http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zP18Jkwx6LU
Quote:
சன் டி.வி.யில் புதிய தொடர் : வாணி ராணி
சென்னை: புதிய மெகா தொடரான ‘வாணி ராணி’ சன் டி.வி.யில் இன்று இரவு முதல் ஒளிபரப்பாகிறது. ராதிகா சரத்குமார் நடித்து வெளிவந்த ‘செல்லமே’ தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்தத் தொடர் ஒளிபரப்பான இரவு 9.30 மணிக்கு ‘வாணி ராணி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் இத்தொடரில் ராதிகா சரத்குமார் வாணியாகவும் ராணியாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மற்றும் வேணு அரவிந்த், பப்லு, ரவிகுமார், புவனா, அருண், பேபி நேஹா உட்பட பலர் நடிக்கின்றனர். அன்றாடம் பல வீடுகளில் நடக்கும் யதார்த்தமான குடும்ப சண்டைகளும் சுவாரஸ்யங்களுமே இத்தொடரின் கதைகளம். வசனம், பா.ராகவன். திரைக்கதை, குமரேசன், ஒளிப்பதிவு காசிநாதன், இயக்கம், ஓ.என்.ரத்னம்.
Quote:
வாணி ராணி மெகா தொடரில் ராதிகாவுக்கு ஜோடியானார் சின்னத் திரை நடிகர் பப்லு. ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய மெகா தொடர் வாணி ராணி. திறமையான வக்கீல் வாணி, அப்பாவி தங்கை ராணி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ராதிகா. வாணியும் ராணியும் பூமிநாதன், சாமிநாதன் என இரட்டையர்களுக்கு வாழ்க்கைப்படுகிறார்கள். இவர்களில் வாணி மிகவும் புத்திசாலி, நன்கு படித்தவள், ராணியோ படிக்காதவள் என்றாலும் குடும்பத்தை நிர்வகிப்பதில் படு கெட்டிக்காரி. ஒற்றுமையாக இருக்கும் இந்த கூட்டுக்குடும்பம் ஒரு நாள் உடைகிறது. ஏன் இந்த விரிசல், எப்படி ஒற்றுமையானார்கள்? என்பதுதான் வாணி ராணியின் கதைச் சுருக்கம். ராதிகாவுக்கு ஜோடியாக வேணு அர்விந்த், பப்லு நடிக்கின்றனர். ரவிகுமார், புவனா, அருண் என ராதிகாவின் வழக்கமான ஆர்டிஸ்ட்களும் உண்டு. ஓ என் ரத்னம் இயக்குகிறார். தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக ராதிகா பணியாற்றுகிறார். சன் டிவியில்
Quote:
திங்கள் முதல்வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் வாணிராணி. நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த தொடரில் வேணு அரவிந்த், பப்லு, ரவிகுமார், புவனா, அருண், விக்கி, சதீப், நிகிலா ராவ், பேபி நேஹா ஆகியோர் சக நட்சத்திரங்கள். அன்றாடம் பல வீடுகளில் நடக்கும் யதார்த்தமான குடும்பச்சண்டைகளும், சுவாரஸ்யங்களுமே தொடரின் கதைக்களம். சாமிநாதன்-பூமிநாதன் இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்கள் அக்கா-தங்கையான வாணி- ராணியை மணந்து கொள்கிறார்கள். சகோதரிகள் இருவருக்கும் புகுந்த வீட்டில் நிகழும் சிக்கலே கதை. ஒளிப்பதிவு: காசிநாதன். கதை: ராடன் மீடியா. திரைக்கதை: குமரேசன். வசனம்:பா.ராகவன். இயக்கம்: ஓ.என்.ரத்னம். ஆக்கத்தலைமை: ராதிகா சரத்குமார்.
Quote:
வாணி ராணியில் கலக்கும் ராதிகா
சன் தொலைக்காட்சியில் ‘வாணி ராணி' புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதுவரை 6 எபிசோடுகள் முடிந்துள்ளன. சீரியல் நல்லா இருக்கே. இப்பதான் பழைய ராதிகாவை பாக்க முடியுது என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தொடரில் இரட்டை வேடத்தில் அக்கா தங்கையாக நடித்துள்ளார் ராதிகா. போல்டான கேரக்டரில் வாணியாகவும், வெகுளியான கதாபாத்திரத்தில் ராணியாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பு ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றால் அவரின் போல்டான கேரக்டர் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த தொடரில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் சீரியலை கொண்டு செல்கிறார்.
வேணு அரவிந்த், பப்லு அண்ணன் தம்பிகள். அவர்களின் மனைவிகளாக வாணி, ராணி. வாணிக்கு இரண்டு பையன்கள். தங்கை ராணிக்கு இரண்டு பெண் ஒரு பையன். கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அழகாக எடுத்துக்காட்டும் தொடர். இதில் அக்கா தங்கை பாசத்தை மையப்படுத்தியிருக்கிறார் ராதிகா. அண்ணன் வேணு அரவிந்துக்கு தம்பி பப்லு மீது அவ்வளவாக பிடிப்பு இல்லைதான் என்றாலும் அக்கா தங்கைகளின் பாசத்தில் ஒரு ஒட்டுதல் இருக்கிறது.
அக்கா தங்கச்சிங்க அண்ணன் தம்பிகளை கட்டிக்கிட்டா கூட்டு குடும்பமாகத்தான் இருக்கணுமா என்று மகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லும் ராணி, தனியாக இருக்கும் பொரியலை விட கூட்டாக குழைந்து இருக்கும் காய்க்குதான் ருசி அதிகம் என்று கூறி அப்ளாஸ் வாங்குகிறார்.
கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள், இதிலும் உண்டு. அதையும் சமாளித்து சந்தோசமாக குடும்பத்தை நடத்தும் இல்லத்தரசியாக ராணி மிளிர்கிறார்.
வழக்கறிஞராக வரும் வாணி, தன் குடும்பத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் எப்படி இருக்கவேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்துகிறார். தவறு செய்வது கணவனாகவே இருந்தாலும் அதை தட்டிக் கேட்கத் தயங்குவதில்லை.