-
மதுரை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் வெளியீடு பட்டியல் -2018
-----------------------------------------------------------------------------------------------------------------------
12/01/2018 - அலங்கார் -அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
19/01/2018 -மீனாட்சி -தர்மம் தலைகாக்கும் -தினசரி 4 காட்சிகள்
26/01/2018-வண்டியூர் பழனிமுருகன் -நினைத்ததை முடிப்பவன்-தினசரி 3காட்சிகள்
09/02/2018-சென்ட்ரல் -நேற்று இன்று நாளை -தினசரி 4 காட்சிகள்
23/02/2018- சென்ட்ரல் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
02/03/2018- அரவிந்த் -எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் =
இணைந்த 2 வது வாரம்
09/03/2018-சரஸ்வதி =எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
இணைந்த 3 வது வாரம்
16/03/2018 -சோலைமலை -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
இணைந்த 4 வது வாரம்
09/03/2018- பழனி ஆறுமுகா -தர்மம் தலைகாக்கும் -தினசரி 3காட்சிகள்
16/03/2018-கம்பம் யுவராஜா , மானாமதுரை, காரைக்குடி அரங்குகளில்
நாடோடிமன்னன் -தினசரி 3 காட்சிகள்
16/03/2018-பழனி மினிரமேஷ் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
23/03/2018-வெற்றி , தமிழ் ஜெயா, தேவி கலைவாணி அரங்குகளில்
நாடோடி மன்னன் -தினசரி 4 காட்சிகள்
30/03/2018-வண்டியூர் பழனிமுருகன் -தேடி வந்த மாப்பிள்ளை - 3காட்சிகள்
06/04/2018 -ராம் தியேட்டர் -அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
06/04/2018 -சின்னாளப்பட்டி அரங்கில் நாடோடிமன்னன் -2 வாரம் ஓடியது
சிவகாசி பழனி ஆண்டவர் ,மேலூர் கணேஷில்
நாடோடிமன்னன் தினசரி 4 காட்சிகள் .
13/04/2018-சரஸ்வதி --ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்
20/04/2018- ராம் தியேட்டர் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
27/04/2018- ஷா தியேட்டர் -அடிமைப்பெண் - -தினசரி 4 காட்சிகள்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு 29/4/18,30/04/18,01/05/18-மூன்று
நாட்கள் மட்டும் நள்ளிரவு காட்சியும் நடைபெற்றது .
27/04/2018-மீனாட்சி -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
18/05/2018-ராம் தியேட்டர் -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
22/6/2018 -போடிநாயக்கனுர் அரங்கில் அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
29/06/2018- சென்ட்ரல் -விவசாயி - தினசரி 4 காட்சிகள்
13/7/2018 -ராம் தியேட்டர் -தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள்
27/07/2018 -சென்ட்ரல் -மலைக்கள்ளன் -தினசரி 4 காட்சிகள்
12/08/2018-மீனாட்சி -பறக்கும் பாவை -தினசரி 4 காட்சிகள்
சிவகாசி ராசி -நாடோடிமன்னன் -தினசரி 4 காட்சிகள்
28/09/2018-சென்ட்ரல் -தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
05/10/2018-மீனாட்சி - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்
02/11/2018-சென்ட்ரல் -பல்லாண்டு வாழ்க -தினசரி 4 காட்சிகள்
21/12/2018-சென்ட்ரல் -ரிக் ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்
குறிப்பு : மதுரை மாநகரிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களே மறுவெளியீட்டில் முன்னணியில் உள்ளன. வசூலிலும் பல படங்கள்
சாதனைகள் புரிந்துள்ளன. இந்த நிலை வேறு எந்த நடிகரின் திரைப்படங்களுக்கும் நிகழவில்லை என்பதே உண்மை .
-
See, how the members of his fan-association strikingly refused to accept his request
!
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மூலமாக அமெரிக்க பல்கலைக் கழக அழைப்பை ஏற்று, கலந்து கொண்டு,எம் ஜி.ஆர் திரும்பி வரும்போது நடந்த சுவையான நிகழ்ச்சி !
