Now you are making me worried :shaking:Quote:
Originally Posted by rangan_08
Printable View
Now you are making me worried :shaking:Quote:
Originally Posted by rangan_08
:lol:Quote:
Originally Posted by NOV
Don't worry NOV. You can always stand on your own legs :D .
இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.
மரணத்தை எண்ணி - ராகம் நாட்டை.
குருஷேத்ர யுத்த பூமியில் தன் சுற்றத்தார் அனைவரும் தன் எதிரணியில் நிற்பதை பார்த்து மனம் தளரும் அர்ஜுனன், அவர்களை எப்படி எதிர்த்து போராடுவது, அவர்களை எப்படி கொல்வது என்று மனம் பேதலித்து காண்டீபத்தை நழுவ விட, கிருஷ்ணா பரமாத்மா கீதோபதேசம் செய்யும் காட்சி. கீதை என்ற மாபெரும் தத்துவக் கடலை கண்ணதாசன் தனக்கே உரிய எளிய பாணியில் அழகாக விளக்கிட மெல்லிசை மன்னர்கள் இந்த வசன பாடலுக்கு பொருத்தமான இசையை கோர்த்திருக்க சீர்காழி கன கம்பீரமாய் முழங்கிய பாடல். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை கவியரசு
மானிடர் ஆத்மா மரணம் இல்லாதது
மறுபடி பிறந்திருக்கும்
மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்
என்று வெகு எளிமையாக புரிய வைத்திருப்பார்.
ஆசாபாசங்களை கடந்த பெரியவர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தை சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து. அதாவது அனைத்தும் பகவான் கிருஷ்ணனையே சேரும். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க வண்ணம் கண்ணதாசன்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான்
கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
என சொல்லும் போது அதை உள்வாங்கும் மனிதர்கள் தியேட்டரில் முழங்கும் கைதட்டல் ஒலியை நேரில் கேட்க வேண்டும். இதை சரியான வாய் அசைப்போடு என்.டி.ஆர் செய்து விட்டு பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதும் போது மொத்த பார்வையாளர்களும் யுத்தத்திற்கு தயாராகி விடுவார்கள். அற்புதமான பாடல்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.
படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.
இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா; நானும்
உன் பழி கொண்டேனடா
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
வஞ்சகன் கண்ணனடா.
பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.
மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.
மீண்டும் பேசுவோம்.
அன்புடன்
Murali,
Waiting for the Maharajan Song, though not in the film. One of the best song in Karnan
நேற்றைய சிங்கதமிழன் சிவாஜி நிகழ்ச்சியில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்துகொண்டு நடிகர்திலகத்துடனான தனது அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொண்டார். தான் இயக்கிய கவரிமான், ரிஷிமூலம் படங்களின் முக்கிய காட்சிகளைப்பற்றிச்சொல்லி அவற்றை ஒளிபரப்பியவர், மற்ற படங்களான தில்லானா, தெய்வமகன் போன்ற படங்களின் காட்சிகளையும் ஒளிபரப்பினார். வழக்கமாக தெய்வமகன் படக்காட்சியை ஒளிபரப்புவோர், மூன்று சிவாஜிகள் தோன்றும் அந்த 'ப்ளாங்க் செக்' காட்சியைத்தான் போடுவார்கள். நேற்று ஒரு மாற்றமாக கிளைமாக்ஸ் காட்சியை ஒளிபரப்பினார். ஆகா, அந்த கண்ணன் பாத்திரத்தில்தான் என்ன ஒரு பெர்ஃபார்மென்ஸ். அதற்கு ஈடு கொடுத்து பண்டரிபாய் செய்திருக்கும் அற்புதம். (தெய்வமகனிலும், கௌரவத்திலும் ஜெயாவும் உஷாவும் டூயட் கதாநாயகிகளாக இருக்கலாம். ஆனால் கதையின் நாயகி பண்டரிம்மாதான்).
எஸ்.பி.முத்துராமனும், அன்னை இல்லத்தின் விருந்தோம்பல் சிறப்புகளை எடுத்துரைத்தார். அதை இன்றளவும் அவரது வாரிசுகளான சகோதரர் ராம்குமாரும், இளையதிலகமும் மாறாமல் கடைபிடித்து வருவதையும் சொல்லிப் பெருமைப்பட்டார்.
