மயக்கும் மாலைப் பொழுதே நீ போ.. போ… –
நினைக்கும் போதே இனிக்கும் பல்லவி… கூண்டுக்கிளி திரைப்படத்திற்காக கவிஞர் விந்தன் அவர்கள் எழுதிய இந்தப் பாடல்… இருபெரும் கதாநாயகர்கள் – எம்.ஜி..ஆர்., சிவாஜி இருவருக்குள் எவர் இடம் பெறும் பாடலாய் திரையில் தருவது என்கிற கேள்வி எழவே, தவிர்க்க வேண்டிய பாடலானது. அப்படத்தின் இயக்குனர் டி ஆர். ராமண்ணா அவர்கள் அடுத்து இயக்கிய குலேபகாவலி திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். – ஜி. வரலட்சுமி நடிப்பில் இப்பாடலைப் பயன்படுத்தினார்கள் என்பது தகவல்.
மென்மை மட்டுமே வார்த்தைப் பூக்களாய் விரிந்து கிடக்கும் இப்பாடலில் இனிமை முழுமையாய் பரவிக் கிடைக்கிற அதிசயம் நம்மை இப்பாடலில் அடிமையாக்குகிறது பாருங்கள். குலேபகாவலி திரைப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றிருந்தாலும் கூண்டுக்கிளி தந்த பாடல் இது என்பதால் இதன் இசை திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்களையே சாரும். குரலில் அமுதம் பொழியும் இரண்டு குயில்கள் ஜிக்கி, ஏ.எம்.ராஜா …
மகுடியின் முன் நாகங்கள் போல் ..புன்னாகவராளி ராகமோ என்று நம்மை திகைக்க வைக்கும் ஒரு மயக்கத்தை இசை அமைப்பாளர் இப்பாடலில் கையாண்டிருக்கிறார். இரவின் மடியில் கேட்க இதைவிட இனிமையான பாடல் எங்கே?
பார்த்திபன் கனவிற்காக கவிஞர் விந்தன் எழுதிய “இதய வானில் உதய நிலவே எங்கே போகிறாய்” .. அடடா.. இதே போல் இனிமையான கானம் அல்லவா? பிறகு எப்படி.. இந்தக் கவிஞர் பிரபலம் ஆகவில்லை என்கிற ஏக்கம் பற்றிகொள்கிறது.
கனிந்த சொற்களின் கவிதை மொழியினை கைவரப் பெற்றவர் இன்னும் இன்னும் பல இனிமையான பாடல்களை எழுதியிருக்கலாமே..
ஜி. வரலட்சுமி அவர்களின் பேசும் விழிகளும் மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்பும் இன்பம் சேர்க்கின்றன.
ஆஆ… ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே
போடும் போர்வை தன்னாலே
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
courtesy - vallamai -காவிரி மைந்தன்