்
ஆறாம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக
தென்னவர் போற்றும் பண்புகள்
யாவும் கண் என போற்றி வாழ்ந்திடுக
(திருநிறைசெல்வி மங்கையர்க்கரசி)
KOVAI - OLD THEATRES - MEMORY RE CALL - THE HINDU
டைமண்ட் டாக்கீஸ்...... என்று அழைக்கப் பட்ட முருகன் தியேட்டர் ., ஐந்து முறைக்கு மேல் நான் கண்டு களித்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ”ஒளி விளக்கு” திரையிடப் பட்டது....தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா என்ற பாடலின் நடுவே ஒரே காட்சி அமைப்பில் ஐந்து வெவ்வேறு சிகை., மற்றும் உடை அலங்காரத்தில் வந்து அசத்துவார்.
இதே முருகன் தியேட்டரில்., எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடித்த
“பெற்றால் தான் பிள்ளையா” திரைப்படத்தில் பறக்கும் காரில் ஏறி சென்னை நகரைச் சுற்றி சக்கரக் கட்டி ராஜாத்தி என்று டூயட் பாடுவார்
தெலுங்கு C.I.D., மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களை காலைக் காட்சியாக ஓட்டிப் புகழ் பெற்ற ”சுவாமி தியேட்டர்” . உலகத்தையே சுற்றி வந்த வாலிபனைத் திரையிட்ட ”ராஜா தியேட்டரும்” எங்கள் நினைவுகளில் வந்து சென்றது.... “ நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படத்தில் வில்லத் தன ஒப்பனையில் பயமுறுத்திய எம்.என்.நம்பியார் அடுத்ததாக எங்களை அதிரடித்து பயமுறுத்தியது ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தில் ஜப்பானிய புத்த விகாரத்தில் தோன்றும் போதுதான் .
”சென்ட்ரல்” திரையரங்கில் திரையிடப் பட்ட பற்பல பிரமிக்கத் தக்க Where Eagles Dare., Guns of Navarone., Mackenna's Gold., Good Bad Ugly., போன்ற ஆங்கில படங்களின் நடுவே நான் ஆனையிட்டால் அது நடந்து விட்டால் என்று பாட்டு பாடி., அவ்வளவு பெரிய உடம்பை ”ட்விஸ்ட் டான்ஸ்”., ஆடி நடித்த எம்.ஜி.ஆர் படமான ”எங்க வீட்டுப் பிள்ளை”யில் அந்த பாட்டின் நடுவே பிரமாண்ட படிக்கட்டுகளின் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட கோணத்தில் closeup shot. எம்.ஜி.ஆரின் தனித்துவம் தெரியும் சுவாரசியமான எங்கள் பேச்சில் இதையும் பகிர்ந்து கொண்டோம்.
1979 ல் கவுளிபிரெளன் சாலையில் நகரத்தார் சங்கத்தின் முதல் மாடியில் சத்தியஜித்ரேவின் ”ஜல்சாகர்” திரைப்படம் ஒரு மார்கழிமாத குளிர்க் காலத்தில் 16 எம் எம் திரையில் திரையிடப் பட்டது .
வாழ்ந்து.... தாழ்ந்து போன ஜமீந்தார் வாயில் திண்ணையில் கோலோச்ச எவரும் இன்றி தானம் செய்ய எதுவும் இல்லாமல் வெற்றுப் பார்வையில் அமர்ந்திருக்க.., தூரத்து கானலில் பட்டத்து யானை அசைந்தாடி வருவதை நினைவிலும்., நினைவில் இல்லாமலும் உணர்ந்தவாரு ஒரு காட்சி அமைப்பு இன்றும் என் நினைவில் நின்றதை திரு.அமரநாதனிடம் பகிர்ந்துகொண்டேன்
புன்னகைத்தவாரே கூறினார் அன்று அந்த திரைப்படத்தை திரையிட்டதே எங்கள் ”தர்சனா” திரைப்பட சங்கம்தான்...
காலை நேரத்து கடமைகள் எங்களை அழைத்தது....
சிரித்தவாறே சந்தோஷத்துடன் கைகுலுக்கி விடை பெற்றோம்......
நாங்கள் பருகிய அன்னபூர்ணாவின் காபியின் சுவை நுனிநாக்கு வரை நின்றிருந்தது.... எங்கள் நினைவுகள் போல