100http://i1065.photobucket.com/albums/...psp4mfxtiq.jpg
Printable View
THE UNCOMMON GOD & a common man
RAja Raja cholan?!
what a movie! how a ten year old can understand history and involve with the massive presentation of temple ,and architectural aspects.Always NT mustache reminds me that it was a cinema-scope .If you see the mustache ,it will be like a screen of cinema-scope.The height at the centre is less and incresae on both sides till the end like a screen.
What a introduction?
every one had gone to the birthday celebration of the king,including the helper boy of the stone carver.When the carver asks to take the pot for spitting the betalnut,the wrist and palm portion carrying the pot is shown.The carver receives it and in the process he lifts his head and get shocked.Now the camera shows NT sorry Rajarajan in a full.From feet to head.From that day,among many kings ruled india rajarajan is special to me.
In-numerous of kings,freedom fighters,poets and historic people have lived in this world.But we NT fans definitely have a liking of the characters whom were acted on screen by NT.(to be continued)
http://i1028.photobucket.com/albums/...psxqyopola.jpg
திரைப்படம் என்கிற கலை
வடிவம் மிகவும் சக்தி வாய்ந்தது.
ஒரு நல்ல திரைப்படம்,மனிதன்
நல்லபடியாய் பொழுது போக்கிட மட்டுமல்ல...
மனசின் பழுது நீக்கிடவும்
உதவுகிறது.
ஒரு வீட்டின் கம்பீரத்தையே
தாங்கி நிற்கும் தூண்களில்
முதுகு சொறிந்து கொள்வது
போல்...
படிப்பறிவில்லாதவன், தத்துவப்
புத்தகத்தைக் கொண்டு புழுக்கம்
போக விசிறிக் கொள்வது போல்...
நாம் சிறந்த விஷயங்களை
சாதாரணங்களுக்காக வீணடித்துப் பழகி விட்டோம்
என்பதற்கு, சினிமாவைப்
பொழுது போக்கப் பயன்படுத்துவது ஒரு
உதாரணம்.
நம்முடைய ஒரு மூன்று மணி
நேரத்தை சொர்க்கமாக்குவதற்காக, ஒரு
திரைப்படத்தோடு தொடர்புடைய எத்தனை பேர்
தங்கள் நாட்களை நரகமாக்கிக்
கொள்கிறார்கள்?
காசு கொடுத்து எளிதில் நாம்
பெற்று விடுகிற நிம்மதி, காசை
வாங்கிக் கொண்டாலும்
அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
காதல், கவர்ச்சி, கற்பழிப்பு,
நடனம்,சண்டை என்று விருப்பமானதைக் காட்டியவர்கள், கண்ணீரையும்.
வாழ்வின் நிஜமான இயல்பு
முகங்களையும் காட்டினால்
நமக்குப் பிடிப்பதில்லை.
சம்மந்தமே இல்லாத இடத்தில்
பாட்டு வந்தாலும் தமக்குப் பிடித்த மாதிரி இருந்தால் குஷியாட்டம் போடுகிறவர்கள்.. இந்த இடத்தில் எதற்குப் பாட்டு
என்று கேள்வி கேட்பதில்லை.
மூன்று மணி நேரத்திற்குப்
பிறகு திரையரங்க இருட்டை
விட்டு நீங்கி, வெளியுலகில்
அவன் சந்திக்கப் போகும்
வாழ்வின் சராசரி துன்ப நிகழ்வுகளையே, அவனுக்கு
திரையிலும் சந்திக்கப் பிரியமில்லை.
இந்தப் பயம், இந்த தப்பித்தல்...
சிவாஜி ரசிகர்களாகிய நமக்கில்லை.
அழுகையும், கஷ்டங்களும்
தியாகத்துடன் தொடர்புடையது
எனில், அவையும் நல்லவையே
என அய்யன் நடிகர் திலகம்
தன் கலையால் விளக்கியிருக்கிறார்.
மனித வாழ்வில், மகிழ்வைப்
போலவே துன்பங்களும், கண்ணீரும், போராட்டங்களும்,
பார்க்கச் சகியாத கொடுமைகளும் நிச்சயமானவை. இவற்றையெல்லாம் அனுபவிக்கிற நிஜமான மனிதனைக் கதாபாத்திரமாக்கி
நடிப்பதும், அதை உலகமே
ரசிப்பதும் தவறானதல்ல என்பதை நமக்கு உணர்த்தி,
எந்த தப்பித்தலுமின்றி தன்
படங்களைப் பார்ப்பதற்கு அவர்
நம்மைப் பழக்கியிருக்கிறார்.
--------------
"தாவணிக் கனவுகள்."
என்னால் எப்போதும் மறக்க
முடியாத படம். மனசுக்குள்ளே
ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிற படம்.
"தாவணிக் கனவுகள்" வெற்றிப்
படமே என்பதை நானறிவேன்.