"நான் சாதாரண அழைப்பின் பேரில் தான் அமெரிக்கா போனேன். என்னை வரவேற்க என் ரத்தத்தின் ரத்தங்கள் சிரமப்பட்டு வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என்று ஒரு அறிக்கை கொடுத்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்த அறிக்கை அவர் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு முதல் நாளே பத்திரிக்கைகளிலும் வந்துவிட்டது.
அடுத்த நாள் ரசிகர் மன்றங்கள் ஒன்றிணைந்து
ஒரு அறிக்கை வெளியிட்டன.
"கொடுமை
கொடுமை
எங்கள் தலைவர், அவரை வரவேற்க வருவதை சிரமம் என்று சொன்னது, எங்களுக்கு மிகுந்த வேதனை தருகிறது. அமெரிக்காவில் பட்டம் பெற்றதும்,அங்குள்ளவர்கள் புகழ்மாலை சூட்டியதும் உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகத் தோன்றலாம். அது எங்களுக்கு மிகப் பெரிய பெருமை. தமிழ்நாட்டிலுள்ள ரசிகர் மன்றத்தினர் ஒன்று கூடுவோம். வரவேற்க வருவோம். வரும் வழியில் மாலைகள் போட்டு வணங்குவோம். இதைத் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை -- என்றும் உங்கள் புகழ் பாடும் மன்றத்தினர்" என்று இருந்தது.
எம்.ஜி.ஆர் வந்தார். விமான நிலையத்துக்குள் முக்கிய பிரமுகர்கள் மாலை போட மேடை அமைத்திருந்தார்கள். அங்கேயே ஆயிரக் கணக்கான மாலைகள் விழுந்தன. வெளியே வந்தார். ' தலைவர் வாழ்க ' ஒலி விண்ணை முட்டியது. மாலைகள் ஆங்காங்கே மலைபோல குவிந்தன.
அடுத்த நாள் சாலையை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர்கள் நரி முகத்தில் விழித்திருந்தனர் போலும். பல ரசிகர்கள் மாலையுடன் ஏராளமான ரூபாய் நோட்டுக்களை இணைத்திருந்தனர். நல்ல வேட்டை !
(1968 ல் வெளியான 'புதிய பூமி' படத்தில் பூவை செங்குட்டுவன் பாடலை எம்.எஸ்.வி. இசையமைப்பில் டி.எம்.எஸ் பாடுகிறார்)
https://youtu.be/cXQxVEbSwIM... Thanks Friends...........
-
கோவை மாநகரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் அதிக அளவில் மறுவெளியீட்டில் வெளியான சாதனை பட்டியல் -2018.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-12/01/2018 - ராயல் - ரகசிய போலீஸ் 115 -தினசரி 4காட்சிகள்
22/01/2018 - சண்முகா -பணம் படைத்தவன் -தினசரி 4 காட்சிகள்
26/01/2018- டிலைட் -பணக்கார குடும்பம் -தினசரி 2 காட்சிகள்
02/02/2018 -சத்தியமங்கலம் -வீரா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4காட்சிகள்
09/03/2018-டிலைட் -தாய்க்கு தலைமகன் - தினசரி 2காட்சிகள்
23/03/2018-சென்ட்ரல் -நாடோடி மன்னன் -தினசரி 4 காட்சிகள்
23/03/2018 -நாஸ் -ரிக் ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்
30/03/2018 - டிலைட் -நேற்று இன்று நாளை - தினசரி 2 காட்சிகள்
30/03/2018- ஈரோடு -தேவி அபிராமி ) நாடோடிமன்னன் _தினசரி 4காட்சிகள்
பொள்ளாச்சி -ஏ.டி.எஸ்.சி )
திருப்பூர் -சினிபார்க் ) 2 வாரம் ஓடியது .
