http://i60.tinypic.com/2v00107.jpg
Printable View
வினோத் சார் - உங்கள் பதிவுடன் இதை தொடர்கிறேன் . பதவி , பணம் , ஆடம்பரங்கள் எதுவுமே இல்லாமல் , ஒரு அறை உள்ள வீட்டில் , திருமணமே பண்ணிக்கொள்ளாமல் குழந்தைகளுடன் குழந்தையாகவே வாழ்ந்து மறைந்த ஒரு மகான் , நம் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக ஒவ்வொரு குடி மகனும் பெருமை பட வேண்டும் .ஒரு தேசிய வாதி , இந்த தேசமே கனவு காண வேண்டும் என்றே சொல்லிவிட்டு அவரே கனவாகிவிட்டார் .... நல்லவர்கள் நினைப்பது மட்டும் தான் நடப்பதில்லை இந்த தமிழ் நாட்டில் !!! பக்கத்துவீட்டுக்கு சென்றாலே - "அடுத்த வீட்டை எட்டிப்பார்க்கும் கோமகனே வருக வருக " என்று போஸ்டர்கள் அடித்து , ஆலயங்கள் சென்று மொட்டைகள் அடித்துக்கொள்ளும் இந்த காலத்தில் , இப்படியும் ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்று நினைக்கும் பொழுது , ஒவ்வொரு தமிழனின் தலையும் நிமிர்ந்து நிற்க வேண்டும் ...
" எங்களை கனவு காண சொன்னீர்கள் !!! இப்பொழுது
காண்கிறேன் இது , கனவாக இருக்கக்கூடாதா என்று !!!!
சாதனைச்சரித்திரம்
சரிந்தது ..
மேகாலயாவில்
மேகத்தினில்
கலந்தார் கலாம் ...
எங்களைக் கனவு காணச் சொன்ன
கனவு நாயகனே...நீர்
காற்றினிலே கலந்ததென்ன?
விண்வெளியின்
நாயகனே...நீர்
விண்ணோடு கலந்ததென்ன?
ஏவுகணை மூலம்
எல்லா இடங்களையும்
கண்டவரே ...நீர்
எட்டா உயரம் சென்றதெங்கே்?
அக்னி யிலே
அகிலம் திரும்பச் செய்தவரே...
அக்னியிலே கலந்ததென்ன??
தமிழகத்தின் தலைமகனே ...
இந்தியாவின் கோமகனே...
தளர்வடையோம்
உம் பிள்ளைகள் நாங்கள் ...
மனதினில் மட்டுமல்ல...
மகவாயும் நீர் வருவாய் ...
மழலை மொழியும் நீர்
சொல்வாய் ...
உனக்காக காத்திருப்போம் ...
அப்பனே நீர் வருவாய் ....
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (drdo) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (isro) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (slv) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு slv -iii ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-i என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-ii பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்இந்தியா 2012எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
அறிந்த உண்மை !!
நேற்று நடந்த ஒரு விந்தையான எதிர்பாராத சந்திப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு திருவல்லிக்கேணி செல்ல நேர்ந்தது. பழைய நண்பர்கள் சந்திப்பு. எனது பால்ய நண்பர் அச்சுதன் ஒரு நண்பரை அறிமுகம் செய்துவைத்தார். கேரளா கொய்லோன் ஐ சேர்ந்த கோவிந்தன்குட்டி. சுமார் 67 வயது மதிக்க தக்கவர்.
திரு அச்சுதனும் நானும் நடிகர் திலகம் மீது மிகுந்த பற்றுகொண்டவர்கள். அறிமுக படுத்தி பேசும்போது எனது நண்பர் கூறிய செய்தி மக்கள் திலகம் அவர்களுடைய அருமை பெருமையை மீண்டும் கேட்கும் பாகியம் கிடைத்தது.
இக்காலத்தை சேர்ந்தவர்களுக்கு இது சினிமாத்தனமாக இருக்கலாம்...ஆனால் இது நடந்த சம்பவம் நடந்த உண்மைகள்.
மக்கள் திலகம் அவர்களுடைய பாலக்காடு மனைவி வழி வீட்டில் திரை உலகில் அவ்வளவு பிரபலம் ஆகாத நேரம். நாடகமே மூல வருமானம்.
அந்த நிலையிலும் அங்கு வயலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை அனைவருக்கும் சென்னையில் இருந்து வரவழைத்த அருசியில் சமைத்த சாதம், சாம்பார், அவியல், தோரன் ( பொரியல்) சக்கப்ரதமன்(பலா பழ பாயசம்) பப்படம் முதலியன சமைத்து மதிய உணவும் , காலை உணவு நாட்டரிசி இளம் தேங்காய் துருவல் கொண்டு செய்த குழாய் புட்டு மற்றும் கடலை கறி சமைத்து சிற்றுண்டியும் வெளியில் பந்தல் போட்டு வேலை செய்த அனைவருக்கும் விளம்பும் ஒரு வழக்கம் இருந்ததாக கூறினார் ! இது அவர்களுக்கு கொடுக்கும் கூலியை தவிர மக்கள் திலகம் அவர்கள் சார்பில் அவர்கள் உழைப்பை மதித்து செய்யும் மரியாதை என்று கூறினார்.
