டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவுகள் நம் அனைவருடைய எண்ண ஓட்டத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளன. தாங்கள் கூறிய ஒவ்வொரு நண்பரையும் மறக்க முடியாது. பாம்குரோவ் சந்திரசேகர் தற்போது தஞ்சாவூரில் உள்ளார் என அறிகிறேன். மதுரையில் நடந்த சிலை திறப்பு விழாவின் போது அவரை சந்தித்து மிகவும் மகிழ்வுற்றேன். கோவை சேது இன்னும் மற்ற நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். அதேபோல் மந்தவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், இவர்களையெல்லாம் நீண்ட நாட்களாயிற்று பார்த்து. சேப்பாக்கம் பார்த்த சாரதி அவர்களை நடுவில் அமெரிக்க தூதரகத்தில் பார்த்தேன். அதற்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனந்த் அவர்கள் சமீபத்தில் தன் மகனுடைய திருமணத்தை நடத்தினார். அவரால் சந்திக்க முடிந்த அனைத்து ரசிக நண்பர்களையும் அழைத்திருந்தார்.
மேலும் சில ரசிகர்கள் அவ்வப்போது சாந்தி திரையரங்கில் சந்தித்து வருகின்றனர். இது அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்பது மிகச் சிறப்பாகும்.
மேலும் நம்முடைய குமாரும் கணேசனும் இணைந்து இதயராஜா புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். தாங்களும் பார்த்திருக்கலாம். அவர்கள் வைத்த பேனர் இன்னும் சாந்தியில் உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட சிகரம் நம்முடைய பம்மலார் தான். சிறு பிராயத்திலிருந்தே வர ஆரம்பித்து அனைத்து ரசிகர்களிடமும் மிக விரைவாக பரிச்சயம் ஆனவர். சொல்லப் போனால் பம்மல் ஸ்வாமிநாதனைத் தெரியாதவர்களே சிவாஜி ரசிகர் வட்டத்தில், குறிப்பாக சாந்தி தியேட்டர் ரசிக நண்பர் வட்டாரத்தில் இருக்க முடியாது என்கிற அளவிற்கு பிரபல்யமானவர்.
இன்னும் ஏராளமான பசுமையான நினைவுகள் உள்ளன.
வெளியூரிலிருக்கும் தங்களைப் போன்ற ரசிகர் நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வரும் வாய்ப்பும் நேரமும் அமையும் காலத்தில் நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அப்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அன்புடன்