அன்புள்ள செல்வகுமார் சார்
முதற்க்கண் இப்போது MGR அவர்களின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் ! காரணம் இந்த வெற்றி அவருக்கு மட்டுமே சொந்தமான வெற்றி. அவரின் ஆன்மாவிற்கு தெரியும் பிரதம மந்திரி என்பது சாதாரண பதவி அல்ல என்று. ஆகையால் தான் தமிழகத்தில் பேரு வெற்றி பெறச்செய்து மத்தியில் யார் உதவியும் குறிப்பாக இப்போதைய தமிழக அரசியல்வாதிகள் உதவிகள் இல்லாமல் ஒரு தனி ஆட்சி மத்தியில் இருக்கும்படி பார்த்துகொண்டார்.
தாங்கள் குறிப்பிட்ட மற்ற நடிகர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. காரணம் அவர்களுக்கு எள்ளளவும் நேர்மையோ, கொள்கையோ இல்லை. ஆனால் நடிகர் திலகம் அவர்கள் அவர்களை போல அல்ல ! தாங்கள் நடிகர் திலகம் பற்றி நன்கு அறிந்தவர் என்று நினைகிறேன், நம்புகிறேன்.
1) திரு MGR அவர்கள் கட்சி ஆரம்பித்த சூழ்நிலை வேறு. நடிகர் திலகம் கட்சி ஆரம்பித்த சூழ்நிலை வேறு. திரு. MGR அவர்கள் சந்தித்ததைபோல ஒரு சூழ்நிலை சிவாஜி அவர்கள் சந்தித்திருந்தால் இது போல ஒரு பதிவை நாங்களும் போட்டிருப்போம் இன்று.
2) திரு.MGR அவர்கள் திமுக வில் மெம்பெர் மற்றும் 19 வருடம் அந்த கட்சியில் பொறுப்புள்ள பதவியில் இருந்தவர். மிகவும் பலமான ஒரு அஸ்திவாரம் கட்சி அளவில் 19 வருடம் பெற்றவர்.
ஆனால் நடிகர் திலகம் அவர்கள் பிரசாரங்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு நடிகர். எந்த பதவியோ பொறுப்போ எந்த கட்சியிலும் வகிக்காதவர். காமராஜர் அனுதாபி, காங்கிரஸ் அனுதாபி அவ்வளவுதான்.
தி மு க வில் சிவாஜியின் வளர்ச்சி கண்டு ஜீரணம் செய்து கொள்ள முடியாத திமுக வின் முக மற்றும் கோ. செய்த சதியால் அவரே வெளியில்வந்தார் ....அந்த நேரத்தில் திமுக விற்கு முற்றிலும் பரிச்சயம் அல்லாத காங்கிரஸ் அனுதாபியாக இருந்த மக்கள் திலகம் அவர்களை தி முக, சிவாஜிக்கு எதிராக கொண்டுவந்ததை நாடு நன்கு அறியும். MGR அவர்களும் 19 வருடம் திமுக வில் பொறுப்புள்ள பதவி வகித்தவர். 1970 களில் முக வுக்கும் MGR உக்கும் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியபோது, தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இது வரலாறு !
3) திரு சிவாஜி கணேசன் அவர்கள் தோற்றதற்கு காரணம் திரு MGR அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக அப்போதைய, மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திரு MGR அவர்களின் மனைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் கட்சியுடன், கூட்டணி வைத்ததால்தான் !
தோற்றது சிவாஜி அல்ல ...திரு MGR அவர்களுடைய legal heir தான் ! சந்தர்பவாத அரசியல் சிவாஜி கணேசன் அப்போது செய்திருந்தால், இப்போதைய கதையே வேறு !
4) மக்கள் செல்வாக்கு இல்லாமல் அவர் தோற்கவில்லை. காமராஜர் கூட தோற்றார் ..அதற்காக அவருக்கு செல்வாக்கில்லை என்றாகிவிடாது அல்லவா ? நம் தமிழ்மக்கள் குணம் நாம் அனைவரும் அறிந்ததே...! இந்த ஆட்டு மந்தைகள் அடுத்த தேர்தலில் திமுக வை ஜெயிக்கவைப்பார்கள் அதை நாம் பார்க்கதான் போகிறோம்.
RKS