இதை கேட்டவுடன்...பலர் ...பல விஷயங்களை மக்கள் திலகம் பற்றி கூறினாலும்...கூறிகொண்டிருந்தாலும்...இந்த ஈகை குணம் என்பது மக்கள் திலகம் வசதி வந்தபோது ஒரு சிலர் கூறுவதை போல அரசியல் ஆதாயத்திற்காக செய்ததாக தெரியவில்லை. பிறந்ததில் இருந்தே ஒருவருக்கு ஈகை குணம் இல்லையென்றால் அவரால் ஒரு பைசா கூட சும்மா கொடுக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.
அதே போல அந்த காலத்தில் "காட்டுகள்ளன்" என்ற ஒரு பிரிவினர் இருந்ததாக கூறினார். அவர்கள் வேலை கிட்டத்தட்ட நக்சலைட்டு வேலயைபோன்றதாகும்.
அதிலும் ஒரு சிலர் சுயலாபம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்..அப்படி ஒரு சிலர், அதே வீட்டை கண்ணிவைத்து பொருட்களை கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் போல தெரிகிறது.
4 ஆட்கள் அந்த வீட்டை நள்ளிரவிற்கு மேல் முற்றுகை இட்டுள்ளனர். அவர்களுக்கு மக்கள் திலகம் அவர்கள் நள்ளிரவில்தான் வந்துள்ளார் என்கின்ற விஷயம் தெரியவில்லை. கொல்லைபுறம் வழியாக ஏணி வைத்து ஓட்டு வீடு ஏறி....பின்வாசலில் உள்ள அறையை வழியாக நுழைய ஓட்டை பிரித்துகொண்டிருந்தனராம். கூரையின் மீது ஏதோ வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்கிறதே என்று ...."ஆராடா ஓட்டும்புரத்து ......தடி கேடாக்கணோ ?" ( யாருடா ஓட்டின்மேல் ....உதை வேணுமா ?) என்று ஒரு குரல் மக்கள் திலகம் கொடுக்க ...ஆண் யாரும் இல்லை என்று நினைத்து திருட வந்தவர்களுக்கோ பேரதிர்ச்சி...வந்தது ஆபத்து என்று அவர்கள் தட்டு தடுமாறி விழுந்து இறங்கி ஓட எத்தனிக்க...அதற்குள் மக்கள் திலகம் மாங்காய் பறிக்க வைத்திருக்கும் தோட்டி எடுத்து அவர்களை நய்யபுடைத்திரிக்கிறார். வந்தவர்கள் அதனை எதிர்பார்க்காமல் நாலா புறமும் சிதறி ஓடுகையில் ஒருவனிடம் இருந்து பிச்சுவா நழுவி விழுந்துள்ளது...அக்கம் பக்கம் யாரும் இல்லாததால் எங்கே அவர்கள் மறுபடியும் கும்பலாக தக்க வருவார்களோ என்று எண்ணி...மக்கள் நடமாட்டம் வரும்வரை விழித்திருந்தார்கள் பிறகு காவல் துறையை அணுகி இதனை பற்றி எடுத்துகூறி...அந்த ஏரியா விற்கு தினமும் ஒரு ஏட்டு இரவு வேலையில் ரோந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக திரு கோவிந்தன் குட்டி அவர்கள் கூறக்கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது ! உங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
rks
makkal thilagam m.g.r in gulebagavali
29.7.1955
60th anniversary to day
குலேபகாவலி என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன்.பகாவலி பட்டினத்தில் உள்ள குலே எனும் மலரை எடுத்துவந்து தந்தைக்கு எம்ஜிஆர் கண்பார்வை தருவதுதான் கதை. டணால் தங்கவேலு,சந்திரபாபு காமடியில் கலக்குகிறார்கள். எம்.ஜி.ஆர் மூன்று தாரம் கட்டும் படம் எனக்கு தெரிந்து இதுவாக தான் இருக்கும்.பாகவலி நாட்டில் ஆண்கள் இல்லதரசர்கள்,பெண்கள் எஜமானர்கள்.எம்ஜிஆரிடம் திருவிளையாடல் பாணியில் ராணி கேள்வி எல்லாம் கேட்கிறார்.அதில் ஒரு கேள்வி "பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதில் உள்ள நன்மை என்ன?".பதில் "ஊர் உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும்.."
ரொம்ப எளிமையான கதை.குழந்தைதனமான உத்திகள்...தாயம் ஆடி ஆண்களை அடிமைபடுத்த நினைக்கும் லதீஷா தாயம் உருட்டுவார்.அப்போது தங்கவேலு விளக்கை அணைப்பார்.விளக்கு மீண்டும் எரியும்.அப்போது தாயகட்டை மாற்ரஒபட்டு இருக்கும்.உடனே அந்த ஆண் அடிமை ஆக்கபடுவார்.எம்ஜிஆர் விளக்கை அணைக்கவிடாமல் தங்கவேலு கையை பிடித்து கொண்டு ஜெயித்துவிடுவார்
courtesy- net
Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.
தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா? அவர்சினிமா நடிப்பைக் கைவிட்டபிறகுகூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால் அவர் அதிகாரம் என்பதை பார்க்கமுடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர்.பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது.எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்!வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்பானது.
COURTESY - NET
குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி! எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!
சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை.
புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள்.
ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.
படம் ரிலீஸாகி 60வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!
ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!
Courtesy
சி.என்.ராமகிருஷ்ணன்