ஆனால்.. அது இன்னும்,இன்னும் வெகுவாகக்
கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.
கஷ்டப்படும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து,
உள்ளத்தில் நெருப்போடு
கிளம்பிப் போன ஒருத்தன்
வாழ்வை ஜெயித்து வரும்
சாதனையையும், அவனது
முன்னேற்றத்திற்காக தன்னுயிரையும் தரத் துணியும்
ஒரு நல்ல மனிதரின் தியாகத்தையும் மிக அழகாய்
எடுத்துக் காட்டிய திரைப்படத்தை நாம் இன்னும்
போற்றிக் கொண்டாடியிருக்க
வேண்டும்.
மிகப் பெரிய குடும்பத்தைக்
காப்பாற்றத் தவிக்கும் இளைஞனுக்கு, மனிதாபிமானத்துடன் உதவும்
பெரியவராக இந்தப் படத்தில்
நடிகர் திலகம் ஏற்றிருப்பது
கௌரவ வேடமல்ல.
அவர் தந்திருப்பது..
அந்த வேடத்திற்கு கௌரவம்.
------------------
சுப்ரமணியம் - படித்த இளைஞன். பி.ஏ. பட்டதாரி.கல்வியில் சிறந்து தங்கப்பதக்கம் வாங்கியவன்.
தகப்பனில்லாத குடும்பத்தின்
மூத்த மகன். ஐந்து தங்கைகள்.
அதில் மூன்று தங்கைகள்
கல்யாண வயதில். படித்த
படிப்புக்கு வேலை இல்லை.
சம்பாத்தியம் இல்லை. அவனது
விதவைத் தாய்க்குக் கூட
அவன் மீது மரியாதை இல்லை.
திரும்பின திசையெல்லாம்
ஏமாற்றங்கள். அடிக்கடி அவனைப் பார்த்துப் பல்லிளிக்கும் அவமானங்கள்.
குடிக்கிறான்... மனசு வலிக்கும்
போதெல்லாம் மதுவை மருந்தாக.
ராணுவத்திலிருந்து ஓய்வு
பெற்றுத் திரும்பி அங்கே
சின்னதாய் சைக்கிள் கடை
நடத்திக் கொண்டிருக்கும்
கேப்டன் சிதம்பரத்தின் வீட்டில்
தான் சுப்ரமணியத்தின் குடும்பம் குடியிருக்கிறது.
கேப்டன்- ராணுவச் சீருடையை உடல் மீதும்,
தேசத்தை நெஞ்சோடும்
எப்போதும் வைத்திருப்பவர்.
நேதாஜியின் பக்தர். எளிமை,
ஒழுக்கம், மனிதாபிமானம்
இவற்றோடு ஒரு உயர்வு
வாழ்க்கை வாழும் பெரிய
மனிதர்.
சுப்ரமணியத்தின் குடிப்பழக்கம்,
சின்னச் சின்ன துடுக்குத் தனங்களை உரிமையுடன்
கண்டித்தாலும், சம்பாதித்துக்
குடும்பத்தைக் காப்பாற்றத்
துடிக்கும் அவனுக்கு எப்போதும் உதவும் கரங்கள்
உடையவராயிருக்கிறார்..
கேப்டன்.
துன்பங்களும், அவமானங்களும் துரத்து,துரத்தென்று துரத்த
சுப்ரமணியம், கேப்டனின்
உதவியோடு சென்னைக்கு
வேலை தேடி ஓடுகிறான்.
வாழ்க்கையில் குறுக்கு வழியில் முன்னேற அசட்டுத்
திட்டங்கள் போட்டுத் தோற்று,
பசித்து,மயங்கி...
கேப்டனின் நண்பர் மகளின்
உதவியில் சினிமாவில் சின்னச்
சின்னப் பாத்திரங்களில் நடித்து,
தன் திறமையால் ஒரு பெரிய
இயக்குனரைக் கவர்ந்து, அவரது திரைப்படத்தின்
கதாநாயகனாகவும், கதை வசனகர்த்தாவாகவும் ஆகி
கைநிறையப் பணத்தோடு
ஊர் திரும்புகிறான்.
இங்கே அவன் நல்வாழ்வுக்காகவே வாழ்ந்து,
அவன் குடும்பத்தைத் தன்
குடும்பமாகவே வாழ்வித்த
அவனது மதிப்பிற்குரிய கேப்டன், உடல் நலிவுற்று
இறந்து விடுகிறார்.
கொண்டு வந்த பெரும்பணத்தைக் கொண்டு
தனது மூன்று தங்கைகளுக்கு
பெரிய,பெரிய பணக்கார மாப்பிள்ளைகளைப் பார்க்கிறான்.