மேட்டுப்பாளையம் -அபிராமி )
சோமனுர் -சவீதா )
சத்தியமங்கலம் -ஜெய்சக்தி )நாடோடி மன்னன் தினசரி 3 காட்சிகள்
வேலந்தாபாளையம் -தனலட்சுமி )
கொழிஞ்சாம்பாறை -விருந்தாவன் )
01/04/2018 -அர்ச்சனா
புளியம்பட்டி எஸ்.ஆர்.டி.-- அடிமைப்பெண் தினசரி 4 காட்சிகள்
30/03/2018-திருப்பூர் -தமிழ்நாடு சினிமாஸ் -எங்க வீட்டு பிள்ளை -தினசரி4காட்சி
06/04/2018-சாந்தி - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
ஊட்டி -ஏ .டி..சி. - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3 காட்சிகள்
13/04/2018-தர்சனா - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்
கோபிசெட்டிபாளையம் -ஜெயமாருதி -நாடோடிமன்னன் -
தினசரி 4 காட்சிகள்
20/04/2018-டிலைட் -நவரத்தினம் -தினசரி 2 காட்சிகள்
வேலந்தாபாளையம்-தனலட்சுமி -அடிமைப்பெண் -தினசரி 3காட்சிகள்
ஆலந்துறை -சக்தி -ரகசிய போலீஸ் 115-தினசரி 3 காட்சிகள்
27/04/2018-ராயல் -மன்னாதி மன்னன் -தினசரி 4காட்சிகள் -4நாட்கள் மட்டும்
01/05/2018-ராயல் - தனிப்பிறவி - தினசரி 4 காட்சிகள் -3 நாட்கள் மட்டும்
04/05/2018-டிலைட் -ஊருக்கு உழைப்பவன் -தினசரி 2 காட்சிகள்
11/05/2018- ராயல் -அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள் -10 நாட்கள் ஓடியது
21/05/2018 -ராயல் -சிரித்து வாழ வேண்டும் -4 காட்சிகள் -4 நாட்கள் மட்டும்
01/06/2018 -டிலைட் -பறக்கும் பாவை -தினசரி 2 காட்சிகள்
அன்னூர் -விநாயகா -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3காட்சிகள்
22/06/2018-டிலைட் -நாளை நமதே -தினசரி 2 காட்சிகள்
06/07/2018-ராயல் -சக்கரவர்த்தி திருமகள் -தினசரி 4 காட்சிகள்
27/7/2018 -ராயல் - விவசாயி - தினசரி 4 காட்சிகள்
03/08/2018- டிலைட் -கலங்கரை விளக்கம் - தினசரி 2 காட்சிகள்
10/08/2018 -ராயல் - குலேபகாவலி -தினசரி 4 காட்சிகள்
24/08/2018- ராயல் -குமரிக்கோட்டம் - தினசரி 4 காட்சிகள்
31/08/2018- நாஸ் - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்
ஈரோடு-சங்கீதா -நாடோடி மன்னன் -தினசரி 4காட்சிகள்
07/09/2018 -டிலைட் -ஒரு தாய் மக்கள் - தினசரி 2 காட்சிகள்
14/09/2018-ராயல் -ரிக் ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்
21/9/2018-டிலைட் - உழைக்கும் கரங்கள் - தினசரி 2 காட்சிகள்
28/09/2018- ராயல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்
19/10/2018- டிலைட் - பணக்கார குடும்பம் - தினசரி 2 காட்சிகள்
26/10/2018-ராயல் -எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்
06/11/2018- ராயல் =புதுமை பித்தன் - தினசரி 4 காட்சிகள்
டிலைட் -பல்லாண்டு வாழ்க - தினசரி 2 காட்சிகள்
16/11/2018-ராயல் - விக்கிரமாதித்தன் - தினசரி 4 காட்சிகள்
30/11/2018- ராயல் -தர்மம் தலைகாக்கும் - தினசரி 4 காட்சிகள்
21/12/2018- ராயல் - என் கடமை - தினசரி 4 காட்சிகள்
குறிப்பு ; வேறு எந்த நடிகரின் திரைப்படமும் இந்த அளவில் மறுவெளியீட்டில்
வெளியாகி சாதனை படைக்கவில்லை கோவை மாநகரில் என்பது நிஜம் .
-
உலக நாடுகள் அனைத்தும் மதிக்கக்கூடிய நம் இந்திய நாட்டின் தேசத்தந்தை, மகாத்மா காந்தியடிகள் அவர்களது நினைவு தினம், இன்று.
நம் புரட்சித்தலைவர், காங்கிரஸ்காரர்களையே மிஞ்சும் வகையில், காந்தியடிகள் மீது பற்று கொண்டவர்.
