-
-
[QUOTE=mr_karthik;909096]அன்புள்ள பம்மலார்,
இன்று நம்மிடையே அண்ணனும் இல்லை, 'அண்ணி'யும் இல்லையென்ற உண்மை மனதைத் தாக்குகிறது.
why are you refering Devika as 'anni?'
-
Dear Vankv sir,
டைரக்டர் திரு தேவதாஸ் (கனகாவின் அப்பா) தூரத்து உறவில் எனக்கு அண்ணன் முறையானவர். அந்த வகையில் திருமதி தேவிகா "எங்க அண்ணி".
(தமிழ் அகராதி பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தால் பாருங்கள். அதில் 'கார்த்திகேயன்' என்ற பெயருக்கு 'ஒருவகை விலாங்கு மீன்' என்று அர்த்தம் போட்டிருக்கும்)
-
அன்புள்ள பம்மலார் சார்,
தங்கள் கனிவான பாராட்டுக்கு நன்றி. நமது திரி 125 பக்கங்களை வெற்றிகரமாகக்கடந்து வீறுநடை போடுவதை முன்னிட்டு, கலைமேதையின் 125 படத்தின் அருமையான விளம்பர ஆவணங்களை பதித்து, அவற்றையும் எனக்கு 'டெடிகேட்' செய்த தங்கள் தூய உள்ளத்துக்கு நன்றி.
பத்திரிகையாளர் எஸ்.வி.சம்பத்குமார் அவர்களின் கட்டுரை மூன்று பக்கப்பதிவுகளும் மிக மிக அருமை. பத்திரிகையாளர்களிடம் நடிகர்திலகம் கொண்டிருந்த மதிப்பையும் மரியாதையையும், அன்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. 'நடிகர்திலகம்' பட்டம் அளிக்கப்பட்ட விதமும், அதற்கு நடிகர்திலகம் அளித்த அடக்கமான பதிலும் மனதைத்தொட்டன.
சூப்பர் பதிவுகளுக்கு சுகமான நன்றிகள்.
-
Thiruvilayadal is one of the amazing NT'S movies.It should be released whole world at the same time.If it happen,one more time that movie will be celebrated as a silver jubilee movie.It will be a world record in world cinema industry.After Karnan release people are eagerly waiting to see NT'S films such as Thiruvilayadal,Veerabandiya kattabomman,Thillana mohanambal,Vasanthamaligai,Saraswathi sabatham,Sivantha man.They want to show that NT'S films to their children.
So,If NT'S films are released perfectly,NT'S name and fame will spread whole world.Now a days NT'S films are used wrongly.In order to earn money somebody is handling his movies,way of wrongly.
We would like to tell them one thing,if you release NT'S films perfectly in multiplexes,people are ready to see that movies,even youth also.Because NT'S films are lesson for all shorts of people.
-
220 MINUTES ....GO AHEAD ............
HERO OF THIS THREAD ........
ON BEHALF OF MAKKAL THILAGAM THREAD AND MAKKAL THILAGAM FANS PROUDLY WISHES OUR PAMMALAR SIR
http://i50.tinypic.com/e8x1me.gif
21.9.2012.
-
டியர் பம்மலார் சார்,
வினோத் சார் முதல் வாழ்த்துக் கூறி தங்கள் பிறந்த நாளை சிறப்பாக அமைத்து விட்டார். அவருக்கு நன்றிகளும் உங்களுக்குப் பிறந்த நாளும். தங்களுக்குப் பிறந்த நாள் பரிசாக இப்பாடல் இணையத்தில் முதன் முதலாக -
http://youtu.be/v1GTxKzmgNQ
தீவிர சிவாஜி ரசிகரான தாங்கள் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த விலை மதிப்பற்ற பொக்கிஷம். இந்நாளில் தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக்கள். தாங்கள் நூறாண்டு காலம் வாழ்க என அன்புடன் வாழ்த்துகிறேன். நூறாண்டு காலம் வாழ்க திரைப்படப் படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் சிறப்பம்சம் கவியரசரின் வரிகள் சிவாஜி எம் ஜி ஆர் இருவருக்கும் ஒரு சேர பொருந்தி வருவதே ஆகும். இருவரும் கலையின் மூலம் ஆற்றிய சமுதாய நலத் தொண்டினையும் விளக்குவது இப்பாடலின் சாராம்சம். இந்தப் பாடலை இணையத்தில் தரவேற்றி விட்டு இங்கு வந்து பார்த்தால் வினோத் சாரின் பதிவு. என்ன பொருத்தம் உண்மையிலேயே வியந்து போனேன். தங்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவே இப்பாடலை நான் தரவேற்றியது போல் அமைந்து விட்டது.
இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் தயாரித்து இயக்கிய படம் நூறாண்டு காலம் வாழ்க. இசையமைப்பு திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்.
எனவே தானாகவே இப்பாடல் தங்களுக்கு அர்ப்பணிப்பாக அமைகிறது மட்டற்ற மகிழ்ச்சி.
அன்புடன்
-
Dear Pammalar Sir,
ADVANCE HAPPY BIRTHDAY
-
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவாமி!
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
வாழ்க நீங்கள் பல்லாண்டு! அவை அனைத்தும் நடிகர் திலகத்தின் சாதனை சரித்திரத்தின் புகழ் பாடும் பல்லாண்டு!
அன்புடன்
-
Pirandha naal vazhthukkal Pammalar sir