திருமணத்தன்று, நகை மீதும்,
பணத்தின் மீதுமே கண்ணாக
இருக்கும் மாப்பிள்ளை வீட்டாரைச் சுட்டிக் காட்டி,
இவர்களின் வீடுகளில் போய்
தாங்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதைத் தங்கைகள் தெளிவுபடுத்த.. அவர்கள் சொல்வதிலிருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ளும் சுப்ரமணியம், தான்
சென்னையிலிருந்த போது, தன்
குடும்பம் கஷ்டப்பட்ட போது
தேடி வந்து உதவி செய்த ஒரு
தையல்காரர், ஒரு சலவைத்
தொழிலாளி, ஒரு தபால்காரர்
ஆகிய மூவரையும் தனது
மூன்று தங்கைகளுக்கும்
மணம் செய்து வைக்கிறான்.
வரதட்சணைத் தீயால்
அழகழகான கல்யாணக் கனவுகள் பொசுக்கப்படக் கூடாதென்று வேண்டிக் கொண்டு "தாவணிக் கனவுகள்"
முடிகிறது.
----------------------------
ஒரு சல்யூட்டோடு அறிமுகமாகி, மற்றுமொரு
சல்யூட்டோடு விடைபெறும்
நடிகர் திலகத்துக்கு ஒரு சல்யூட் வைத்து, நான்
"தாவணிக் கனவுகளைத்"
துவக்குகிறேன்.
-------------------
உத்தமர் நடிகர் திலகத்தின்
குணம் போலே உயர்ந்து
நிற்கும் ஒரு கொடிக் கம்பம்.
தேசம் காப்பதற்கென்றே
இறைவன் அருளிய கரங்கள்
அந்தக் கம்பத்தின் கொடிக்
கயிறை இழுக்கின்றன.
பெருமை மிகுந்த நம் தேசியக்
கொடி, மேலே..மேலே.. மேலே
போகிறது.
உச்சிக்குப் போன கொடி,
உற்சாகமாய் விரிகிறது.
பட்டொளி வீசிப் பறக்கிறது.
கொடியேற்றிய கரங்களுக்குரியதாய் ஒரு
சாதனை முகம் இருக்கிறது.
பறந்த கொடி தன்னுள்ளிருந்த
பூக்களை அந்த முகத்தின்
மீது உதிர்க்கிறது.
"என்னை மறவாத உன்னை
நான் மறவேன்" என்று உயரத்திலிருந்து சிரிக்கிறது.
( ...தொடரும்...)
ஆதவன்...
(இந்தப் படத்தில்
நடிகர் திலகம் ஏற்றிருப்பது
கௌரவ வேடமல்ல.
அவர் தந்திருப்பது..
அந்த வேடத்திற்கு கௌரவம்.)
.,ஆரம்பமே அமர்க்களம்.
தொடர்ந்துபிரமாதப்படுத்துங்கள்.
Aathavan
Oru veettin kambeeraththai .........................indha bayam namakkillai
Really touching lines ,that's what I often tell myself that i(we) am blessed to be born as NT fans.I salute you Ravi!
Helplessly watching the perils of our people suffering from incessant rains and unprecedented floods.
Our heartfelt prayers for them to get relieved off and resume normality at the earliest, on behalf of NT/GG threads!
senthil
https://www.youtube.com/watch?v=2BH1a4RP16A
சூழ்ந்த வெள்ளம்
வடியட்டும்.
சென்னையின் துன்பம்
முடியட்டும்.
நாளைப் பொழுது அங்கே
நல்லபடி விடியட்டும்.
எல்லோருக்காகவும்
என் பிரார்த்தனைகள்.
அது மட்டுமல்ல அதனால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவும் நம்மைப் பழக்கியிருக்கிறார்.Quote:
மனித வாழ்வில், மகிழ்வைப்
போலவே துன்பங்களும், கண்ணீரும், போராட்டங்களும்,
பார்க்கச் சகியாத கொடுமைகளும் நிச்சயமானவை. இவற்றையெல்லாம் அனுபவிக்கிற நிஜமான மனிதனைக் கதாபாத்திரமாக்கி
நடிப்பதும், அதை உலகமே
ரசிப்பதும் தவறானதல்ல என்பதை நமக்கு உணர்த்தி,
எந்த தப்பித்தலுமின்றி தன்
படங்களைப் பார்ப்பதற்கு அவர்
நம்மைப் பழக்கியிருக்கிறார்.
கொடி உயர்ந்து விட்டது..Quote:
உத்தமர் நடிகர் திலகத்தின்
குணம் போலே உயர்ந்து
நிற்கும் ஒரு கொடிக் கம்பம்.
அதற்கு தன்னை உண்மையாக மதிப்பவர் யாரெனத் தெரிந்திருக்கிறது..Quote:
"என்னை மறவாத உன்னை
நான் மறவேன்" என்று உயரத்திலிருந்து சிரிக்கிறது.