ஷூட்டிங்கின்போது, தன்னுடைய காட்சியில்லாவிட்டாலும் செட்டை விட்டு வெளியில் போகாமல் மற்றவர்களின் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்துக்கொண்டிருப்பார். யாருடைய நடிப்பிலாவது திருத்தம் சொல்ல நினைத்தால் அதை அவர்களிடம் நேரடியாகச் சொல்லாமல், இயக்குனருக்கு மதிப்பு கொடுத்து, 'முத்து, அவரை இப்படி செய்யச்சொல்லேன். நன்றாக இருக்கும்' என்பார். இயக்குனர் 'பிரேக்' சொல்லாமல் செட்டை விட்டு வெளியே போகமாட்டார். அதுபோல 'பேக்-அப்' சொல்லாமல் வீட்டுக்குப்போக மாட்டார். (இப்போது படப்பிடிப்பில் ஐந்து நிமிடம் இடைவெளி கிடைத்தாலும், ஓய்வெடுக்க இரட்டை ஏ.சி. பொருத்திய 'காரவன்' வேன் கேட்போருக்காக இதைச்சொன்னார்). எவ்வளவுதான் முண்டியடித்து, 'இன்றைக்கு காலையில் சிவாஜி சாருக்கு முன்னால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப்போய்விட வேண்டும்' என்று ஓடினாலும், அதற்கு முன்னால் சிவாஜி சார் அங்கு இருப்பார் என்றார்.
மொத்தத்தில் ஒரு மாணவன் தன் ஆசிரியரைப்பற்றி பெருமையோடு பேசியது போலிருந்தது.
Murali-sar, just when other NT mythical/historical films threatens Karnan as my fav film of that genre, here comes a reminder why Karnan remains the greatest in that much forgotten gem of a genre. Superb re-creation of the song and the sequence in your writing. Thank you, sir.
Saradha mdm, thanks for the info.
:exactly:Quote:
Originally Posted by Murali Srinivas
Obviously, this is not a continuous shot. But throughout the song, NT will maintain the pain & helplessness on his face. Another acting lesson which explains " continuity ".
Tit bit from today's Ananda Vikatan :
Director Shankar's mother was a pregnant lady when she watched " Kungumam ", in which NT's character's name is Shankar. Immediately she decided that if it happens to be a boy child, he should be named after this character. And, yes, it was a boy and here we have Director Shankar.
Whenever this mother calls her son by his name, will she not be reminded about NT and his character in Kungumam.
Now, this is what I call a real tribute.
Thanks Rakesh, Bala and Mohan. System was down for couple of days and so couldn't reply or continue.
Bala,
Would write about it.
Regards
படத்தில் இடம் பெற்ற ஆனால் எழுத விட்டு போன பாடல்.
மன்னவர் பொருள்களை கைக் கொண்டு நீட்டுவார்.
அரசவையில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று. கர்ணனின் வள்ளல் தன்மையை விளக்கும் பாடல். வழக்கம் போல் டி.எம்.எஸ். மெருகு படுத்தியிருப்பார். உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல்.
படத்தில் இடம் பெறாமல் ஆனால் மக்கள் மனதில் இடம் பெற்ற பாடல்.
மகாராஜன் உலகை ஆளலாம் - ராகம் கரகரப்ரியா
படத்தில் இடம் பெறாமல் போனாலும் ஏராளமான மக்கள் மனதில் நிரந்தரமாக தங்கியுள்ள பாடல். இந்த பாடலை எப்படி விட்டார்கள் என்பது புரியாத புதிர். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பேன். அதிலும் நடிகர் திலகம் - தேவிகா ஜோடி எனும் போது பாடல் காட்சி மிக பிரமாதமாக வந்திருக்கும். நடிகர் திலகத்தின் ஸ்டைல்-க்கு இந்த பாடல் மிக பொருத்தமாக அமைந்திருக்கும். அதிலும் சில வரிகள்
பாதத்தில் முகம் இருக்கும்
பார்வை இறங்கி வரும்
வேகத்தில் லயித்திருக்கும்
வீரம் களைத்திருக்கும்
வரும் போது நடிகர் திலகம் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கும்.
ஒரு சில படங்களில் பதிவு செய்யப்பட்ட நல்ல பாடல்கள் இடம் பெறாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். உதாரணத்திற்கு இரத்த திலகம் படத்தில் தாழம்பூவே தங்க நிலாவே, வசந்த மாளிகையில் அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன போன்றவற்றை குறிப்பிடலாம். கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு தரம் ஒரே தரம் பாடலாவது சுமதி என் சுந்தரியில் இடம் பெற்றது. மேற் சொன்ன பாடல்கள் வரவே இல்லை. அந்த வரிசையில் மகாராஜன் உலகை ஆளலாம் முதலிடத்தில் இருக்கிறது.
ஒரு முறை எம்.எஸ்.வி அவர்களை பற்றி இளையராஜா சொல்லும் போது மகாராஜன் உலகை ஆளலாம் பாடல் ஒன்று போதும். தமிழ் திரை இசை இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும் என்றார். அதுதான் இந்த பாடலின் வெற்றி.
அன்புடன்