நெல்லையில் முன்பதிவு (advance booking ) ஆரம்பிக்கப்பட்ட முதல் படம் வெள்ளை ரோஜா திரை அரங்கு - பூர்ணகலா
Printable View
நெல்லையில் முன்பதிவு (advance booking ) ஆரம்பிக்கப்பட்ட முதல் படம் வெள்ளை ரோஜா திரை அரங்கு - பூர்ணகலா
இன்று பிறந்தநாள் காணும் சங்கரநாராயணன் அவர்களுக்கு (சங்கரா70) இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
நெல்லை சண்முகா அவர்களே வருக. வாழ்த்துக்கள்.
உடல் நல குறைவால் எழுத முடியவில்லை கூடவே வேலை பளுவும்.
ஆனால் கடந்த புதன் அன்று வேலைக்கு செல்லும் பொழுது என்னை போல் ஒருவன் படத்தின் போஸ்டர் யை பார்க்க முடிந்தது . இந்த படம் ஏற்கனவே delite தியேட்டர் ல் ஒரு வருடம் முன்பு வந்தது மீண்டும் ஒரு 5 மாதம் முன்பு அதே திரைஅரங்கில் வந்து வெற்றி வாகை சூடியது .
இந்த படம் CD இருக்கிறது ஆனால் பிரிண்ட் சுமார் அதனால் இந்த படத்தை முழுவதும் என்ஜாய் பண்ண முடியவில்லை
இந்த படம் ஒரு சராசரி வெற்றி படம் என்று நான் சொன்ன உடன் அதை மறுத்து நம் நண்பர்கள் வாதம் செய்தது என்னக்குள் இந்த படத்தை மீண்டும் பார்க்க தூண்டியது அந்த நேரத்தில் தான் இப்பிடி ஒரு அறிவிப்பு
சென்ற வாரம் சிவாஜி வாரம் முரசு தொலைக்காட்சியில் ஞான ஒளி, படித்தால் மட்டும் போதுமா படங்களை பார்க்க வாய்ப்பு கிட்டியது
வழக்கம் போலே சண்டே 6.30 காட்சிக்கு செல்ல முடிவு எடுத்தேன்
அதுக்கு முன்னாடி 2.00 மணிக்கு polimer டிவி ல் சந்திப்பு
அன்று என் தாயர்க்கும் , என்னகும் ஜுரம் . அதனால் என் அம்மா வர முடியாது என்று சொல்லிட்டாங்க . நான் மட்டும் சந்திப்பு முடிந்த உடன் என் நண்பர்கள் சிலரை புது படத்துக்கு என்று சொல்லி ராயல்
தியேட்டர்க்கு அழைத்து சென்று விட்டேன் .
அங்கே சென்ற உடன் வாகுவாதம் அவர்களுக்கு ஒரே கோபம் . நான் அவர்களை emotional ப்லக்க்மாயில் செய்து அவர்களை உள்ளே இழுத்து சென்றேன் .
கொஞ்சம் தாமதமாக சென்றதால் ராஜா படம் போன்ற கொண்டாட்டங்களை பார்க்க முடியவில்லை எப்படியோ உள்ளே சென்று விட்டோம் .
அந்த தியேட்டர்க்கு செல்லும் பொது எல்லாம் அங்கே இருக்கும் யானை சிலை யை பார்த்து விட்டு செல்லுவது வழக்கம் , (சிவாஜி சாரை பார்ப்பது போலே கற்பனை செய்து கொண்டு)
படம் கிட்ட தட்ட housefull , ஒரு சில இருக்கைகள் மட்டுமே காலி
படம் ஆரம்பித்தது ஒரே ஆரவாரம் . அதுவும் titles போடும் பொது இரண்டு சிவாஜியை காட்டும் frame ல் உச்சம் .
இந்த படத்தின் titles ல் வரும் background score சொர்க்கம் படத்தில் வருவது என்று தெரிந்த உடன் ஒரு சின்ன ஏமாற்றம் இருந்தாலும் அதே டீம் தானே என்று பார்க்க ஆரம்பித்தேன்
முதல் காட்சியில் சிவாஜி intro காட்சியில் இமேஜ் என்றல் கிலோ என்ன விலை என்று கேட்பது போலே இருந்தது . அந்த மாதிரி ஒரு காட்சியை ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தில் பார்க்க முடிந்தது . அந்த night Gown ல் அவர் ஒரு பணக்காரன் என்பதை காட்டி விடும்
இந்த படத்தில் உடை அலங்காரம் டாப் கிளாஸ் வித விதமான கோட் சூட் , formals உடையிலும் ஒரு நேர்த்தி . குறிப்பாக சுந்தரமூர்த்தி அறிமுகம் ஆகும் காட்சி grey pant & shirt இடுப்பில் ஒரு black belt கம்பீரமாக அதே சமயம் சாமானியனும் அந்த உடையை அணியும் விதமாக இருக்கும்
அந்த காட்சியில் கை தட்டால் அடங்க கொஞ்ச நேரம் பிடித்தது தொடர்ந்து பாடல் வேறு .
