டியர் பார்த்தசாரதி சார்,
1954ம் ஆண்டு மட்டுமல்ல தன்னுடைய திரையுலக வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகளைக் குவித்தவர் நடிகர் திலகம். அதற்கு நாம் அவ்வப்போது காணும் விளம்பரங்களே சான்று.
அன்புடன்
Printable View
டியர் பார்த்தசாரதி சார்,
1954ம் ஆண்டு மட்டுமல்ல தன்னுடைய திரையுலக வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகளைக் குவித்தவர் நடிகர் திலகம். அதற்கு நாம் அவ்வப்போது காணும் விளம்பரங்களே சான்று.
அன்புடன்
டியர் சதீஷ்,
தாங்கள் தாயகம் வந்துள்ளது பெரு மகிழ்வூட்டுகிறது. தங்களை சந்திக்க ஆவலாயுள்ளோம். மதுரையில் தியாகம் வெளியீட்டு செய்தி இனிக்கின்றது. விரைவில் சென்னையில் எதிர்பார்ப்போம்.
சொர்க்கம் நல்ல பிரதியுடன் விரைவில் தமிழகமெங்கும் வலம் வர உள்ளது. அதை வெளியிடுவோர்க்கு நமது வாழ்த்துக்கள்.
தங்களுக்கு ஹம்ஸத்வனி பதில் கடிதம் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பாராட்டும் அதில் பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்தமைக்கு மற்றொரு பாராட்டும் உரித்தாகட்டும். நம் அனைவர் சார்பாக தெரிவிக்க தங்களிடம் வேண்டுகிறேன்.
அன்புடன்
டியர் பாலகிருஷ்ணன்
தாங்கள் அளித்துள்ள இணைப்புகளுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
அனைவருக்கும் என்னால் ஓரளவு முடிந்த வரையில் நன்றி, பாராட்டுப் பதிவிட முடிகிறது.
ஆனால் பம்மலாருக்கு...
எப்படிப் பாராட்டுவது, என்ன சொல்லிப் பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது, வார்த்தைகள் வர மறுக்கின்றன, மொழி தடுமாறுகிறது,
சசிகுமார் நினைவாக இட்ட படங்களைச் சொல்வதா,
அன்னை ராஜாமணி நினைவினை நெஞ்சம் நெகிழும் வகையில் பகிரந்து கொண்டதைச் சொல்வதா,
மருத நாட்டு வீரன் படங்களைச் சொல்வதா,
தூக்குத் தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், மருத நாட்டு வீரன், தாயே உனக்காக, தவப் புதல்வன் விளம்பர நிழற் படங்களைப் பாராட்டுவதா,
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் என்ற மெல்லிசை மன்னரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
இருந்தாலும் சம்பிரதாயத்திற்காகவாவது, ஏதாவது சொல்ல வேண்டுமே...
இந்த மூன்றெழுத்துக்கள் தான் அவசரத்திற்குத் துணை புரிகின்றன.
நன்றி.
அன்புடன்
பொம்மை மாத இதழில் செப்டம்பர் 1966 இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...yeBommaiAd.jpg
தாயே உனக்காக திரைக்காவியத்தின் மற்றொரு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ewspaperad.jpg
தவப்புதல்வன் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...athuklakad.jpg
மருத நாட்டு வீரன் படப்பிடிப்பிற்காக பனாலா என்ற இடத்திற்கு சென்ற போது அங்கு நடிகர் திலகம் பங்கேற்ற நிகழ்ச்சியின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...panalasnap.jpg
பார்க்கப் பார்க்கத் திக்ட்டாக தெள்ளமுது, ஸ்டைல் சக்கரவர்த்தியின் சூப்பர் தோற்றம், நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து சாவகாசமாக உண்டு உறங்கும் சௌந்தர ராஜனின் குரல், தேனினும் இனிதான வெங்கட்ராமன் அவர்களின் மெட்டமைப்பு, கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க வைக்கும் பாடல், மருத நாட்டு வீரன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...
இதுவரை பார்த்திராதவர்கள் இப்பாடலை மறுபடியும் முதலிலிருந்து பார்ப்பார்கள் என்பது திண்ணம். இதோ நம் பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE
அன்புடன்
[இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.]
அன்பு சந்திரசேகர் சார்,
தங்களுக்கு என் இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசீர்வதங்களுடன் நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்
உங்கள் அன்பு,
நெய்வேலி வாசுதேவன்.