Originally Posted by 
RavikiranSurya
				 
			Babu - மறு வெளியீடு அடிக்கடி..அடிக்கடி வரவில்லை என்றாலும் அவ்வப்போது தலைநீட்டும் திரைப்படம். 
தலைனீட்டும்பொது எப்போதும் பல அரங்கு நிறைவு விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் படம். சில வருடங்களுக்கு முன்னர் மறுவெளியீடு கண்டபோது வெள்ளி மாலை, சனிகிழமை இரவு, ஞாயிறு மேட்டுணீ மற்றும் மாலை காட்சி அரங்கு நிறைவு கண்டது ! 
ஒரு சில நடிகர்கள் படங்கள் போல் பாபுவோ மற்றும் நடிகர் திலகத்தின் நல்ல தரமுள்ள படங்களோ அடிக்கடி அடிக்கடி வருவதில்லை என்றொரு சொற்றொடர் நிலவி வருகிறது ! 
நடிகர் திலகத்தின் படங்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப technology transformation செய்ய விநியோகஸ்தர்களால் விரும்பப்படும் முதல் முதன்மையான படங்களாகும். 
காரணம் பல ...நல்ல குடும்பகதைகள். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்ககூடிய பல படங்கள் நடிகர் திலகத்துடயது மட்டுமே என்றால் அது மிகையாகாது ! மேலும், தமிழக கலாசாரம், பண்பு, அன்பு, பாசம், பக்தி, இப்படி பல விஷயங்கள் அவர் படங்களில் உள்ளதுதான் காரணம். தை சிறந்த முறையில் மக்களிடம் வெளிபடுத்தும் திறன் அவர் ஒருவரை தவிர மற்ற எவருக்கும் இருக்குமா என்றால் இருக்காது என்பது தான் பெரும்பான்மையானவர்கள் பதிலாக இருக்கும். 
நடிகர் திலகத்தின் படங்கள் பெரும்பாலும் என்றுமே முதல் ரிலீஸ் சூப்பர் ஹிட் ஆகி நல்ல ஒரு தொகையை வசூல் செய்வதால் தயாரிப்பாளர் அல்லது வெளியிடும் விநியோகஸ்தர் படங்களை கை மாற்றி பலருக்கு விற்று விடுகின்றனர் ..
வாங்கியவர்கள் வெளியிடாமல் வைத்திருந்தால் அதற்க்கு நடிகர் திலகம் பொறுப்பேற்க முடியுமா ?