'கண் போன போக்கிலே கால் போகலாமா' பாடலி ல், 'மனிதன் போன பாதையை மறந்து போகலாமா' என்று தலைவர் பாடும் சமயம், காந்தியடிகள் நடந்து செல்லுமாறு உள்ள போட்டோவை காண்பிப்பார். அதன் மூலம், மனிதன் என்பதற்கு உதாரணம் காந்தியடிகள்தான் என்பதை சுட்டிக்காட்டியி ருப்பார், நம் இனிய தலைவர் புரட்சித்தலைவர்.
அதுமட்டும் இல்லாமல், தான் தினமும் கும்பிடும் தனது அம்மா, அப்பா போட்டோக்களுடன், காந்தியார் போட்டோவையும் வைத்து கும்பிடும் பழக்கம் உண்டு.
இத்தனை வருடங்கள் கழித்தும், இந்திய நாடு என்றால், முதல் நினைவுக்கு வரும் மனிதர், நமது மகாத்மா காந்தியடிகள்தான் என்பதை பெருமையுடன் எண்ணி அவரை என்றும் வணங்கிக்கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை.... Thanks wa
-
சினிமா & அரசியல் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜிக்கு எதிர்ப்பு என்பது மிக மிக குறைந்த அளவே . அதேபோல் அவருக்கும் அவருடைய படங்களுக்கும் எந்தவித சங்கடங்களோ பிரச்சனைகளோ வந்தது இல்லை சிவாஜிக்கு பத்திரிகைகள் பேராதரவு மிகவும் அதிகம் . மேலும் சிவாஜி கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடிப்பிற்கு தீனி போட்டார் .சென்சார் பாதிப்புகள் இல்லை .மேல்தட்டு மக்கள் பெரும்பாலும் அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள் .காங் கட்சியின் ஆதரவும் இருந்தது . திமுக தரப்பில் இருந்து மட்டும் பல நேரங்களில் சிவாஜியின் நடிப்பை கிண்டல் கேலி செய்வார்கள் .போஸ்டரில் சாணி அடித்தார்கள்
.
சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் பணமும் கிடைத்தது ,.ஒரு கட்டத்தில் அவருடைய நடிப்பு மக்களுக்கு சலிப்பை உண்டாக்கியது .
1975க்கு பிறகு சிவாஜியின் படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி சில படங்கள் மட்டும் வெற்றி கண்டது .
அரசியலில் சிவாஜி மிகவும் பரிதாபமாக காணப்பட்டார் .கூட இருந்தவர்களும் சொந்த ரசிகப்பிள்ளை களும் காலை வாரி விட்டார்கள் .
சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தில இருந்தார் . அரசியலில் கடைசி இடத்தில நின்று காணாமல் போனார் .
நடிப்பில் பெயர் பெற்றதால் நடிகர்திலகம் பட்டம் மட்டுமே நிலைத்துவிட்டது .
உண்மை நிலவரம் புரியாமல் சிவாஜியின் புகழை மறைத்தார்கள் .எம்ஜிஆரின் புகழை திணித்தார்கள் என்றெல்லம் ஓலமிட்டு வரும் சிலரின் கூக்குரல் கேட்க்காமல் இல்லை .சிவாஜிக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தது ..மனசாந்தி இல்லாமல் காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும் சிவாஜியின் பிள்ளைகளின் இயலாமை கண்டு பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய இயலும் ? Courtesy : fb.,
-
Menu
Search
கண்ணதாசன்
காவியத் தாயின் இளைய மகன்
Advertisements
REPORT THIS AD
POSTED IN கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்
கண்ணதாசனும் புரட்சித்தலைவரும்
*
கண்ணதாசனின் கருத்து
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.
இவ்வாறு, கவியரசரே, எனது சுயசரிதம் என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக்*கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் மதுரைவீரன். இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
கிருஷ்ணா பிக்சர்ஸ் என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 ஆம் ஆண்டு வெளிவந்த மதுரை வீரன் திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
அம்மட்டோ! அக்காலத்தில், டூரிங் டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் மதுரை வீரன் படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை மதுரைவீரன் என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், மு..... Thanks...
-
-
-
-