டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
மிகச்சரியாகச்சொன்னீர்கள். நமக்குத்தான் கொடுப்பினையில்லை.
அப்படி விடுபட்டுப்போன இன்னொரு அருமையான பாடல்Quote:
Originally Posted by Murali Srinivas
'தென்றல் வரும் சேதி வரும்
திருமணம் பேசும் தூது வரும்' (பாலும் பழமும்)
வசந்தமாளிகையில் இடம்பெறாமல் போன 'அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன' பாடல் பற்றிச் சொல்ல வேண்டும்.
ஒருமுறை பிலிமாலயா இதழில் பாலமுருகன் சொல்லியிருந்தார். இப்பாடல் மலைவாழ் மக்களிடையே சிவாஜியும் வாணிஷ்ரீயும் ஆடிப்பாடும் காட்சிக்காக எழுதி இசையமைக்கப்பட்டதாம். பாடலின் இடையே காதலர்கள் பாடிக்கொள்வதுபோன்ற வரிகள் இடம் பெற்றிருந்ததாம். ஆனால் அந்தக்காட்சி வரும் சமயத்தில் சிவாஜிக்கும் வாணிக்கும் இடையில் காதல் உண்டாகியிருக்கவில்லை (அதுவரை 'இளைய ஜமீன்தார் - செக்ரட்டரி' உறவுதான்). சிவாஜிக்காவது வாணி மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் வாணிக்கு அப்படி ஒரு எண்ணமே அதுவரை வந்திருக்காது. அந்த சமயத்தில் இந்தப்பாடலை வைத்தால் அபத்தமாக இருக்கும் என்பதாலும், ஏற்கெனவே சிவாஜி பற்றி வாணி இப்படிப்பட்ட காதல் வரிகளைப்பாடிவிட்டால், பின்னர் 'வசந்தமாளிகை கண்ணாடிக்காட்சி'க்கு ("என் இதயத்தில் குடியிருக்கும் அந்த தேவதையைப்பார்க்க வேண்டுமா?. உள்ளே சென்று பார். அங்குதான் அவள் இருக்கிறாள். என் இதயமும் இருக்கிறது") அவ்வளவு எஃபெக்ட் இருக்காது என்று கருதியதாலும், எல்லோரும் முடிவு செய்து இப்பாடலை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வெறும் இசைக்கு ஆடுவதாகக் காட்டிவிட்டார்களாம்.