அதே சிவாஜி தன் மகள் இடம் விளையாடும் போதும் , poem சொல்லும் விதம் applause அள்ளியது
இந்த காட்சியை பார்க்கும் எவரும் NTக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொன்னால் நம்புவது சிரமம்
மிச்ச இரட்டை வேடம் படங்களை போலே இந்த இரட்டை பாத்திங்கள் கிடையாது . இவர்கள் உறவு கிடையாது அதுவே இந்த படத்தில் ஒரு புதுமை
சுந்தரமூர்த்தி சிவாஜி ராஜசேகர் சிவாஜி வீட்டில் படும் இன்ப அவஸ்தைகள் நல்ல தமாஷ்
அதுவே அவர் வெளியே போகும் பொது உருக்கம் கலந்து அவர் பேசும் வசனம் typical சிவாஜி ஸ்டைல்
இடைவேளை ல் என் நண்பர்கள் நம்மவரை பத்தி ஆர்வமாக விசாரிக்க ஆரம்பித்தது தான் highlight . நான் என்ன ராகவேந்திரன், வாசு , கார்த்திக் , கோபால் , சுப்பு , sowri , KC சேகர் , முரளி மற்றும் சில சார்களை போலே NT அவர்களை பற்றி முழுவதும் தெரிந்தவன் அல்ல அதனால் சில வற்றை சொன்னேன்
படம் மீண்டும் ஆரம்பம் உஷா நந்தினி பாத்திரம் செய்யும் குழபத்தினால் திருமணம் நின்று விடுகிறது
NT பிரச்சனைகளை சீர் செய்ய முடிவு செய்கிறார் .
ராஜா சித்த பிரம்மை பிடித்தவர் பாத்திரத்தில் கலக்கி இருப்பார் . சிவாஜி மாதிரி ஒரு நடிகர் அதாவது 64 முக பாவங்களை காட்டி நடிக்கிறவர் ஒரு வித reaction யை காட்டமல் நடித்து இருப்பது ஆச்சர்யம் தான்
தங்கங்களே பாட்டு once more கேட்கப்பட்டது
உஷா நந்தினி novel படிக்கும் பெண்ணாக பேசும் காட்சியில் தியேட்டர் கலகலத்தது .
கிளைமாக்ஸ் சண்டை காட்சி யில் ஒரே whistle தான்
பிரிண்ட் கூட ஓகே
இந்த படத்தின் + வேகம் , தனி காமெடி track இல்லாதது
ஆனால் BG ஸ்கோர் ஹிந்தி படம் பார்ப்பது போலே இருந்தது
கோபால் சார் சொன்னது போலே RR இல்லாமல் பார்த்தாலும் இந்த படத்தில் பெரிய வித்தியாசம் இல்லை
நல்ல படம் பார்த்த குஷியில் நாங்கள் வெளியே வந்தோம்
இதில் highlight என்னவென்றால் என் நண்பர்கள் சிலர் இப்போ என்னிடம் சில சிவாஜி படங்களை பார்க்க suggestions கேட்பது தான்
என்னை போல் ஒருவன் HD Print
http://www.youtube.com/watch?v=8AkrSIEDZEo
நேற்று சத்யம் தியட்டரில் நடந்த பாசமலர் trailer வெளியீட்டு விழா ரசிகர்களை மிகுந்த உற்சாகபடுத்தியது,
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரசிகர்களின் அலப்பறையால் அரங்கம் அதிர்த்தது என்றே சொல்லலாம்.
தலைவரின் திருமுகம் மிக துல்லியமாக அகன்ற திரையில் காணும் போது மெய் சிலிர்த்தது. ஆரூர் தாஸ் அவர்கள் படத்தின் இறுதி காட்சி திரையாக்கம் செய்யும் போது தலைவர் நாள் முழுக்க பட்டினி கிடந்தது அந்த காட்சியில் நடித்தது பற்றி கூறும் போது அவர் மிகுத்த உணர்ச்சி வயப்பட்டார், அதை கேட்டு கொண்டிருக்கும் நாங்களும் அதே நிலையில் இருந்தோம். அரங்கத்தை விட்டு வெளியே வந்த போதும் அந்த நினைவலைகள் அடங்க வெகு நேரம் ஆயிற்று.
டியர் ராகுல்ராம்
தங்களது என்னைப் போல் ஒருவன் திரைப்பட அனுபவம் அருமை. தாங்கள் நன்றாக அனுபவித்து எழுதியிருப்பது தங்களது ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது. தாங்களும், தங்களின் தாயும் உடல்நலம்பெற வாழ்த்துக்கள்.
அன்புள்ள முரளி சார்,
நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பர்த்திருந்தபடி 'பாசமலர்' ட்ரைலர் வெளியீட்டு விழாவை மிக அருமையாக, விரிவாக தொகுத்தளித்து விட்டீர்கள். ட்ரைலர் அருமையாக வந்திருப்பது போல படமும் அமோக வெற்றியடையும் என நம்புகிறோம். கிளைமாக்ஸ் காட்சி பற்றி தினத்தந்தியில் மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆரூர்தாஸ் சொல்லியிருக்கிறார். அதுபோல பேக்டரி மோதல் காட்சி பற்றியும்.
அலப்பரைகளை விவரித்து எழுதிய விதம் மிக அருமை. 'மலர்ந்தும் மலராத பாடலைப்பற்றி எழுத வேண்டியதில்லை' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதுதான் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் கல்வெட்டாய் செதுக்கி விட்டீர்களே. அப்பாடலைப்பற்றி அதையும் தாண்டி ஒருவர் எழுதிவிட முடியுமா என்ன?.
ஆகஸ்ட் 16 அன்று இதைவிட விரிவான நிகழ்ச்சித் தொகுப்பை எதிநோக்கியுள்ளோம்...